hindutamil

மிஷ்கின் - விஜய் சேதுபதியின் ‘ட்ரெயின்’ டிச.4-ல் ரிலீஸ்
மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ட்ரெயின்’  திரைப்படம் டிசம்பர் 4 அன்று திரைக்கு வர இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் படம் ‘ட்ரெயின்’. கடந்த 2023-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் படம் பல்வேறு காரணங்களால் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், இப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

இது குறித்த தகவலை விஜய் சேதுபதி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், ‘பயணத்துக்கு தயாராகுங்கள். ‘ட்ரெயின்’ படம் உலகெங்கும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்தப் படம் குறித்து மிஷ்கின் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, ‘ரயிலை ஒவ்வொருமுறை பார்க்கும்போது ஒரு ராட்சஷ புழு தன் வயிற்றில் குட்டிகளை ஏற்றிச் சென்று வேறு ஒரு இடத்தில் துப்புவது போலிருக்கும்.

இப்படியான ஒரு பயணத்தில் ஓர் ஆயிரம் மனிதர்கள் அந்த ராட்சஷ புழுவின் வயிற்றில் ஏறி வேறு ஒரு இடத்தில் போய் இறங்குகிறார்கள். அதில் சிலர் இறக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் இருக்கும் கதாநாயகன் வாழ்க்கையை வெறுத்து தன் மனைவியின் சமாதியின் சிறிய செடி ஒன்றை வைத்துவிட்டு அந்த ரயிலில் ஏறுகிறான்.

அப்படி ஏறுபவன் அந்த புழுவின் வயிற்றில் நடக்கும் பல விஷயங்களில் அவனும் தன்னை மறந்து ஈடுபடுகிறான். அவன் மீண்டும் இறங்கும்போது அந்தப் பயணம் அவனுக்கு வாழ்க்கையை கற்றுத் தருகிறது என்பது படத்தின் முடிவு’ என்று தெரிவித்திருந்தார்.

வி கிரியேஷன்ஸ் சார்பில் தாணு தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் ஸ்ருதி ஹாசன், நாசர், டிம்பிள் ஹயாதி, ஜெயராம், நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு மிஷ்கினே இசை அமைத்துள்ளார்.

Get ready for the ride!
#Train storms into cinemas worldwide on *DECEMBER 4!*

@mysskindirector @shrutihaasan @nasser_kameela @ksravikumardir @ira_dayanand @itsNarain @preethy_karan @KalaiActor @ActorRohan02 #YugiSethu  @fowziafathima @editorsriwat #TapasNayak #StreetLight @vijaytelevision  @RIAZtheboss
@parasriazahmed1 @saregamasouth
@teamimpr
— VijaySethupathi (@VijaySethuOffl) October 12, 2026

‘வலிகள் நிறைந்த காதல் கதைகள்’ - நடிகை ஐஸ்வர்யா லட்சுமி வெறுப்பு

இன்றைய செய்தித் தெறிப்புகள் | அக்.13, 2026

புதுச்சேரி: அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி முதல்வரிடம் பேரவை தலைவர் மனு
புதுச்சேரி: புதுச்சேரியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி முதல்வர் ரங்கசாமியிடம் தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் மனு அளித்துள்ளார்.

அதில், புதுச்சேரி மாநிலத்தில் ஜூன் மாதத்திலிருந்து கடந்த நான்கு மாதங்களில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை பன் மடங்கு அதிகரித்துள்ளது. இந்த விலைவாசி உயர்வின் காரணமாக ஏழை, எளிய மக்கள் கடும் துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக, கடந்த ஜூன் மாதத்தில் ரூ.1,100-க்கு விற்கப்பட்ட ஒரு மூட்டை அரிசியின் விலை இன்று மூட்டைக்கு ரூ.700 உயர்ந்து ரூ.1,800-க்கு விற்கப்படுகிறது.

அதாவது ரூ.60-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பொன்னி அரிசி இன்று ரூ.20 உயர்ந்து ரூ.80-க்கு விற்கப்படுகிறது. ரூ.900-க்கு விற்கப்பட்ட ஒரு மூட்டை இட்லி அரிசி இன்று ரூ.300 உயர்ந்து ரூ.1,200-க்கு விற்கப்படுகிறது. அதாவது ரூ.35-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ இட்லி அரிசி ரூ.15 உயர்ந்து ரூ.50-க்கு விற்கப்படுகிறது. ரூ.120-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ துவரம் பருப்பு இன்று ரூ.40 உயர்ந்து ரூ.160-க்கு விற்கப்படுகிறது. ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ரூ.130-ல் இருந்து ரூ.180-க்கும் விற்கப்படுகிறது. ரூ.120-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ உளுத்தம் பருப்பு இன்று ரூ.30 உயர்ந்து ரூ.150-க்கு விற்கப்படுகிறது. ரூ.180-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பூண்டு இன்று 54.62% உயர்ந்து ரூ.340-க்கு விற்கப்படுகிறது.

அதேபோல், காய்கறி விலையும் இரட்டிப்பு மடங்காக உயர்ந்துள்ளது. வெங்காயம், தக்காளி, உருளைக் கிழங்கு, இஞ்சி, எலுமிச்சை பழங்கள் உள்ளிட்டவை 30 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளன. இதனால் புதுச்சேரியில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் இந்த விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏழை, எளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு முதல்வர், விலைவாசியைக் கட்டுப்படுத்த துறை ரீதியான உயர் அதிகாரிகள் மற்றும் அனைத்து மொத்த வியாபாரிகளையும் அழைத்து விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனுவில் தெரிவித்துள்ளார்.

‘டெட்’ சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

“உள்ளாட்சித் தேர்தலில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு போட்டியிடும்” - அண்ணாமலை அறிவிப்பு
திருவாரூர்: “234 தொகுதியிலும் உள்ளாட்சிகளில் தலைவர்களை உருவாக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு போட்டியிடும்” என அதன் நிறுவனர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே  சோழபாண்டியில் 15,000 மரக்கன்றுகளை நடும் பணியை  ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பினர் இன்று மேற்கொண்டனர். டாக்டர் எம்.ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு மரக்கன்றுகள் நடும்பணியை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது: ஓர் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கினால்தான், ஆரோக்கியமான அரசியலைப் பேச முடியும்.

இதே மன்னார்குடிக்கு தற்போதைய எம்எல்ஏவை வெற்றிபெற செய்ய வந்தேன். அதுபோலத்தான் தாராபுரத்திலும் சென்று வீதி வீதியாகச் சென்று பிரச்சாரம் செய்தேன். பாதம் தொட்டு வணங்கி வாக்கு சேகரித்தேன். தற்போது அந்த எம்எல்ஏக்கள் வெற்றிபெற்ற பின்னர் அந்தக் கட்சியிலேயே இல்லை.

இத்தகைய அரசியலை உடைக்க வேண்டும்.  இதுபோன்ற ஒருமோசமான அரசியலுக்குள் நாமும் போக்கூடாது. இதனால் மக்களுக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை.

அடிப்படை பிரச்சினைகள் எழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தலைவர்களாக உருவாகின்றவர்கள் கீழிறங்கி ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீராதாரங்களை சுத்தப்படுத்துவதில் தொடங்கி, மரம் நடவைத்து அவற்றை பேணிக்காத்து மக்களுக்கும், அடுத்த தலைமுறைக்கும் கொடுக்க வேண்டும் என்கின்ற ஒற்றைக் கருத்தில் ‘வீ த லீடர்’ சமூகப்பணி நடைபெற்று வருகின்றது.

இதுபோன்ற ஓர் அரசியல் கட்சி உருவாக வேண்டும் இதற்கு தான் நாம் காத்திருந்தோம் என மக்கள் நினைக்க வேண்டும். 234 தொகுதியிலும், உள்ளாட்சிகளிலும் தலைவர்களை உருவாக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு போட்டியிடும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கருநாகராஜன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் செல்வம், ராஜ்குமார், வேட்டைத் திடல் ரமேஷ், பிரபு, வழக்கறிஞர்கள் ஐயப்பன், செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

6 எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்ற சபாநாயகர் நடவடிக்கை செல்லும்: உயர் நீதிமன்றம்

ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு வாங்கும் ஒப்பந்தம் ஏன்? - அமைச்சர் நிர்மல் குமார் விவரிப்பு
சென்னை: “தமிழகத்தில் மின்பற்றாக்குறையை சமாளிக்க ஒரு யூனிட் ரூ.35 என்ற விலையில் 4500 மெகாவாட் மின்சாரம் வாங்க தமிழக அரசு மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் பல்வேறு அரசியல் கட்சிகளாலும் கடுமையாக விமர்சிக்கப்படும் நிலையில், அது குறித்து தமிழக மின் துறை அமைச்சர் நிர்மல் குமார் விவரித்துள்ளார்.

“இந்த ஒப்பந்தம் வரும் 15 முதல் 31-ம் தேதி வரை மட்டும் தான். இதனால் ஒரு நாளைக்கு நமக்கு கூடுதலாக ரூ.5 கோடி மட்டுமே செலவாகும்” என அமைச்சர் விளக்கியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “மின் கொள்முதலுக்காக ஓர் ஒப்பந்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளோம். உச்ச பயன்பாட்டு நேரமான மாலை 6 மணி முதல் 12 மணிவரை நமது தேவையை பூர்த்தி செய்வதற்காக  இந்த ஒப்பந்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் தமிழகத்தின் மின் தேவை 16,800 மெகா வாட்டாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டில் இப்போது 21,700 மெகாவாட் அளவுக்கு, அதாவது 30 சதவீதம் நமது மின் தேவை அதிகரித்துள்ளது. எல்-நினோ காரணமாக தமிழகத்தில் வெப்பம் குறையவில்லை, நாடு முழுவதும் இந்த நிலைதான் உள்ளது. இது யாரும் எதிர்பார்க்காத ஒன்று.

எல்லா மாநிலங்களும் மின்சாரத்தை ஒன்றிய தொகுப்பில் இருந்துதான் வாங்குகிறோம். எனவே தேசிய அளவில் உற்பத்தி என்ன, தேவை என்ன என்ற முன்னறிவிப்பை செய்ய வேண்டும் என கடந்த வாரம் ஒன்றிய அமைச்சருடனான ஆலோசனையின் போது தெரிவித்தேன். முன்பே இதுபோல எங்களிடம் மின்சாரம் இருக்காது என ஒன்றிய அரசு தெரிவித்திருந்தால், நாங்கள் வேறு வகையில் ஏற்பாடு செய்திருப்போம்.

ஒன்றிய தொகுப்பில் மின்சாரம் இல்லாததால், இதுபோல அதிகவிலைக்கு வாங்கும் சூழல் ஏற்பட்டது. எனவே தான், கேஸ் மூலமாக உற்பத்தி செய்யும் மின்சாரத்தை யூனிட்டுக்கு ரூ.35-க்கு வாங்க ஒப்பந்தம் செய்துள்ளோம். அவர்களின் உற்பத்தி செலவு அதிகம் என்பதால் அதிக விலைக்கு வாங்குகிறோம்.

