

அந்த நாள் | படங்கள் உதவி: ஞானம்
நாடகத்தின் நிழலிலிருந்து விடுபடத் துடித்த தமிழ் சினிமா, மெல்லத் தன் இமைகளை உயர்த்தி 'காட்சி மொழி' எனும் தன்னுடைய பிறப்பின் நோக் கத்தைக் கண் நோக்கி நடந்த பயணத்தில் இன்று நாம் 50வது மைல்கல்லை எட்டியிருக்கிறோம்.
மேடையில் புகழ்பெற்ற கதைகளுக் கும் மிகை வசன நடிப்புக்கும் எண்ணிறந்த பாடல்களுக்கும் பின்னால் தலையசைத்து ஊர்ந்தபடி நடை போட்டது தமிழ் சினிமா. பின்னர் தன்னுடைய உண்மையான ஆன்மாவைத் தேடி மேற்கொண்ட பயணம் என்பதில், அதன் திரைமொழி வரலாற்றில் விடுபட்ட அவதானிப்பு களை மட்டுமல்ல; வெகுஜன ரசனையிலும் அடுத்த தலைமுறைப் படைப்பாளி களிடமும் அதன் பரிமாணங்கள் ஏற்படுத்தி வந்த தாக்கங்களையும் பதிவு செய்திருக்கிறது இத்தொடர்.
எஸ்.பாலசந்தரின் கேமரா கண்களும் இசை ஞானமும் தமிழ் சினிமாவைக் காட்சியின் கலையாகக் கௌரவம் செய்த பின்னர்தான் அது மீண்டும் புதிதாய் பிறந்தது. அவர் தனது திரைமொழி வழியாகத் தமிழ்ப் பார்வை யாளர்களை ஈர்க்கத் தொடங்கிய தருணங்களைச் சற்று விரிவாகவே கூர்ந்து நோக்கினோம். அவரது சமகாலத்தின் முக்கியமான இரு படைப்பாளி களுடன் அவரை ஒப்பிட்டுப் பார்த்து அலசும் இத்தொடரின் முதல் பாக முடிவில் நின்று கொண்டிருக்கிறோம்.
ஐம்பதுகள் தொடங்கி எழுபதுகள் வரையிலான இரு பத்தாண்டுகளில் புகழ்பெற்று விளங்கிய படைப்பாளி களில் ஏ.பீம்சிங்கும் சி.வி.ஸ்ரீதரும் மக்களின் இயக்குநர்களாக விளங்கி னர். ஆனால், தமிழ் சினிமா தன்னிடம் இருந்த உள்ளடக்க மற்றும் தொழில் நுட்பப் போதாமைகளை மீறி, எஸ்.பி.என்கிற கலைஞனின் கற்பனைத் திறத் தைக் கொண்டு உலகத் தரத்துக்கு உயர முயன்றது.
அறுபதுகளில் பீம்சிங், ஸ்ரீதர், எஸ்.பாலசந்தர் ஆகியோரின் மூன்று படைப்புகளை எடுத்துக் கொள்வோம். பீம்சிங் திரைக்கதை எழுதி இயக்கிய ‘படிக்காத மேதை’ (1960), ஸ்ரீதர் எழுதி இயக்கிய ‘மீண்ட சொர்க் கம்’ (1960), எஸ்.பாலசந்தர் எழுதி, இயக்கிய ‘பொம்மை’ (1964) ஆகிய மூன்றுமே வெற்றிப் படங்கள் தாம்.
உலகப் பொதுமை
இந்த மூன்று படங்களையும் ‘சப்-டைட்டில்’ இல்லாமல், தமிழ்ப் பார்வை யாளர்கள் இல்லாத ஒரு சர்வதேசப் படவிழாவில் திரையிட்டால், ‘பொம்மை’ படம் மட்டுமே மிக எளிதாகப் புரிவது மட்டுமின்றி, அதன் கதாபாத்திரங்க ளுடைய உணர்வுகள், கதை கொண் டுள்ள ‘மைய உணர்ச்சி’யான மர்மம் உருவாக்கும் பதற்றம் ஆகியன மொழிகடந்த பார்வையாளர்களைத் தொற்றிக் கொள்ளும்.
‘பொம்மை’ தமிழ்நாட்டின் கலாச்சார அடையாளங்களையும் கதா பாத்திரங்களையும் கொண்டிருந்தாலும் ‘நண்பர்களின் திரைமறைவு துரோகம், பூமாரங் ஆக திரும்பி வந்து தாக்கும்’ என்கிற அப்படத்தின் கதையும் காட்சி மொழியும் இசையும் செய்யும் மாயத்தை உணர, பார்வையாளருக்கு அவருடைய மொழியோ, சப்-டைட்டிலோ அவசியமில்லை என்கிற உலகப் பொதுமைக்குள் ‘பொம்மை’யின் திரை மொழி இருப்பதை மறுக்க முடியாது.
பீம்சிங், ஸ்ரீதர் அளவுக்கு எஸ்.பால சந்தர் வணிக வெற்றியை ருசித்தவர் அல்ல. கையாண்ட திரைமொழி யின் அடிப்படையில் மூவருமே மூன்று துருவங்கள்தாம். ஒருபுறம் உணர்ச்சிகர மான குடும்பக் கதைகளுடன் பீம்சிங், மறுபுறம் காதலையும் நவீனத்தையும் கவித்துவமாகச் சொன்ன ஸ்ரீதர்.
இவர்களுக்கு நடுவே காட்சி மொழியின் அதிகபட்சச் சாத்தியங்களையும் கதையை நகர்த்திச் செல்வதில் தர்க்கம் நழுவாத திருப்பங்களையும் கொண்ட திரைக்கதை, இசை உள்ளிட்ட மற்ற கலை அம்சங்கள் துருத்தித் தெரியா மல் அவற்றைக் கதையைத் தாங்கிப் பிடிக்கும் அல்லது நகர்த்தும் கருவிக ளாகக் கையாண்டதில் கற்பனைத் திறன்- தொழில்நுட்பம் இரண்டையும் இணைத்த ‘கலை வித்தக’ராக (Techno -artist) எஸ். பாலசந்தர் விளங்கினார்.
பீம்சிங் | ஸ்ரீதர் | எஸ்.பாலசந்தர்