சட்டரீதியாகத் தடை, விற்பனையில் குறைவில்லை | மழைப் பாடகர்கள் 4

சட்டரீதியாகத் தடை, விற்பனையில் குறைவில்லை | மழைப் பாடகர்கள் 4
Updated on: 
2 min read

தவளைக்கால் ஏற்றுமதிக்கு சீனா தடை விதித்த காலத்துக்கும் முன்பே இந்தியா விழித்துக்கொண்டது. சுற்றுச்சூழல் அக்கறை கொண்ட குரல்கள் இங்கு ஓங்கி ஒலித்ததால், 1986இல் ஏற்றுமதிக்குத் தடை விதிக்க அரசு முன்வந்தது. ஆனால், அதை உடனே நிறைவேற்ற முடியவில்லை.

காரணம், ஏற்றுமதிக் குழுமங்கள் உருவாக்கிய அழுத்தம். கடல்சார் பொருள்கள் ஏற்றுமதி ஆணையம், தவளைக்கால் வணிகம் குறித்த முதல் உலக மாநாட்டை 1986 ஏப்ரலில் கொல்கத்தாவில் நடத்தியது.

அது ஏற்றுமதிக்கு விதிக்கப்பட இருந்த தடையைத் தடுப்பதற்காகச் செய்யப்பட்ட ஒரு முன்தந்திரம். வழக்கம்போல ஏற்றுமதிக்கு ஆதரவாகப் பொருளாதாரக் காரணமே முன்நிறுத்தப்பட்டது. 1984-85ஆம் ஆண்டில் நடைபெற்ற 2,770 டன் தவளைக்கால் ஏற்றுமதியால் அன்றைய மதிப்பில் 7 கோடி ரூபாய் கிடைத்திருந்தது.

அதையே துருப்புச் சீட்டாக அந்த ஆணையம் பயன்படுத்தியது. அந்த ஆணையத்துக்குக் கடல்சார் பொருள்களே முதன்மை ஏற்றுமதி. நன்னீர் உயிரியான தவளைக்கால் ஏற்றுமதி, அதற்கு ஒரு துணை வணிகமே. எனவே, கூடுதல் வருமானம்தான் பாதிக்கப்படுமே தவிர முதன்மை வருமானத்துக்கு இழப்பு ஏதுமில்லை.

Loading content, please wait...

X