என்எல்சியின் ஒன்றிய தொகுப்பில் இருந்து வரவேண்டிய மின்சாரத்தில் 1850 மெகாவாட் கடந்த மாதத்தில் இருந்து தமிழகத்துக்கு வரவில்லை. அதுமட்டுமின்றி காற்றாலைகள் மூலம் 3500 மெகாவாட் மின்சாரத்துக்கு திட்டமிட்டிருந்தோம், அதில் 500 மெகாவாட்தான் கிடைக்கிறது. இது இரண்டும் நமக்கு கிடைக்காததால், நாம் புதிதாக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம். இதனை செய்யவில்லை என்றால் மற்ற மாநிலங்களைப் போல நாமும் மின்வெட்டு செய்ய வேண்டிய சூழல் ஏற்படும்.

யூனிட் ரூ.35க்கு வாங்கும் மின்சாரம் என்பது 24 மணி நேரத்துக்கும் கிடையாது. உச்ச பயன்பாட்டு நேரமான 6 மணி நேரத்துக்கு மட்டுமே. இந்த ஒப்பந்தம் வரும் 15 முதல் 31ம் தேதி வரை மட்டும் தான். நாம் 3500 மெகாவாட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளோம், ஆனால் 1500 மெகாவாட் மட்டும் தான் வாங்கப் போகிறோம். இதனால் ஒரு நாளைக்கு நமக்கு கூடுதலாக ரூ.5 கோடி மட்டுமே செலவாகும்.

அதுபோல தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை கால தேவையை சமாளிக்க புதிய திட்டங்களை போட்டுள்ளோம். திமுக ஆட்சியில் இருந்த 5 ஆண்டுகளில் நீண்ட கால ஒப்பந்தங்கள் எதுவும் போடப்படவில்லை. அதனால் தான் நாம் குறுகிய கால ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. நாம் இந்த மாதத்தில் நீண்ட கால ஒப்பந்தம் மற்றும் 5 ஆண்டுக்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ளவுள்ளோம். கடந்த திமுக ஆட்சியில் மின்சார துறைக்கு 4 அமைச்சர்கள் மாறி மாறி இருந்தனர். அவர்கள் துறையாக முறையாக கவனிக்கவில்லை” என்றார்.

“யூனிட் ரூ.35 மின் ஒப்பந்தத்தில் மெகா ஊழல்” - தவெக அரசு மீது பழனிசாமி குற்றச்சாட்டு

“யூனிட் ரூ.35 மின் ஒப்பந்தத்தில் மெகா ஊழல்” - தவெக அரசு மீது பழனிசாமி குற்றச்சாட்டு
சென்னை:  ‘யூனிட் ஒன்றுக்கு ரூ. 35 என அதிக விலைக்கு மின் கொள்முதல் ஒப்பந்தம் மேற்கொண்டதில் மிகப் பெரிய மெகா ஊழல் நடைபெற்றுள்ளதாக மக்கள் பேசுகின்றனர். தவெக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் ‘வெற்றி மெகா வசூல் திட்டத்தை’ தொடங்கிவிட்டது’ என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் எதிர்பாராவிதமாக 5 மாதங்களுக்கு முன் அமைந்த தவெக கூட்டணி அரசின் அனுபவமின்மை மற்றும் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு மாநிலம் முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது. காரணமே இல்லாமல் ஏற்பட்டுள்ள மின்சாரத் தட்டுப்பாட்டால் தமிழக மக்கள் மிகவும் அவதியுற்று வருகின்றனர். தமிழக மக்களின் இந்த சிரமங்களை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு இந்த ஆட்சியாளர்கள் விஞ்ஞான முறையில் ஊழல் செய்ய முனைகிறார்களோ என்ற எண்ணம் மக்களிடம் எழுந்துள்ளது.

மின்சாரம் இல்லாமல் அவதிப்படுவது ஒருபுறம். அனைத்துப் பொருட்களின், குறிப்பாக உணவுப் பொருட்களின் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு மறுபுறம். இந்த துன்பங்களில் இருந்து மக்களைக் காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரத்தையும், அத்தியாவசிய உணவுப் பொருட்களையும், கமிஷன் பெற்றுக்கொண்டு கொள்முதல் செய்வதற்கு, செயல் திறனற்ற இந்த ஆட்சியாளர்கள் முனைப்பு காட்டி வருவது ஏற்கத்தக்கதல்ல.

ஜெயலலிதா 2011-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், திமுக ஆட்சியின் மிகப் பெரிய அவலமான தொடர் மின்வெட்டை சீர்செய்ய தொடர்ந்து பல ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினார். திமுக ஆட்சியில் பல மின் உற்பத்தித் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டதையும், புதிய திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாததையும் கண்டறிந்து, பல புதிய மின் உற்பத்தி திட்டங்களைத் தொடங்கினார்.

மின் கட்டமைப்பில் ஏற்பட்டிருந்த குளறுபடிகளை சீர்செய்து தமிழ் நாட்டை மின்வெட்டில்லாத மாநிலமாக மாற்றிக் காட்டினார். தொடர்ந்து, எனது தலைமையிலான அதிமுக அரசும், இப்படி தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டதன் காரணமாக தமிழ் நாடு மின் மிகை மாநிலமாக விளங்கியது.

ஆனால், தற்போதுள்ள திறமையற்ற தவெக அரசு, அப்படி எந்தவிதமான ஆய்வுகளையும் செய்ததாகத் தெரியவில்லை. மின் உற்பத்தியை அதிகரிக்க எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. மின் தொடர் கட்டமைப்பிலும், நிர்வாகத்திலும் பல சீர்கேடுகளை ஏற்படுத்தி, நாள்தோறும் தமிழ் நாட்டின் பல இடங்களில் மின்வெட்டை ஏற்படுத்தி, தமிழகத்தை இருளில் மூழ்கடித்து, தமிழக மக்களை தாங்கொண்ணா துயரத்தில் ஆழ்த்தி வருகிறது.

தற்போதைய தவெக ஆட்சியில், தமிழ்நாடு மின்சார வாரியம் 12.10.2026 முதல் 31.10.2026 வரை தினசரி 4400 மெகாவாட் மின்சாரத்தை வாங்குவதற்கு 5 தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கி உள்ளதாகச் செய்திகள் வந்துள்ளது என்றும்; வரலாற்றிலேயே இல்லாத வகையில் யூனிட் ஒன்றுக்கு சராசரியாக 35 ரூபாய் என்ற, மிக மிக அதிக விலையில் மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது.

கடந்த மே மாதம் ஆட்சிக்கு வந்தவுடன், யூனிட் ஒன்றுக்கு ரூ.11 முதல் 20 வரை என்று அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போட்டதாகவும்; அதில் ஊழல் நடைபெற்றிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தை காரணம் காட்டி அந்த ஒப்பந்தங்களை தவெக அரசு ரத்து செய்ததாகச் செய்திகள் வெளியாகின.

கடந்த ஜூன் மாதம், நீண்ட காலத்துக்கு குறைந்த விலையிலான மின் ஒப்பந்தங்களை மேற்கொள்வதாக உறுதியளித்து தவெக அரசு ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. ஆனால், தற்போது பழைய ஒப்பந்தங்களைவிட இரு மடங்குக்கும் மேலான விலையில், இந்த வாடகைக்கால் தவெக அரசு ஒரு யூனிட்டிற்கு ரூ. 32 முதல் ரூ. 37 விலையில் மிக மிக அதிக விலையில், குறுகிய கால ஒப்பந்தத்தை தனியாரிடம் போட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு அரசு அவசர அடிப்படையில் டெண்டர் கோருவதற்கு முன்பே, அதாவது செப்டம்பர் 9-ஆம் தேதியன்றே, ஆந்திர அரசு அக்டோபர் மாத காலத்திற்கு யூனிட் ஒன்றுக்கு ரூ. 16-20 என்ற விலையில் மின்சாரம் கொள்முதல் செய்ய இறுதி செய்துள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், இந்த தவெக அரசு மேற்கொண்ட ரூ. 32-37 என்ற விலையில் வேறு எந்த மாநிலமும் ஒப்பந்தங்களை மேற்கொள்ளவில்லை.

மின் பரிமாற்றச் சந்தையில் சராசரி விலை சமீப காலமாக ரூ. 7-10 ஆகவும், இருதரப்பு ஒப்பந்தங்களில் உச்ச நேரத் தேவைக்கான சில ஒப்பந்தங்களின் விலை ரூ. 20-க்கு அருகிலும் இருந்தன. இதற்கு முன்பு மத்திய தொகுப்பில் இருந்தும், தனியாரிடம் இருந்தும் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அப்போதெல்லாம் சராசரியாக யூனிட் ஒன்றுக்கு சுமார் 15 ரூபாய் வரை செலவானதாக வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கெனவே, தவெக ஆட்சிக்கு வந்தவுடன், மின்சார வாரியம் கடன் சுமையால் தள்ளாடுகிறது என்றும், முந்தைய ஆட்சியில் மின் கட்டணத்தை நிர்ணயிப்பதில் குளறுபடிகள் உள்ளதாகக் கூறி, மின் கணக்கீட்டில் மாறுதல் செய்கிறோம் என்று ஏற்கெனவே ரூ.1,500 மின் கட்டணம் செலுத்தி வந்த தமிழக மக்கள், தற்போது சுமார் ரூ.4,000 வரை செலுத்துவதாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், அதிக விலையில் மின் கொள்முதல் செய்ய போடப்பட்ட இந்த ஒப்பந்தம், தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேலும் கடன் சுமையில் மூழ்கடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்த பிரச்சினையைக்கூட அவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, கமிஷன் அடித்து அதிக விலைக்கு மின்கொள்முதல் செய்கின்றனர். தூய நிர்வாகம் தருவோம், நேர்மையான நிர்வாகம் தருவோம், தொட்டால் விடமாட்டேன், நான் தொடமாட்டேன், தொட்டவர்களையும் விடமாட்டேன் என்று வீர வசனம் பேசியவர்கள் நிர்வாகத்தில், ஆந்திராவின் மணல் மாஃபியாக்களின் தலையீடுகளுடன், தமிழகத்தில் வளங்கள் கொள்ளை போகின்றன.

துறைகள்தோறும் லஞ்ச லாவண்யம் தடையின்றி நடைபெறுகிறது. இதில் ஓர் அங்கம்தான் தற்போதைய மின் தட்டுப்பாட்டை பயன்படுத்தி, அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்யும் தந்திரம். மக்களை ஏமாற்றி, ஆட்சிக்கு வந்த இவர்களின் நேர்மை இந்த இடைத் தேர்தலிலேயே தெரிந்துவிட்டது.

