குறைந்த தவளைகள், பெருகிய பூச்சிகள்! | மழைப் பாடகர்கள் 3

குறைந்த தவளைகள், பெருகிய பூச்சிகள்! | மழைப் பாடகர்கள் 3
Updated on: 
2 min read

கடந்த அத்தியாயத்தில் கூறப்பட்ட கதை ஓர் அறிவியல் நூலை நினைவுபடுத்துகிறது. 1971இல் வெளியான, ‘த குளோசிங் சர்க்கிள்’ (The Closing Circle) என்கிற அந்நூலை எழுதியவர் பேரி காமனர்.

இவர் ஒரு மார்க்சிய சுற்றுச்சூழல் அறிஞர். இந்நூலில் ‘சூழலியலின் நான்கு விதிகள்’ என்கிற கருத்தாக்கத்தை அவர் முன்வைக்கிறார்.

இந்நான்கு விதிகளை நம் உயிர்க்கோளத்தைக் காக்கும் நெறிகள் என வலியுறுத்துகிறார். அதில் முதலாவது விதி நம் கவனத்துக்குரியது.

நாம் பார்த்த ஆப்ரிக்கக் கதையோடு முழுமையாகப் பொருந்துவது. அது, ‘அனைத்தும் அனைத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது’ என்பதே.

உலகில் வாழும் உயிரினங்கள் அனைத்தும், நாம் உட்பட ஒன்றையொன்று சார்ந்தே வாழ்ந்துவருகிறோம். இந்த உயிர்ச் சங்கிலியின் கண்ணிகளில் ஏதேனும் ஒன்று அறுபட்டாலும், அதன் விளைவு மற்றோர் இடத்தில் மெதுவாகவோ விரைந்தோ உணரப்படும்.

இதுதான் இயற்கையின் நியதி என்று விளக்குகிறார் பேரி காமனர். ஆப்ரிக்கக் கதையாகட்டும் பேரி காமனரின் சூழலியல் விதியாகட்டும் இவை எதையும் சீனர்கள் அன்று அறிந்திருக்கவில்லை. சீனர்களின் பாணியைப் பின்பற்றிய இந்தியர்களும் அறிந்திருக்கவில்லை.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in