ஆர்.சி.ஜெயந்தன்
‘முழு நேர உழைக்கும் பத்திரிகையாளர்’ ஆக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, கடந்த 30 ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கும் ஜெயந்தன் ஜேசுதாஸ், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலில் முதுகலைப் பட்டதாரி.
அச்சு, தொலைக்காட்சி, வானொலி, இணையம் என அனைத்து ஊடக வகைமையிலும் பணிபுரிந்த அனுபவ முதிர்ச்சி கொண்டவர். தற்போது ‘இந்து தமிழ் திசை’யின் ஆசிரியர் குழுவில் 12 ஆண்டுகளாகப் பயணித்து வருகிறார்.
அனைத்துத் துறைகள் குறித்தும் எழுதக் கூடியவர். மேம்பட்ட சினிமா ரசனையை முன்னெடுக்கும் சுவாரசியமான உள்ளடக்கத்துடன் வெள்ளிக்கிழமை தோறும் வெளிவரும் ‘இந்து தமிழ் திசை’யின் ‘இந்து டாக்கீஸ்’ பக்கத்தின் பொறுப்பாசிரியர்.
ஆர்.சி.ஜெயந்தன், திரை பாரதி, நோவா நதி ஆகிய பெயர்களிலும் எழுதி வருகிறார். வளர்ச்சிக்கான இதழியலில் தொடர்ந்து இயங்குவதில் முனைப்பு காட்டுபவர்.