தேர்தலுக்கு முன்பு, தனது சொகுசுப் பேருந்தின் மேல்புறத்தில் இருந்து வசனம் பேசிய நடிகர் விஜய், மின்சார வாரியத்தைப் பற்றி பேசும்போது, எழுதிக் கொடுத்த வசனத்தை, அதாவது ‘டெண்டர்’ என்ற வார்த்தையை மிக அழகாக, தொண்டை நரம்பு தெரிக்கும் அளவிற்கு, ஏற்ற இறக்கத்துடன் பேசி கைதட்டலைப் பெற்று. ஆட்சியைப் பிடித்து வாடகைக் கால்களுடன் மைனாரிட்டி ஆட்சியை அமைத்த விஜய், தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு சராசரி யூனிட் ஒன்றுக்கு ரூ.35 வரை அதிக விலைக்கு ‘மின் கொள்முதல் ஒப்பந்தம்’ போட்ட மின் கொள்முதலில் மிகப் பெரிய ‘மெகா ஊழல்’ நடைபெற்றுள்ளதாக மக்கள் பேசுகின்றனர். தவெக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் ‘வெற்றி மெகா வசூல் திட்டத்தை’ தொடங்கிவிட்டதாக மக்கள் பரவலாக பேசுகின்றனர்.

ஏற்கெனவே, பல லட்சம் கோடி ரூபாய் கடனில் மிதக்கும் தமிழக மின்சார வாரியத்தை மேலும் கடனில் மூழ்கடித்து, கடைசியில் தனியாருக்கு தாரை வார்க்க இந்த அரசு திட்டமிடுகிறதோ என்ற ஐயம் தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அநியாய விலைக்கு தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்கும் இந்த ஒப்பந்தத்திற்கு, எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன், இந்த ஒப்பந்தத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

“பள்ளிகளில் இனி வாரத்தில் 5 நாட்களும் உடற்கல்வி வகுப்புகள் நடத்தப்படும்” - அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

கேரளம்: மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி பெண்​கள் உள்பட மூவர் உயி​ரிழப்பு
கொச்சி: கேரளம் மாநிலத்​தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி​ய​தில் 2 பெண்​கள் உள்பட மூவர் உயி​ரிந்​தனர்.

கேரளம் மாநிலம் கொச்சி​யில் உள்ள கைவினைப் பொருள் விற்பனை நிலை​யத்​தில் வேலைபார்த்து வரும் தேவிகா (21), கோபிகா (22), இஜாஸ் (21) ஆகிய மூவரும் நேற்று முன்​தினம் நள்ளிர​வில் தேநீர் அருந்​த மோட்​டார் சைக்​கிளில் சென்​றனர். தேநீர் அருந்​தி​விட்டு தங்​கள் இருப்​பிடத்​துக்கு திரும்பி கொண்டிருந்​தனர்.

நெடும்​பாசேரி அருகே உள்ள சாலை​யில் சென்​ற​போது, அதிவேகத்​தில் வந்த சொகுசு கார் ஒன்​று, மோட்​டார் சைக்​கிள் மீது பயங்​கர​மாக மோதி​யது.

இதில் மூவரும் சாலை​யில் தூக்கி வீசப்​பட்டு பலத்த காயம் அடைந்​தனர். அக்​கம்​பக்​கத்​தில் இருந்​தவர்​கள் அவர்​களை உடனடி​யாக மீட்டு மருத்​துவ​மனை​யில் சேர்த்​தனர். எனினும் சிகிச்சை பலனின்றி 3 பேரும் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர்.

அதிவேகத்​தில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்​படுத்​திய சுஹைல் சஜீவ் (19) என்ற இளைஞரை அங்​கிருந்​தவர்​கள் மடக்​கிப்​பிடித்து போலீ​ஸில் ஒப்​படைத்​தனர். முதற்​கட்ட விசா​ரணை​யில் அவர் மது​போதை​யில் காரை வேக​மாக ஓட்டி வந்து விபத்தை ஏற்​படுத்​தி​யது தெரிய​வந்​தது. அவரை கைது செய்த போலீ​ஸார், வழக்​குப் பதிவு செய்​து, வி​சா​ரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய பிரதமருக்கு முதல்வர் விஜய் கோரிக்கை

6 எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்ற சபாநாயகர் நடவடிக்கை செல்லும்: உயர் நீதிமன்றம்
சென்னை: அதிமுக 6 எம்எல்ஏ-க்களின் ராஜினாமாக்களை சபாநாயகர் ஏற்றுக்கொண்டது அரசியலமைப்புச் சட்டப்படி செல்லும் என்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், சபாநாயகர் உத்தரவுக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்தபோது, ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல் ரவி ஆகியோர் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு இன்று இறுதி தீர்ப்பு அறிவித்தது. அதன்படி, சம்பந்தப்பட்ட 6 எம்எல்ஏ-க்களின் ராஜினாமாக்களை சபாநாயகர் ஏற்றுக்கொண்டது அரசியலமைப்புச் சட்டப்படி செல்லும் என்றும், மேலும், சபாநாயகர் ஏற்றுக்கொண்ட நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் நீதிபதிகள் கூறினர்.

மேலும், சம்பந்தப்பட்ட 6 பேருக்கும் எதிராக அரசியலமைப்பின் கீழ் தொடங்கப்பட்ட தகுதி நீக்க நடவடிக்கைகளை சபாநாயகர் 2 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர்.

கிருஷ்ணகிரி அருகே வெறிநாய் கடித்து 7 பேர் காயம்

லிட்​டில் சீசர் (1931): குற்ற உலகின் அசல் குரூரம் | ஹாலிவுட் மேட்னி 51
துப்​பாக்​கி​யின் துணை​யுடன் குற்ற சாம்​ராஜ்​யத்​தின் உச்​சத்தை அடைந்த ஒரு​வன், அதே துப்​பாக்​கிக் குண்​டுக்கு வீழ்​வதே ‘லிட்​டில் சீசர்’ (LITTLE CAESAR -1931) திரைப்​படத்​தின் ஒரு​வரிக் கதை.

நள்​ளிர​வில் எரி​வாயு நிலை​யத்​தில் கொள்​ளை​யடித்​து​விட்​டுத் தப்​பும் நண்​பர்​களான சீசர் என்​ரிகோ பண்​டெல்லோ (ரி​கோ), ஜோ மஸாரா இரு​வரும் ஓர் உணவகத்​தில் சாப்​பிடு​கிறார்​கள். நாளிதழில் தாதா பீட் மொன்​டா​னா​வின் ஆடம்பர விருந்​து செய்​தி​யைப் பார்க்​கும் ரிகோவுக்​குத் தானும் பெரிய தாதா ஆக வேண்​டும் என்ற அதி​கார வெறி பிறக்​கிறது; நடனக் கலைஞ​னான ஜோ எளிய, நிம்​ம​தி​யான வாழ்க்​கையை விரும்​பு​கிறான். இரு வேறு இலக்​கு​களோடு இரு​வரும் குற்ற சாம்​ராஜ்ய​மான கிழக்கு நகருக்​குப் பயணிக்​கிறார்​கள்.

அங்கு சாம் வெட்​டோரி​யின் கும்​பலில் சேரும் ரிகோ​வின் துணிச்​சலை​யும் குட்​டை​யான தோற்​றத்​தை​யும் கண்டு அவனுக்கு ‘லிட்​டில் சீசர்’ எனப் பெயரிடு​கிறார்​கள்.

அதேவேளை​யில், ஜோ ஒரு கிளப்​பில் ஓல்கா என்ற பெண்​ணுடன் நடன​மாடி, அவளது காதலில் விழுகிறான். நகரத்​தின் தலை​மைத் தாதா ‘பிக் பாய்’, தன் தளபதி பீட் மொன்​டானா மூலம் உள்​ளூர் தாதாக்​களான வெட்​டோரி மற்​றும் லிட்​டில் ஆர்​னிக்​கு, “பு​திய குற்​றத் தடுப்பு ஆணை​யர் மெக்​ளூர் கடுமை​யாக நடந்​து​கொள்​வ​தால் சில மாதங்​களுக்​குத் துப்​பாக்​கிச் சூடு எது​வும் நடக்​கக் கூடாது” என்று எச்​சரிக்கை விடுக்​கிறார். ஆனால் அதை மதிக்​காமல், புத்​தாண்டு நள்​ளிர​வில் எதிரி தாதா ஆர்​னி​யின் கிளப்​பில் கொள்​ளை​யடிக்​கும் ரிகோ, குறுக்கே வரும் ஆணை​யர் மெக்​ளூரைச் சுட்​டுக் கொல்​கிறான்.

ஆணை​யர் கொல்​லப்​பட்​ட​தால் காவல்​துறை வெகுண்​டெழுகிறது. புல​னாய்வு அதி​காரி ஃப்​ளஹெர்ட்​டி, தாதாக்​களின் கிளப்​பைச் சுற்றி வளைக்​கிறார். ரிகோ​வின் செயலை வெட்​டோரி கண்​டிக்க, அவனை ஓரங்​கட்​டி​விட்​டுக் கும்​பலின் தலை​வ​னாகிறான் ரிகோ. சக அடி​யாட்​கள் வைர​மும் பிளாட்​டின​மும் பதித்த கைக்​கடி​காரத்​தைப் பரிசளிக்க, புதிய தலை​வ​னான ரிகோ ஆணவத்​தோடு போஸ் கொடுக்​கிறான். தன்​னைக் கொல்ல ஆட்​களை ஏவிய எதிரி தாதா ஆர்​னி​யின் அலு​வல​கத்​துக்கே சென்​று, துப்​பாக்கி முனை​யில் மிரட்டி அவனை ஊரை விட்டே விரட்​டு​கிறான்.

ரிகோ​வின் அசுர ஆதிக்​கத்​தைக் கண்ட பிக் பாய், எந்த பீட் மொன்​டா​னா​வின் விருந்​துச் செய்​தி​யைப் பார்த்து அவன் தாதா ஆக ஆசைப்​பட்​டானோ, அவனிடம் இருந்த வடக்​குப் பகு​தி​யின் முழு அதி​காரத்​தை​யும் ரிகோ​விடமே தரு​கிறார். சாதாரண தெரு​வோரக் கொள்​ளை​ய​னாகத் தொடங்​கிய​வன்

மாளிகை, பகட்​டான உடைகள், கைநிறைய அடி​யாட்​கள் என நிழல் உலக சாம்​ராஜ்​யத்​தின் உச்​சத்​தைத் தொடு​கிறான். இந்​தச் சூழலில் தன் பழைய நண்​பன் ஜோ தன்​னுடன் இருக்க வேண்​டும் என ரிகோ வற்​புறுத்​துகிறான். ஜோ மறுத்​து, இதைத் தன் காதலி ஓல்​கா​விடம் தெரிவிக்க, “ரிகோ இருக்​கும் வரை நமக்கு நிம்​மதி இல்​லை” என்று துணிந்து காவல் அதி​காரி ஃப்​ளஹெர்ட்​டிக்கு ரகசி​யத் தகவல் தரு​கிறாள் அவள்.

ஆத்​திரத்​துடன் ஜோவைச் சுடத் துப்​பாக்​கியை நீட்​டும் ரிகோ​வின் விரல்​கள் நண்​பன் மீதான பாசத்​தால் நடுங்​கு​கின்​றன; அவனால் சுட முடிவ​தில்​லை. அதற்​குள் போலீஸ் சுற்றி வளைக்​கிறது. தாதா கும்​பல் அழிய, ரிகோ மட்​டும் தப்​பியோடி அனாதை​யாகப் பதுங்​கு​கிறான்.

மாதங்​கள் கடக்க, “ரிகோ ஒரு கோழை; பயந்​து​போய்ச் சாக்​கடை​யில் ஒளிந்து கொண்​டான்” என்று பத்​திரி​கை​களில் சவால் விடு​கிறார் அதி​காரி ஃப்​ளஹெர்ட்​டி. இது தனக்​கான வலை என்​பதை உணராமல் ஆத்​திரத்​தில் பொதுத் தொலைபேசியி​லிருந்து மிரட்​டும் ரிகோவை அந்த அழைப்பை வைத்தே போலீஸ் சுற்றி வளைத்து சுடு​கிறது. மரப்​பலகை விளம்​பரத்​துக்​குப் பின்​னால் மறைந்து சுடும் ரிகோ, மெஷின் கன் குண்​டு​களால் துளைக்​கப்​பட்​டுத் தரை​யில் சரி​கிறான்.

அந்​தப் பலகை​யில், நண்​பன் ஜோவும் அவனது காதலி ஓல்கா​வும் சந்​தோஷ​மாக நடன​மாடும் படம்​தான் விளம்​பர​மாக இருக்​கிறது.

நிழல் உலகையே ஆள நினைத்த அந்த தாதா, “கருணை மிகுந்த அன்​னையே, இது​தானா ரிகோ​வின் முடிவு?” என்று முனகிய​வாறே பரி​தாப​மாகத் தன் உயிரை விடு​கிறான். தான் தேர்ந்​தெடுத்த வன்​முறை வாழ்க்​கை​யால் ரிகோ மரணத்​தைத் தழு​வு​கிறான்; அவன் நண்​பன் ஜோவோ, நடனக் கலைஞ​னாகத் தனது கனவை அடைகிறான். இரு​வரின் வாழ்க்​கைப் பாதைகளை​யும் ஒரே விளம்​பரப் பலகை​யில் மோத​விட்​டு, லிட்​டில் சீசர் (1931) படத்​தின் கதை முடிகிறது.

1930-களின் தொடக்​கத்​தில் உரு​வான குற்​றப்​படங்​கள் வன்​முறையைப் பெரு​மைப்​படுத்​துகின்றன என்ற விமர்​சனம் எழுந்​த​தால், “இப்​படம் குற்​ற​வாளி​களை நாயகர்​களாகக் காட்​ட​வில்​லை; அவர்​களின் அழி​வைச் சமூகத்​துக்​கான எச்​சரிக்​கை​யாகவே காட்​டு​கிறது” என்​பதை உணர்த்த தயாரிப்​பாளர்​கள் படத்​தின் தொடக்​கத்​திலேயே, ‘‘...​வாள் எடுக்​கிற எவனும் வாளாலேயே மடி​வான்” என்ற விவிலிய நற்​செய்தி வாசகத்தை (மத்​தேயு 26:52) வைத்​தனர்.

டபிள்​யூ. ஆர். பர்​னெட்​டின் நாவலைத் தழுவி ராபர்ட் என். லீ காட்சி வடிவ​மாக்க, குற்​ற​வாளி​களின் வாழ்​வியலை சமரசமின்​றித் திரைக்​கதை​யாக்​கி​னார் பிரான்​சிஸ் எட்​வர்ட்ஸ் ஃபா​ராகோ. மவுனப் பட பாணி​யைத் துறந்து காட்​சிகளை விறு​விறுப்​பாக நகர்த்​திய இயக்​குநர் மெர்​வின் லீராய், குற்ற உலகின் அசல் குரூரத்​தைத் தத்​ரூப​மாகப் பதிவுசெய்​து, ஆரம்​ப​காலக் கிளாசிக் கேங்க்​ஸ்​டர் திரைப்​படங்​களுக்கு முன்​னோடி​யாக இப்​படத்தை நிலைநிறுத்​தி​னார்.

ஒளிப்​ப​திவு (டோனி கவுடியோ): இருண்ட சந்​துகள், மங்​கிய விளக்​கு​கள் வழியே நிழல் உலகைப் பதிவுசெய்​ததுடன், நிஜத்​தில் உயரம் குறை​வான எட்​வர்ட் ஜி. ராபின்​சனைத் தனது கேமரா கோணங்​கள் மூலம் நிழல் உலகையே அச்​சுறுத்​தும் கம்​பீர​மான ஆளு​மை​யாகக் காட்டி வியக்க வைக்​கிறார்.

படத்​தொகுப்பு (ரே கர்​டிஸ்): காட்​சிகளின் ஓட்​டத்​தை​யும் கதை​யின் வேகத்​தை​யும் நேர்த்​தி​யாகக் கட்​டுப்​படுத்​தி, கொள்​ளை, துரத்​தல், மோதல் போன்ற சம்​பவங்​களில் பதற்​றத்​தைத் தொய்​வின்​றித் தக்​கவைக்​கிறார்.

எட்​வர்ட் ஜி. ராபின்​சன்: உயரம் குறைந்த உரு​வம், அகன்ற முகம், சிறிய கொள்​ளை​ய​னாக இருந்து படிப்​படி​யாக அதி​காரத்​தின் உச்​சிக்கு ஏறும்​போது உடை​யில், நடை​யில், பார்​வை​யிலேயே அதி​காரத்​தைக் காட்​டிய விதம் சிறப்​பு. நண்​பன் ஜோவைச் சுட முடி​யாமல் தவிக்​கும்​போதும் தங்​கும் விடு​தி​யில் செய்​தித்​தாளில் ஒரு​வர் தன்​னைப் பற்றி வாசிக்​கும் செய்​திக்​கேற்ப முகத்​தைச் சுருக்​கி, விரித்​து, உதடு​கள் துடித்​து, கோபம் தலைக்​கேறும் நடிப்​பின் பரி​மாணத்​தில் எம்​.ஆர்​.​ரா​தாவை ஞாபகப்​படுத்​துகிறார்.

டக்​ளஸ் ஃபேர்​பேங்க்ஸ் ஜூனியர்: ஜோ மஸா​ரா​வாக நண்​பனின் ஆதிக்​கத்​துக்கும், காதலியின் நிம்​ம​தி​யான வாழ்க்கை தேடலுக்​கும் நடுவே தவிக்​கும் ஒரு கலைஞனின் போராட் டத்தை மிக இயல்​பாக வெளிப்​படுத்​தி​யிருக்​கிறார்.

கிளெண்டா ஃபாரெல்: நடனப் பெண் ஓல்​கா​வாகக் காதலனைக் குற்ற சாம்​ராஜ்​யத்​திலிருந்து மீட்​கத் துடிக்​கும் பாசத்​தை​யும் அசாத்​தி​யத் துணிச்​சலை​யும் அட்​ட​காச​மாக வெளிப்​படுத்​தி​யுள்​ளார்.

வரலாற்​று சீசரை அவனது நண்​பன் புரூட்​டஸின் கத்தி வீழ்த்​தி​யது போல, லிட்​டில் சீசரை அவனது உயிர்த்​தோழன் ஜோ மஸா​ரா​வின் மீதான பாச​மும் பிளவுமே வீழ்ச்​சிக்கு இட்​டுச் செல்​கிறது. திரைப்பட வரலாற்​றில், முழு​மை​யான வடிவத்​தைப் பெற்ற ஆரம்​ப​கால கேங்க்​ஸ்​டர் திரைப்​படங்​களில் ஒன்​றாக ‘லிட்​டில் சீசர்’ இன்​றும் நிலைத்து நிற்​கிறது. எளிய மனிதன் வன்​முறை​யால் சாம்​ராஜ்​யம் அமைத்​தா​லும் அந்​த வன்​முறையேஅவனை அழித்​து​ விடும் என்​ற வாழ்​வியல்​ உண்மையை உணர்த்​தும் இத்​திரைப்​படத்​தை நண்பர்​களு​டன்​ சேர்ந்​து கண்​டு களிக்​கலாம்​.

(செவ்​வாய்​ தோறும் படம் பார்ப்போம்)

விட்னஸ் ஃபார் தி பிராசிக்யூஷன் (1957): ‘கிளைமாக்ஸை சொல்லிவிடாதீர்கள்’ | ஹாலிவுட் மேட்னி 50

“பள்ளிகளில் இனி வாரத்தில் 5 நாட்களும் உடற்கல்வி வகுப்புகள் நடத்தப்படும்” - அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
சென்னை: “பள்ளிகளில் இனி வாரத்தில் 5 நாட்களும் உடற்கல்வி வகுப்புகள் நடத்தப்படும்” என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்தார். இதற்காக, தமிழக அரசின் மாநில பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான திருத்திய கால அட்டவணையை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், “இனி வாரத்தில் 5 நாட்களும் உடற்கல்வி வகுப்புகளை நடத்தப்படும். அதற்கு வழிவகை செய்யும் திருத்திய கால அட்டவணை வெளியிடுகிறோம். இனி தினந்தோறும் மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகள் நடத்தப்படும். உடற்கல்வி வகுப்புகளைக் காட்டாயமாக ஒதுக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் அந்த வகுப்புகளை நிறுத்தக்கூடாது.

மாணவர்கள் உடற்பயிற்சி வகுப்புக்குச் செல்ல ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும். அதற்கான மைதானங்கள், பயிற்சி, விளையாட்டு உபகரணங்களை ஏற்பாடு செய்ய வேண்டும். 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடற்கல்வி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் உள்ளன. அதில் 2 ஆயிரம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாக நான் கண்டறிந்தேன்.

ஒரு உடற்கல்வி ஆசிரியர் காலிப்பணியிடம்கூட இருக்கக்கூடாது என நான் உத்தரவிட்டுள்ளேன். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. திருத்திய கால அட்டவணை மூலம் மாணவர்களுக்கு தினமும் உடற்கல்வி வகுப்புகள் கிடைத்துள்ளது. சாதி, மதம், நிறம், விளையாட்டு திறன், உயரம், குள்ளம் என எதற்காகவும், எந்தக் குழந்தையையும் விளையாட்டில் இருந்து ஒதுக்கி வைக்காதீர்கள்” என்று அமைச்சர் தெரிவித்தார்.

“ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு கொள்முதல்; மின்வாரியம் முடங்கும் அபாயம்” - அன்புமணி எச்சரிக்கை

“திமுக ஆட்சியில் ரூ.20-க்கு வாங்கப்பட்ட மின்சாரம் இப்போது ரூ.35-க்கு கொள்முதல்” - செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு
சென்னை: “திமுக ஆட்சியில் ரூ.20-க்கு மின்சாரம் கொள்முதல்  செய்ததை விமர்சித்த தவெக, ரூ.35-க்கு கொள்முதல் செய்கிறது.  தமிழகத்தில் தவெக ஆட்சிப்பொறுப்பேற்று 5 மாதங்களாகியும், மின்வெட்டை சீர் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உச்சபட்சமாக தலைமைச் செயலகத்திலேயே மின்வெட்டுப் பிரச்சினை ஏற்படுகிறது,” என திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடத்தில் பேசுகையில், “தமிழகத்தில்  தவெக ஆட்சி அமைந்தது முதல் மின்வெட்டு பற்றி பேசாத நாட்கள், செய்திகள் வெளிவராத நாட்கள் என ஒருநாள் கூட இல்லை. அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், பட்டமளிப்பு விழாக்களில் கூட மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.

தமிழகத்தில் ஒவ்வொரு துறையிலும் ஏற்படக்கூடிய நிர்வாகத் தோல்வியால் மக்கள் அவதியடைவது குறித்து இன்றைய டம்மி முதல்வருக்கு கவலையில்லை. இவர், வெறும் ரீல்ஸை மட்டுமே முன்வைத்து, மக்களை ஏமாற்றி ஆட்சி செய்து வருகிறார்.

உச்சபட்சமாக தலைமைச் செயலகத்திலேயே மின்வெட்டுப் பிரச்சினை ஏற்படுகிறது. மின்துறை அமைச்சர் அவருடைய துறையைத் தவிர மற்ற எல்லாத் துறை சார்ந்த கேள்விகளுக்கும் பதில் சொல்வார். ஆனால், அவருடைய துறையில் கேள்வி கேட்டால் பதில் இருக்காது.

திமுக ஆட்சியின்போது எந்தவித தடையும் இன்றி சீராக மின்விநியோகம் செய்யப்பட்டது. திமுக ஆட்சியில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் உச்சபட்ச மின்தேவை ஏற்படும் என்பதற்காக முன்கூட்டியே கணக்கெடுத்து, பொங்கலுக்கு முன்பாகவே ஒப்பந்தங்களை மேற்கொள்வோம்.

நம் சொந்த மின் உற்பத்தி ஆலையில் கோளாறு ஏற்பட்டால் மட்டும், அவசரத் தேவைக்காக பரிமாற்றம் முறையில் மின்சாரம் வாங்குவோம். ஆனால், இன்றைய தவெக அரசு முழுக்க முழுக்க வெளிச் சந்தையில் மின் கொள்முதல் செய்கிறது. தவெக அரசு வெளிப்படை இல்லாமல் இருக்கிறது. ஏன் சொந்த உற்பத்தியை குறைத்தீர்கள். மின்சார வாரியம் முழுக்க முழுக்க முறைக்கேட்டில் ஈடுபட்டுள்ளது.

திமுக ஆட்சியில் ரூ.20-க்கு மின்சாரம் கொள்முதல்  செய்ததை விமர்சித்த தவெக, ரூ.35-க்கு கொள்முதல் செய்கிறது.  தமிழகத்தில் தவெக ஆட்சிப்பொறுப்பேற்று 5 மாதங்களாகியும், மின்வெட்டு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

முதலில் ஃபியூஸ் கேரியர் காணவில்லை என்றார்கள், பிறகு கருப்பு ஆடுகள் என்றார்கள், தற்போது பஞ்சாப்பில் 15 மணிநேரம் மின்வெட்டு இருக்கிறது என்கிறார்கள். இதுபோன்ற மோசமாக சூழ்நிலையில் தவெக செயல்படுகிறது. மின்சார கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. மின்வெட்டை அமல்படுத்தியுள்ள அரசாக தவெக அரசு உள்ளது. திமுக அரசை குறை சொல்ல வேண்டும் என்பதுதான் இவர்களின் எண்ணம்” என்று செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

‘டெட்’ சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

பிரான்ஸில் சூப்பர் மார்க்கெட் ஃபிரிட்ஜ்களை குறிவைத்து சைபர் தாக்குதல்: ஹேக்கர்கள் கைவரிசை
பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சூப்பர் மார்க்கெட்டுகளின் ஃபிரிட்ஜ்கள், ஃபிரீஸர்கள் போன்ற குளிர்சாதன இயந்திரங்களை ஹேக் செய்து, அதில் உள்ள உணவுகளை சேதப்படுத்தி, தீ விபத்து ஏற்படுத்தும் சைபர் தாக்குதலை ஹேக்கர்கள் மேற்கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இது எப்படி நடந்தது என்பது குறித்து பார்ப்போம்.

என்ன நடந்தது? - பிரான்ஸில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஃபிரிட்ஜ்களின் கட்டுப்பாட்டை தங்கள் வசப்படுத்திய ஹேக்கர்கள், அதன் வெப்பநிலையை சுமார் 50 டிகிரி செல்சியஸ் வரை உயர்த்தி உள்ளனர். அதன் மூலம் ஃப்ரெஷ் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பண்டங்களை பயன்படுத்த முடியாத வகையில் சேதப்படுத்தி உள்ளனர். தொடர்ந்து அதிக வெப்பநிலையில் இயக்கியதால் இயந்திரம் சூடாகி தீ விபத்து ஏற்பட்டதாகவும் தகவல். இதனால் ஒரே நாளில் தேசம் முழுவதும் சேதமான உணவு பொருட்களின் மொத்த மதிப்பு சில மில்லியன் யூரோக்கள் இருக்கும் என தகவல்.

இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள பிரான்ஸ் தேசிய சைபர் பாதுகாப்பு முகமைக்கு அந்நாட்டு பிரதமர் செபஸ்டியன் உத்தரவிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. தங்களை போல் மற்ற ஐரோப்பிய நாடுகளும் பாதிக்கப்படக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு ஸ்பெயின், போர்ச்சுகல், போலந்து, ஜெர்மனி, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வகை சைபர் தாக்குதலுக்கு இந்நாடுகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக சைபர் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டில் பல்வேறு கிளைகளை கொண்டுள்ள Intermarche, Monoprix, Carrefour, E.Leclerc, Cooperative U உள்ளிட்ட முன்னணி சில்லறை உணவுத்துறை நிறுவனங்கள் இந்த சைபர் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கான காரணம் என்னவென்று அறிவதற்கான முயற்சிகள் தொடங்கியுள்ளது. தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை சில நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன.

எப்படி நடந்தது? - சைபர் தாக்குதலுக்கு உள்ளான சூப்பர் மார்க்கெட்டுகளில் உள்ள ஃபிரிட்ஜ்கள் மென்பொருள் மூலம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் தொலைதூரத்தில் இருந்தபடி சூப்பர் மார்க்கெட் ஃபிரிட்ஜ் மற்றும் ஃபிரீஸர்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு டென்மார்க்கை சேர்ந்த நிறுவனமான Danfoss, மென்பொருளை வடிவமைத்து வழங்கி உள்ளது.

இத்தகைய சூழலில் அந்த நிறுவனத்தின் மென்பொருளை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த ஹேக்கர்கள், இந்த வேலையை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

ஹேக் செய்யப்பட்ட குளிர்சாதன இயந்திரங்கள் பழைய மாடலை சேர்ந்தவை. மேலும், அதன் பாதுகாப்பு அம்சங்கள் சார்ந்த மென்பொருள் அப்லோட் செய்யப்படாதது இதற்கு காரணம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அந்த இயந்திரங்களுக்கான இணைய இணைப்பு இப்போது துண்டிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட கடைகளின் முழு எண்ணிக்கை இன்னும் வெளியாகவில்லை. இதுவரை சுமார் 400 கடைகளில் இந்த சைபர் தாக்குதல் உறுதியாகி உள்ளது.

இந்தச் சூழலில் உணவு பாதுகாப்பு சார்ந்த விவகாரத்தில் அனைத்து மட்டத்திலும் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில் இப்போது உணவை ஆயுதமாகப் பயன்படுத்துவது சகஜமாகி உள்ளது என்று ஐரோப்பிய உணவு ஆணையர் கிறிஸ்தோப் ஹன்சன் இந்த சைபர் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்லி ஜந்தர் மந்தரில் தடையை மீறி போராட முயற்சி: சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா கைது

பிழையின்றி எழுதலாம்! | எளிதில் கற்கலாம் ஏஐ 6
கட்டுரைகள், மின்னஞ்சல் களை எழுதும்போது ஒரே மாதிரி யான சொற்களைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்துவதும், வாக்கியங்களின் தொனி (Tone) சரியாக அமையாமல் போவதும் இயல்புதான். நாம் எழுதும் கருத்துகளைத் தெளிவாகவும் இலக்கணப் பிழைகள் இன்றி யும், ஈர்க்கும் வகையிலும் மாற்றி யமைக்க உதவுகிறது ‘QuillBot’ எனும் செய்யறிவுத் தளம்.

பயனர் அளிக்கும் வாக்கியங்களின் கருப்பொருள் மாறாமல் அவற்றை வேறுபட்ட அழகிய சொற் களைக் கொண்டு மறுஆக்கம் (Paraphrasing) செய்யும் திறனே இந்தக் கருவியின் சிறப்பியல்பு.

மறுஆக்கம் செய்யும் கலை - ‘Paraphraser’. இதன் ‘Paraphraser’ பகுதியில், ‘Standard’, ‘Fluency’, ‘Formal’, ‘Creative’, ‘Academic’, ‘Shorten’ போன்ற பல பயன்முறைகள் (Modes) உள்ளன. நாம் எழுதிய சொற் றொடர்களை இதில் பதிவிட்டால் அதன் பொருள் மாறாமல், நாம் தேர்ந்தெடுக்கும் வகைக்கு ஏற்ப சொற்றொடர் அமைப்பையும் சொற்களையும் நொடிகளில் மாற்றியமைத்துத் தருகிறது.

பிழைதிருத்தியும் குறிப்பாகச் சுருக்குதலும் - ‘Grammar Checker & Summarizer’ இதன் இலக்கணச் சரிபார்ப்பு (Grammar Checker) வசதியைப் பயன்படுத்தி, சொற்றொடர்களில் இருக்கும் எழுத்துப் பிழைகள், நிறுத்தற்குறிகள், இலக்கணப் பிழைகளை உடனுக்குடன் சரிசெய்துகொள்ளலாம். மேலும், ‘Summarizer’ உதவியுடன் பல பக்கக் கட்டுரைகளின் முக்கியக் கருத்துகளை மட்டும் சுருக்கிக் குறிப்புகளாக மாற்றிக்கொள்ளவும் முடியும்.

நகலைக் கண்டறிவதும் செய் யறிவுக் கண்டு பிடிப்பானும் - ‘Plagiarism Checker, AI Detector, AI Humanizer’ கல்விசார் பணிகளில் பிறரின் கருத்துகளை அப்படியே நகலெடுப்பது (Plagiarism) பெருங்குற்றமாகும். இதில் இருக்கும் Plagiarism Checker, நமது கட்டுரையின் பகுதிகள் இணையத்தில் வேறு எங்காவது ஏற்கெனவே வெளியாகியுள்ளனவா என்பதைச் சரிபார்த்துச் சொல் கிறது.

