நக்கீரன்
தமிழ்ச் சுற்றுச்சூழல் எழுத்தில் சமீப ஆண்டுகளாக அதிகக் கவனம் பெற்றுவரும் எழுத்தாளர். தன்வரலாற்றுப் பின்னணியில் அமைந்த ‘காடோடி’, முதன்மையான சுற்றுச்சூழல் நாவல்களில் ஒன்று.‘நீர் எழுத்து’, தமிழ்நாட்டின் ஈராயிரம் ஆண்டு கால நீர் வரலாற்றைப் பேசுகிறது. ‘சூழலும் சாதியும்’ பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய நூல். சுற்றுச்சூழல் செயல்பாடுகளும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த பேச்சும் பெரிதாக ஆழமற்றுள்ள இன்றைய சூழ்நிலையில், நம் மரபின் வேர்களையும் நவீனத்தின் கிளைகளையும் இணைப்பவராக இருக்கிறார்.