Published : 17 Jul 2023 06:04 AM
Last Updated : 17 Jul 2023 06:04 AM
சென்னை: தரமான உதிரிபாகங்களை வழங்க வேண்டும் என போக்குவரத்துக் கழக தொழில்நுட்ப பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது: போக்குவரத்துக் கழகங்களில் உள்ள பேருந்துகளில் பெரும்பாலானவை ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தை சார்ந்ததாகும். அந்நிறுவனத்தினரும், போக்குவரத்து அதிகாரிகளும் இன்றையதேவைக்கேற்ப பேருந்துகளைத் தயாரிக்க விரும்புகின்றனர்.
அனைத்து பேருந்துகளிலும் கிளட்ச் டிஸ்க் உள்ளிட்ட சில முக்கியபகுதிகளை பழைய நிலையிலேயே வைத்து விடுகின்றனர். இதனால் அடிக்கடி கிளட்ச் டிஸ்கை மாற்ற வேண்டிய நிலை உள்ளது. எங்களுக்கும் பழுது நீக்குவதற்கு தேவையான உதிரி பாகங்களும், போதிய நேரமும் ஒதுக்குவது இல்லை. இதனால் பேருந்துகளில் கிளட்ச் டிஸ்க், பிரேக் கருவிக்கான ஸ்லாக் அட்ஜெஸ்டர் மாற்றுவது போன்ற வேலைகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது.
குறைந்த எரிபொருளில் அதிக கிமீ இயக்குவதற்கான இலக்கை ஓட்டுநருக்கு நிர்ணயிப்பதை விடுத்து, தரமான, தேவையான உதிரிபாகங்களை குறிப்பிட்ட காலத்தில் பெற்றுத்தர வேண்டும்.குறிப்பாக கனரக வாகன வகையில் கிளட்ச் டிஸ்கை மாற்றியமைக்க வேண்டும் என அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பேருந்துதயாரிப்பு நிறுவனத்துக்கு பரிந்துரைக்க வேண்டும். இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT