Published : 07 May 2023 04:03 AM
Last Updated : 07 May 2023 04:03 AM
கோவை: ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படம் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.
கோவை சரவணம்பட்டியில் உள்ள திரையரங்கில் படத்தை பார்த்த பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப் படத்தில் உண்மைச் சம்பவங்கள் காட்டப்பட்டுள்ளன. குறிப்பாக, காதல் என்ற பெயரில் நடக்கும் மோசடி குறித்து கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பெரிதும் உதவும்.
அனைத்து திரையரங்குகளிலும் திரையிட வேண்டும். திண்டுக்கல், தேனி, தாராபுரம், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் ‘லவ் ஜிகாத்’ என்ற பெயரில் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
இதனால் தாராபுரத்தில் காவல் ஆய்வாளர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறு அவர் தெரிவித்தார். மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார், மாநில செயலாளர் செந்தில் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT