அனைத்துக்கும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புள்ளது | மழைப் பாடகர்கள் 2

அனைத்துக்கும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புள்ளது | மழைப் பாடகர்கள் 2
Updated on: 
2 min read

என்ன.. தவளையைச் சாப்பிடுவார்களா என்று அப்பாவியாகக் கேட்பவர்களுக்கு ஒரு சமையல் நூலைப் பரிந்துரைக்கிறேன். அது நீர்நில வாழ்விகள் குறித்த சமையல் குறிப்பு நூல்.

‘தி கலினரி ஹெர்பெட்டாலஜிஸ்ட்’ (The Culinary Herpetologist) என்னும் அந்நூலில் மொத்தம் 950 சமையல் குறிப்புகள் (Recipes) உள்ளன. அதில், தவளைகளைச் சமைப்பதற்கு மட்டுமே 193 குறிப்புகள் உள்ளன.

தவளைக்கால் உணவுக்கு உலகெங்கும் ‘செல்லப் பெயர்களும் இருந்தன. அதன் இறைச்சியின் சுவை, கோழி இறைச்சியின் சுவையுடன் ஒப்பிடப்பட்டது. ஆகவே தவளைக்கால் இறைச்சி, கோழி என்கிற பின்னொட்டுடன் அழைக்கப்பட்டது.

மேற்கிந்தியத் தீவுகளில் அதற்கு, ‘மலைக் கோழி’ என்று பெயர். சீனாவில் அது, ‘வயல் கோழி’. நம் கோவா நகரின் பெரிய உணவகங்களில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட அது ‘குதிக்கும் கோழி’ (Jumping Chicken) என்று அழைக்கப்பட்டது.

உலகில் சில நாடுகளில் மட்டுமே தவளை உணவாக இருந்துள்ளது. பல நாடுகளிலும் அதுவொரு தவிர்க்கப்பட்ட (Taboo) உணவே. இந்திய ஒன்றியத்தின் வடகிழக்கு மாநிலங்களில் இன்றும் அது சிறப்பு உணவாகக் கருதப்படுகிறது. தவளைக்கால்கள் சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறுகள் குணமாகும் என்கிற நம்பிக்கை சிக்கிம் மக்களிடையே நிலவுகிறது.

எப்படிப் பிரபலமானது?

தவளைக் கால்கள் ஓர் உலகளாவிய உணவாக மாறியதற்குப் பின்னே ஒரு வரலாறு உள்ளது. 1980களில் ஐரோப்பா கண்டத்தில் இருந்த பண்ணை மாடுகளுக்கு ‘மாட்டுப் பித்த நோய்’ (Mad Cow Disease) எங்கும் பரவியது. அதன் இறைச்சியை உண்டவர்களுக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டன.

சிலர் மரணமடையவும் செய்தனர். அதனால் பலரும் மாட்டிறைச்சி உண்பதைக் கைவிட்டு, மாற்று உணவை நாடத் தொடங்கினர். ஐரோப்பாவில் அதற்கும் முன்னரே தவளைக்கால் உணவாக இருந்துள்ளது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in