இதன் AI Detector வசதியைப் பயன்படுத்தி, ஒரு கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் செய்யறிவால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தைக் கண்டறிந்து விட முடியும். மறுபுறம், ‘AI Humanizer’ அம்சத்தைப் பயன்படுத்தி செய்யறிவால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தை மனிதரால் எழுதப்பட்டதுபோல் மாற்றியமைக்கவும் முடியும்.

மொழிபெயர்ப்பும் மேற்கோள் உருவாக்கமும் - ‘Translator & Citation Generator’ முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் துல்லியமான மொழிபெயர்ப்புகளைச் செய்யும் வசதியும் இதில் உள்ளது. மேலும், ஆய்வுக் கட்டுரைகளுக்கான மேற்கோள்களையும் (Citations) இதைப் பயன்படுத்தி உருவாக்க இயலும்.

இணைய உலாவிகளுடன் இணைக்கும் வசதி - ‘Browser Extension & Integrations’ QuillBot தளத்தை நேரடியாகப் பயன்படுத்துவது மட்டுமன்றி, Chrome Extension, Microsoft Word, Gmail போன்ற செயலிகளுடனும் எளிதாக இணைத்துக்கொள்ள முடியும். இதன் மூலம் மின்னஞ்சல் எழுதும் போதும் ஆவணங்களில் வேலை செய்யும்போதும் திருத்தங்களை அங்கேயே மேற்கொள்ள முடிகிறது.

யாருக்குப் பயன்படும்? - மாணவர்கள், ஆராய்ச்சி யாளர்கள், ஆசிரியர்கள், எழுத் தாளர்கள், பத்திரிகையாளர்கள், சந்தைப்படுத்துபவர்கள், உள்ளடக்க உருவாக்குநர்கள் (Content creators), பிழை யின்றி எழுத விரும்பும் தொழில் துறையினர். இன்றைய எண்ணி லக்க யுகத்தில் (Digital era) கருத்துப் பரிமாற்றத்தையும் எழுத்துப் பணிகளையும் மிக எளிமையாகவும் தரமாகவும் மேற்கொள்ள QuillBot பேருதவி புரிகிறது.

https://quillbot.com/

- மேலும் கற்கலாம்.

- கட்டுரையாளர், பேராசிரியர், தொழில்நுட்ப எழுத்தாளர்.

ஸ்டூடியோ இல்லாமலே வீடியோ! | எளிதில் கற்கலாம் ஏஐ 5

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு: முன்னாள் திமுக மண்டலத் தலைவர் கணவரிடம் விசாரணை
மதுரை: திமுக ஆட்சியில் மேயர், மண்டலத் தலைவர்கள் ராஜினாமா செய்யும் அளவுக்கு பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்திய மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு வழக்கு தற்போது மீண்டும் வேகமெடுத்துள்ளது. இதையடுத்து, முன்னாள் மண்டலத் தலைவர் புவனேஸ்வரியின் கணவர் சரவணனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று குற்றப்பிரிவு போலீஸார் விசாரிக்கின்றனர்.

மதுரை மாநகராட்சி 100 வார்டுகளில் திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், விடுதிகள், ஹோட்டல்கள், மற்றும் மருத்துவமனைகள் உள்ளிட்டவைகளுக்கு சொத்து வரி நிர்ணயம் செய்தது தொடர்பாக கடந்த அரை நூற்றாண்டாக பல்வேறு முறைகேடுகள் நடந்து வந்துள்ளது. குறிப்பாக கடந்த 2022-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு ஜூலை 31 வரையில் நடந்த முறைகேடுகளை ஆய்வு செய்ததில் ரூ.1.50 கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது.

அப்போது, மாநகராட்சி ஆணையாளராக இருந்த தினேஷ்குமாரின் ‘பாஸ்வேர்டு’களை திருடி, இந்த முறைகேடு நடந்திருந்தது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விசாரிக்க தினேஷ்குமார், சைபர் கிரைம் போலீஸில் புகார் செய்தார். மேலும், நான்கு பில் கலெக்டர்களையும் ‘சஸ்பெண்ட்’ செய்து நடவடிக்கை எடுத்தார். பில் கலெக்டர்கள் அவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினேஷ்குமாருக்கு அரசியல் நெருக்கடி ஏற்படவே, ‘சஸ்பெண்ட்’ செய்தவர்கள் உத்தரவை வாபஸ் பெற்றார். அதன்பிறகு போலீஸார் இந்த சொத்து வரி முறைகேடு விசாரிக்கப்படாமலே புகாரோடு கிடப்பில் போட்டுவிட்டனர்.

இந்நிலையில், ஆணையாளராக வந்த சித்ரா, சொத்து வரி முறைகேட்டை தூசிதட்டி மீண்டும் விசாரிக்கத் தொடங்கினார். கிடப்பில் கிடந்த சைபர் கிரைம் புகாரை விசாரிக்க போலீஸாருக்கு அழுத்தம் கொடுத்தார்.

அதன் அடிப்படையில் முன்னாள் மேயர் இந்திராணி கணவர் பொன் வசந்த், வரிவிதிப்புக்குழு தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன், உதவி ஆணையர்கள், முன்னாள் உதவி ஆணையர், மாநகராட்சி ஊழியர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள் என 25 பேர் வரை போலீஸார் கைது செய்தனர். ஆணையாளராக இருந்த சித்ரா, உதவி ஆணையாளர் உள்பட 19 பேரை ‘சஸ்பெண்ட்’ செய்து நடவடிக்கை எடுத்து சொத்து வரி முறைகேட்டை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்.

மேலும், மின்சார வாரியத்திடம் (TANGEDCO) இருந்து வணிகரீதியான மின் இணைப்பு (Commercial EB connection) பெற்ற கட்டிடங்களின் விவரங்களைப் பெற்று, அதன் அடிப்படையில் கள ஆய்வு மேற்கொண்டார். அவரின் இந்த நடவடிக்கையால் மாநகராட்சிக்கு 10 சதவீதம் வருவாய் அதிகரித்தது.

முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின், விசாரணைக்கு ஒத்துழைக்கக் கூறி கடந்த சட்டப்பேரவை நேரத்தில் மேயர் இந்திராணி, ஐந்து மண்டலத்தலைவர்களையும் பதவி விலகக் கூறினார். அவர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

அன்று முதல் தற்போது வரை, மதுரை மாநகராட்சி நிர்வாகம், மேயர், ஐந்து மண்டல தலைவர் இல்லாமல் நிர்வாகம் நடக்கிறது. மதுரை மாநகராட்சியின் சொத்து வரி மறுசீராய்வை முன் உதாரணமாக கொண்டு கடந்த திமுக ஆட்சியிலேயே தமிழகம் முழுவதும் அனைத்து மாநகராட்சிகளிலும் அனைத்து வீட்டுவரி, சொத்து வரியை மறுசீராய்வு செய்வதற்கு ஆய்வுகள் தொடங்கப்பட்டன.

சொத்து வரி முறைகேட்டில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக தொடர்ந்த வழக்கில் மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மதுரை சரக டிஐஜி அபினேவ்குமார் தலைமையில் மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் வினோதினி, ஆய்வாளர் அன்னலட்சுமி உள்ளிட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கை விசாரித்தனர்.

ஆனால், இந்த விசாரணையும் அப்படியே கிடப்பில் போடப்பட்டிருந்தது. போலீஸார், முறைகேடுகளில் ஈடுபட்ட சில மண்டலத் தலைவர்களை தப்பிக்க விட்டதாகவும், தொடர்புடைய பல அதிகாரிகள் விரைவாக ஜாமீனில் வெளிவருவதற்கும் மறைமுகமாக உதவியாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

தற்போது ஆட்சிமாற்றத்திற்குப் பிறகு மீண்டும் சொத்துவரி முறைகேடு விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில் ஒரு வாரத்தில் இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக, முறைகேட்டில் தொடர்புடைய சில மாநகராட்சி அதிகாரிகளை மீண்டும் சம்மன் அனுப்பி விசாரித்துள்ளனர்.

இந்நிலையில் சொத்து வரி முறைகேட்டில் நேரடியாக தொடர்புடைய ஒரு ஆண் மண்டலத்தலவர் உள்பட நான்கு மண்டலத்தலைவர்களை விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸார் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கூறுகையில், ‘‘உதவி ஆணையாளர் வினோதினி தலைமையில் போலீஸார் நேற்று அதிகாலை 5 மணியளவில் மண்டலம் 3 முன்னாள் தலைவர் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

தூங்கிக் கொண்டிருந்த அவருடைய கணவர் சரவணனை எழுப்பி குதிரைப்படை பகுதியிலுள்ள மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

இதுபோல், மற்ற முன்னாள் மண்டலத்தலைவர் முகேஷ்சர்மா, மண்டலம்-3 மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி கணவர் மிசா பாண்டியன், மண்டலம்-5 மண்டலத் தலைவர் கணவர் விமல் ஆகியோரிடமும் விசாரிக்கவும், அவர்களை அழைத்துவர போலீஸார் அவர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

போலீஸார் வருவதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட அவர்கள், வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களது செல்ஃபோன்களும் அனைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் குடும்பத்தினரிடம் விசாரணைக்கு ஒத்துழைக்க நேரில் ஆஜராகும்படி அறிவுரை வழங்கப்பட்டுள்ளது, ’’ என்றனர்.

இந்த சொத்து வரி வரிமுறைகேடு விவகாரத்தில் அதிகாரிகளுக்கும், மண்டலத் தலைவர்களுக்கும் பாலமாக செயல்பட்ட முக்கிய விஐபி ஒருவரும் சிக்குவதாக போலீஸ் தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பஞ்சாப்பில் 13.60 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்: எஸ்ஐஆருக்கு பிந்தைய இறுதிப் பட்டியல் வெளியீடு

“மருத்துவப் பணியாளர்களின் அடிப்படை உரிமைகளை கூட உறுதி செய்யாதது மக்கள் நல அரசா?” - வேல்முருகன்
சென்னை: ‘மக்களின் உயிரைக் காக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கே பணிப் பாதுகாப்பும் அடிப்படை உரிமைகளும் உறுதி செய்யப்படாத நிலையில், “மக்கள் நல அரசு” எனத் தம்பட்டம் அடித்துக் கொள்வது ஏன்?' என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘மக்களின் உயிரைக் காக்கும் மருத்துவப் பணியாளர்களே, தங்களுடைய பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு, ஊதிய உயர்வு, நிலுவைத் தொகைகள் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளுக்காக வீதியில் இறங்கிப் போராட வேண்டிய அவலநிலை தமிழ்நாட்டில் தொடர்வது வேதனைக்குரியது.

