மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் புதைபடிவம் | மழைப் பாடகர்கள் 7

பன்னிமூக்கன்

பன்னிமூக்கன்

Updated on: 
2 min read

மிகச்சிறிய தவளையைப் பார்த்திருந்த எனக்குப் பெரிய தவளை இனங்களுள் ஒன்றைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது. கேரளம் மாநிலம் எழுத்தலைக் குகையைக் காண மறையூர் சந்தனக் காட்டுக்குள் சென்றிருந்தேன்.

வெகு தொலைவு மலையேறியதில் தாகம் தொண்டையை வறட்டியது. உடன் வந்த பழங்குடி ஒருவர் அருகிலிருந்த சிற்றோடைக்கு அழைத்துச் சென்றார். தூய்மையான குளிர்ந்த நீரைக் குடித்துவிட்டு, அருகிலிருந்த சிறு பாறை மீது அமரச் சென்றேன். அப்போது பாறைக்கு அடியிலிருந்து குப்பென்று ஏதோ பாய, நிலைதடுமாறி விட்டேன்.

பாய்ந்தது ஒரு பெருந்தவளை. அரைகிலோவுக்கு மேல் எடை இருக்கும். அவ்வளவு பெரிய கொழுத்த தவளையை அதுவரை நான் பார்த்ததில்லை. பின்னர்தான் அது இந்தியாவின் பெரிய தவளை இனமான Indian bullfrog (Hoplobatrachus tigerinus) என்று அறிந்துகொண்டேன்.

பொதுவாக மேற்குத் தொடர்ச்சி மலை ஒரு பல்லுயிர்ப் புதையல் களஞ்சியம். குறிப்பாக, அங்குள்ள சோலைக்காடுகள் தவளை இனங்களின் முதன்மையான வாழிடம். மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டும் இதுவரை இருநூறுக்கும் மேற்பட்ட தவளை வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் பல ஓரிட வாழ்விகள்.

Loading content, please wait...

X