அக்டோபர் 5 அன்று 500-க்கும் மேற்பட்ட இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்குப் பின்னர் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டாலும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், அக்டோபர் 12 அன்று 2,500-க்கும் மேற்பட்ட பல்நோக்கு மருத்துவப் பணியாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்த முயன்றனர். அவர்களில் 200-க்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மருத்துவப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, அவர்களின் போராட்டத்தைத் தடுக்கும் வகையில் காவல்துறை முன்கூட்டியே நடவடிக்கை மேற்கொண்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

கோரிக்கைகளைப் பரிசீலிக்க அரசுக்கு கால அவகாசம் தேவை என்றால், தங்களுடைய உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் பணியாளர்களைத் தடுத்து நிறுத்துவது ஏன்? போராட்டத்தைத் தடுப்பது நிர்வாகத்தின் வெற்றியா? அல்லது போராட்டத்திற்கான காரணத்தைத் தீர்ப்பதுதான் ஆட்சியின் கடமையா?

மக்களின் உயிரைக் காக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கே பணிப் பாதுகாப்பும் அடிப்படை உரிமைகளும் உறுதி செய்யப்படாத நிலையில், “மக்கள் நல அரசு” எனத் தம்பட்டம் அடித்துக் கொள்வது ஏன்?

ஆட்சி மாறும்போது அரசின் அணுகுமுறையும் மாற வேண்டும். போராட்டம் நடத்தும் மக்களைத் தடுப்பது மட்டுமே நிர்வாகத்தின் அணுகுமுறையாக இருக்கக் கூடாது. அவர்களின் கோரிக்கைகளை நேர்மையாகக் கேட்டு, உரிய காலக்கெடுவுக்குள் தீர்வு காண்பதே பொறுப்பான ஆட்சியின் அடையாளமாகும்.

தமிழ்நாடு அரசு, மருத்துவப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அவர்களைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும். பணி நிரந்தரம் உள்ளிட்ட அவர்களின் அடிப்படை உரிமைகளுக்கு உரிய தீர்வு வழங்க வேண்டும்' என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

வேலுமணி தலைமையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் ஆலோசனை: கட்சியை கைப்பற்றி தவெக அரசுக்கு ஆதரவளிக்க ரகசிய திட்டம்?

கிருஷ்ணகிரி அருகே வெறிநாய் கடித்து 7 பேர் காயம்
கிருஷ்ணகிரி: குருபரப்பள்ளி அருகே வெறிநாய் கடித்ததில் 7 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம் குருபரப்பள்ளி கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட நாய்கள் தெருக்களில் சுற்றித் திரிகிறது. நாளுக்கு, நாள் அதிகரித்து வரும் நாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று, இன்று என இரண்டு நாட்களில் வெறிநாய் ஒன்று திடீரென குருபரப்பள்ளி கிராமத்தில் சாலையில் நடந்து செல்பவர்களை துரத்தி, துரத்திக் கடித்துள்ளது. குருபரப்பள்ளி வேணுகோபால் தெருவில் வசிக்கும் சரஸ்வதி, விபுஷணன், அரிச் சரண், ஞானவேல், தாண்டவன் உட்பட 7 பேரை நாய் கடித்துள்ளது. நாய் கடியில் பாதிக்கப்பட்டவர்கள், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து, வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் சாவித்திரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ், ஊராட்சி செயலாளர் முருகன், சுகாதாரத்துறை கடலரசு ஆகியோர் குருபரப்பள்ளியில் ஆய்வு செய்தனர். பின்னர், பொதுமக்கள் உதவியுடன் வெறிநாயைப் பிடித்து கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குருபரப்பள்ளியில் வெறிநாய் கடித்ததில் 7 பேர் காயம் அடைந்த நிலையில், வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் சாவித்திரி தலைமையில் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

இதுதொடர்பாக குருபரப்பள்ளியைச் சேர்ந்த வேல்முருகன் கூறும்போது, “எங்கள் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. அவ்வாறு சுற்றித் திரியும் நாய்கள் ஓட்டல்கள், இறைச்சிக் கடைகளில் வெளியே வீசப்படும் கழிவுகளை சாலையில் இழுத்துக் கொண்டு, ஒன்றை ஒன்று துரத்தி ஒடும் போது, இருசக்கர வாகனங்களில் வரும் வாகன ஓட்டிகள், நாய்கள் மீது மோதி கீழே விழுந்து படுகாயம் அடைந்து செல்லும் சம்பங்கள் நடக்கின்றன.

இதே போல் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள், சண்டையிடும் நாய்களை அச்சத்துடன் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நாய்களைப் பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்து, தடுப்பூசிகள் போட ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

தங்கம் விலை தொடர் சரிவு: இரண்டு நாட்களில் பவுனுக்கு ரூ.1,560 குறைவு

‘டெட்’ சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
சென்னை: பணியில் உள்ள ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட சிறப்பு டெட் தேர்வுக்கான முடிவுகள் நேற்று நள்ளிரவு  வெளியிடப்பட்டன.

ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் ஆகும். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஏற்கெனவே பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கும் இது பொருந்தும். இந்நிலையில், பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வு கடந்த ஜூலை 4 மற்றும் 5-ம் தேதி நடத்தப்பட்டது.

இடைநிலை ஆசிரியர்களுக்கான டெட் தாள்-1-ஐ 59 ஆயிரம் பேரும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான டெட் தாள்-2-ஐ 1.61 லட்சம் பேரும் எழுதினர். டெட் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், ஆசிரியர்களுக்கு பணிக்காலத்துக்கு ஏற்ப கருணை மதிப்பெண் வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கில், சிறப்பு டெட் தேர்வு முடிவுகளை வெளியிட உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்தச் சூழலில் கடந்த 1-ம் தேதி இடைக்கால தடையை நீக்கிய உயர் நீதிமன்றம், தேர்வு முடிவுகளை வெளியிடவும் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து, சிறப்பு டெட் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான இறுதிக் கட்டப் பணிகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தன.

இந்நிலையில், சிறப்பு டெட் தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று நள்ளிரவு வெளியிட்டது. தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.gov.in) தேர்வர்கள் அறிந்துகொள்ளலாம்.

ரெப்போ வட்டி விகித உயர்வு: பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சி

டெல்லி ஜந்தர் மந்தரில் தடையை மீறி போராட முயற்சி: சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா கைது
புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் தடையை மீறி போராட முயன்ற சிஜேபி கட்சியினரை கைது செய்தது காவல் துறை. அது குறித்து விரிவாக பார்ப்போம்.

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டங்கள் நடத்த இனிமேல் அனுமதி அளிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக 3 புதிய இடங்களை டெல்லி காவல் துறை அறிவித்துள்ளது. இந்தச் சூழலில் தடையை மீறி இன்று (அக்.13) காலை சிஜேபி கட்சியினர் ஜந்தர் மந்தரில் போராட முயன்றனர். அப்போது போலீஸார் அவர்களை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

சிஜேபி கட்சியைச் சேர்ந்த சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா, அஜிங்கியா ஷிண்டே உட்பட சிலரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

“கரப்பான்கள் இன்று காலை மூவர்ணக் கொடியுடன் ஜந்தர் மந்தரில் நுழைந்தனர். அதன் பின்னர் அவர்களை போலீஸார் கைது செய்தனர். சவுரவ் தாஸ், அசுதோஷ், அஜிங்கியா மற்றும் சிலர் கைதாகி உள்ளனர். எங்களது எதிர்ப்பை நீங்கள் எந்தப் பட்டியலில் இருந்தும் நீக்க முடியாது” என்று பிரதமர் மோடியை டேக் செய்து சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

“ஜந்தர் மந்தர் மீட்கப்பட்டது. போராட்ட களத்துக்குள் நுழைந்த எங்களை போலீஸார் கைது செய்துள்ளனர். ஆனால், இதன் மூலம் இளம் தலைமுறையினருக்கு ஒரு செய்தி சொல்ல விரும்புகிறேன். நம்மால் முடியும்” என்று சவுரவ் தாஸ் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டது தொடர்பான அறிவிப்பு வெளியானது. அதற்கு அபிஜித் திப்கே, காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் தங்களது கண்டனத்தை தெரிவித்திருந்தனர். டெல்லியில் மக்களுக்கு இடையூறு இல்லாமல் போராடுவதற்கான மாற்று இடங்களாக ராம்லீலா மைதானம், புராடி மைதானம், கிழக்கு டெல்லியின் சிபிடி மைதானத்தில் போராட்டங்கள் நடத்த அனுமதி வழங்கப்படும் என டெல்லி காவல் துறை தெரிவித்துள்ளது.

Cockroaches with the Tiranga sneaked into Jantar Mantar early this morning before they were picked up by Delhi Police.

@AshutoshRanka, @SauravDassss, @AjinkyaCJP along with other team members have been detained.

You cannot denotify the resistance, @narendramodi https://t.co/x7B40akCVO
— Abhijeet Dipke (@abhijeet_dipke) October 13, 2026

தங்கம் விலை தொடர் சரிவு: இரண்டு நாட்களில் பவுனுக்கு ரூ.1,560 குறைவு

அறம் எனும் பெருங்கனவு!
கருவாகக் குழந்தை உருவானதுமே எந்தப் பள்ளியில் சேர்க்கலாம் என்கிற தேடல் தம்பதியர் பலருக்கு இப்போதெல்லாம் தொடங்கிவிடுகிறது.

நடுத்தர வர்க்கத்தின் பொருளாதார வளர்ச்சி, ஆடம்பரங்கள் மீதான பேராசையை உருவாக்கியுள்ளது. ‘பிராண்டட்’ மோகத்தால் அதிக விலைக்கு வாங்குவதே அதிகப் பெருமிதம் என்றாகிவிடுகிறது.

கல்வியும்  ‘பிராண்ட்’ ஆகியுள்ளது.  பள்ளிக்கு ஏற்பப் பணம். எளிய மக்களும் கூட ‘பிறர் ஏளனமாகப் பேசுவார்கள்' என்கிற பயத்தோடு பள்ளியைத் தேட வேண்டியக் கட்டாயம். பணம், பெருமைக்கு ஏற்பப் பள்ளிகள் மாபெரும் வியாபார மையங்களாக வளர்ந்துள்ளன.

தனி மனிதருக்கு, குடும்பத்துக்கு, சமூகத்துக்குக் கல்வி என்ன தருகிறது? கல்வி குறித்த நமது புரிதல் என்ன? சமூகத்தின் அத்தனை அவலங்களையும் கல்வியால் மட்டுமே மாற்றிவிட இயலுமா? இப்படியான கேள்விகள் விடைதேடி அலைகின்றன.

எதிர்பார்ப்புகள் பல..

‘கல்வி எப்படி இருக்க வேண்டும்?’ என்கிற கேள்வியை, சமூக ஊடகங்களின் வழியே கேட்டிருந்தேன். பல்வேறு பணிகளில் இருப்பவர்கள், ஆசிரியர்கள், மாணவர்களிடமிருந்து ஏராளமான பதில்கள் வந்தன.

‘படைப்பாற்றலை வளர்ப்பதாக, குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி, விறு விறுப்பாக, பிரம்மாண்டமாக, அன்றாட வாழ்க்கையின் பிரதிபலிப்பாக இருக்க வேண்டும். தனித் திறமைகளைத் தட்டிக் கொடுத்து வளர்க்க வேண்டும்.

வெறும் புத்தக அறிவோடு நின்றுவிடாமல், மனப்பாடம் செய்வதைத் தவிர்த்து, மாணவர் களின் சிந்திக்கும் திறனை வளர்ப்பதாக, அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான நற்பண்புகளையும், வாழ்வாதாரத்துக்கான திறன்களையும் கற்றுத் தருவதாக இருக்க வேண்டும்.

சாதி, மதம், ஏழை, பணக்காரன் என்கிற பாகுபாடின்றி அனைவருக்கும் தரமான கல்வி சமமாகக் கிடைக்க வேண்டும். வாழ்வை எதிர்கொள்ளத் தேவையான தெளிவைத் தர வேண்டும். கற்றல், கற்பித்தல், ஆசிரியர், மாணவர், வகுப்பறை இவற்றுக்குள் நடைபெறும் ஆகச் சிறந்த ஊடாடலே கல்வி. மனிதர்களை உருவாக்க வேண்டும்.

தன்னையும் சமூகத்தையும் சுற்றுச்சூழலையும் அறிந்துகொண்டு நற்செயலாற்றும்  அறிவைத் தூண்டுவதாக இருக்க வேண்டும். மெல்ல, சராசரி, வேகமாகக் கற்போர் போன்ற வேறுபாடுகள் இல்லாத கல்வி வேண்டும்.

அன்பையும் உன்னதத்தையும் பகிர்ந்து, சிறகுகள் முளைக்கும் வகுப் பறையாகத்  தொடர வெளிச்சம் தரும் கருவியாக, சுயமாகச் சிந்திக்க வைப்பதாக இருக்க வேண்டும். மரத்தடி வகுப்பு, விளையாட்டுக் கல்வி,  எதார்த்த சூழல் என அறிதல், உணர்தல் கல்வியே சிறப்பு! ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் வேலை வாங்காமல் குழந்தைகளுக்கு ஏதுவாக இருக்க வேண்டும்.

கல்வியோடு தொழில்நுட்பக் கல்வியும் இணைந்து இருக்க வேண்டும் போட்டி மனப்பான்மை இருக்கக் கூடாது’ - இப்படி ஏராளமான கருத்துகள் வந்தன.

இவை எல்லாமே காலங்காலமாகக் கல்வி மீது அக்கறை கொண்டவர்களின் கனவுகள், எளிய மக்களின் ஆசைகள், நம்பிக்கைகள். இவை ஒவ்வொன்றையும் எடுத்துக்கொண்டு ஆழமான கலந்துரை யாடலை மேற்கொள்ளலாம். அதிலிருந்து ஏராளமான கேள்விகள் கிளைக்கும்.

கேள்வியைத் தொடரும் கேள்விகள்

படைப்பாற்றலை வளர்க்கும் கல்வி வேண்டும் என்பதை எடுத்துக்கொள்வோம். படைப்பாற்றல் என்றால் என்ன? கல்வியால் படைப்பாற்றல் வளர்கிறதா? ஒவ்வொரு பாடத்திலும் படைப்பாற்றலுக்கான இடம் என்ன? கற்பித்தலில் படைப்பாற்றலின் பங்கு என்ன? படைப்பாற்றலை வளர்க் கும் செயல்பாடுகளை எவ்வாறு உரு வாக்குவது என ஏராளமான கேள்விகளை எழுப்பி, அவை குறித்துக் கலந்துரையாட முடியும். இப்படி ஆழமாகக் கலந்துரையாடும்போது புதிய சிந்தனைகள், செயல்பாடுகள் உருவாகலாம்.

இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டுதான் நமது கல்விமுறை உருவாக்கப்பட்டு இருக்கிறதா? கல்வியின் மீது இவ்வளவு எதிர்பார்ப்புகளை வைத்துள்ளவர்களுக்கு, பள்ளியில் என்ன நிகழ்கிறது, புத்தகங்களில் என்ன பாடங்கள் இருக்கின்றன  என்று ஏதேனும் தெரியுமா?

ஆசிரியரின் குரல்

‘வெளியிலிருந்து ஆயிரம் சொல்ல லாம், வகுப்பறைக்குள் எவ்வளவு சிக்கல்கள் இருக்கின்றன தெரியுமா?’ என்று ஆசிரியர்கள் எழுப்பும் குரலும் முக்கியமானது. இன்றைய வளரிளம் பருவத்தினரின் நடத்தைச் சிக்கல்கள், பழக்கங்கள், சமூக ஊடகங்களின் தாக்கம் ஆகியவற்றின் பாதிப்புகளும் ஏராளம்.

தங்கள் பிள்ளையை எவ்வாறு நெறிப் படுத்துவது என்பது தெரியாமல் தவிக்கும் நிலையில், பெரும்பாலான பெற்றோர்கள்  இருக்கிறார்கள். எனவேதான் சமூகமும் பெற்றோரும் தங்களது தவறுகளை, இயலா மையை மறைக்கக் கல்வி நிறுவனத்தின் மீது குற்றங்களைச் சுமத்துகிறார்கள்.

அறம் மிக்க மனிதராக ஒரு குழந்தையை உருவாக்கும் கல்விமுறை என்பது உலகெங்கும் பெருங்கனவு. கல்வியில் இன்றைய நிலை குறித்து உலக அளவில் ஏராளமான  நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் திடுக்கிடும் தகவல்களைச் சொல்கின்றன.

கல்வியில் சிறந்த நாடுகள் என நாம் நம்பும் நாடுகளும் தங்களது கல்வி அமைப்பின் மீது கேள்விகளை எழுப்பத் தொடங்கியுள்ளன. கல்வி மீது கேள்விகளை எழுப்பக் காரணமான அறிக்கை என்னதான் சொல்கிறது?

(தொடர்ந்து பேசுவோம்!)

- தொடர்புக்கு: artsiva13@gmail.com

ஆய்வுபூர்வ சிந்தனையை வளர்ப்பது எப்படி?

“ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு கொள்முதல்; மின்வாரியம் முடங்கும் அபாயம்” - அன்புமணி எச்சரிக்கை
சென்னை: “தமிழகத்தில் மின்பற்றாக்குறையை சமாளிக்க ஒரு யூனிட் ரூ.35 என்ற விலையில் 4500 மெகாவாட் மின்சாரம் வாங்குவதால் ரூ. 1 லட்சம் கோடிக்கும் கூடுதலான இழப்பு ஏற்பட்டு, மின்சார வாரியம் செயல்பட முடியாமல் முடங்கிவிடும் அல்லது மின்சாரக் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்” என பாமக தலைவர் அன்புமணி எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறையை சமாளிக்க சராசரியாக ஒரு யூனிட் ரூ.35 என்ற விலையில் 4500 மெகாவாட் மின்சாரத்தை வாங்க தனியார் நிறுவனங்களுடன் மின்வாரியம் ஒப்பந்தம் செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இன்றைய சூழலில் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்றாலும் கூட, இதே நிலை நீடித்தால் நிலைமையை சமாளிக்க முடியாது என்பதால் மாற்று ஏற்பாடுகளை ஆராய வேண்டும்.

தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அறிவிக்கப்படாத மின்வெட்டு செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதை சமாளிப்பதற்காக வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் வாங்க தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்திருக்கிறது.

அதன்படி 4500 மெகாவாட் மின்சாரம் வாங்குவதற்காக ஒப்பந்தப்புள்ளிகளை கோரி இருந்த மின்சார வாரியம், ஒப்பந்தப் புள்ளி தாக்கல் செய்திருந்த தனியார் மின் நிறுவனங்களிடம் ஒரு யூனிட் ரூ.31.99 முதல் ரூ.37 வரையிலான விலையில், அதாவது சராசரியாக, ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35 என்ற விலையில் வாங்க ஒப்பந்தம் செய்திருக்கிறது. இந்த விலை இதுவரை இல்லாத உச்சமாகும்.

சில வாரங்களுக்கு முன்பே முயன்றிருந்தால் இதை விட குறைந்த விலையில் மின்சாரம் வாங்கியிருக்க முடியும். ஆனாலும், நாடு முழுவதும் மின்சாரத்தின் தேவை சமாளிக்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில், அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதைத் தவிர மின்வாரியத்திற்கு வேறு வழியே இல்லை என்று கூறப்படுகிறது.

இது தற்காலிக ஏற்பாடு தான் என்றாலும், இதே நிலை மேலும் பல மாதங்களுக்கு தொடரும் பட்சத்தில் மின்சார வாரியம் சந்திக்கவிருக்கும் இழப்பு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும் என்று தெரிகிறது. ஒரு மெகாவாட் மின்சாரத்தைக் கொண்டு ஒரு மணி நேரத்திற்கு 1000 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்த முடியும். அதன்படி, 4,500 மெகாவாட் மின்சாரத்தைக் கொண்டு ஒரு மணி நேரத்திற்கு 45 லட்சம் யூனிட் மின்சாரத்தையும், ஒரு நாளின் 24 மணி நேரத்தில் 10.80 கோடி யூனிட் மின்சாரத்தையும் பயன்படுத்த முடியும்.

வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை சராசரியாக ரூ.7 என்ற விலைக்கு மட்டுமே மின்சார வாரியம் விற்பனை செய்கிறது. தமிழக அரசால் இலவச மின்சாரத்திற்கான மானியம் மற்றும் இழப்பீடாக ஆண்டுக்கு சுமார் ரூ.32 ஆயிரம் கோடி வழங்கப்படும் நிலையில், அதையும் சேர்த்தால்  ஒரு யூனிட் மின்சாரத்திற்கான விலையாக மின்வாரியத்திற்கு ரூ.10.32 மட்டுமே கிடைக்கும். ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35க்கு வாங்கி, ரூ.10.32க்கு விற்பனை செய்தால் ரூ.24.68 இழப்பு ஏற்படும். ஒரு நாளைக்கு  10.80 கோடி யூனிட்டுகளுக்கு ரூ.266.54 கோடி இழப்பு ஏற்படும். ஆண்டுக்கு ரூ.97.288.56 கோடி இழப்பு ஏற்படும்.

இது இப்போது கூடுதலாக வாங்கப்படும் மின்சாரத்தின் மூலம் ஏற்படும் இழப்பு மட்டுமே. மேலும், 15% மின்சார இழப்பு, வேறு ஆதாரங்களில் இருந்து வாங்கப்படும் மின்சாரத்தின் இழப்பு ஆகியவற்றின் மூலம்  ஏற்படும் இழப்பு ஆகியவற்றையும் கணக்கில் கொண்டால் மொத்த இழப்பு ரூ.1.20 லட்சம் கோடியைத் தாண்டும்.

மின்சார வாரியம் ஏற்கனவே ரூ.2.47 லட்சம் கோடி கடனுடன் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. வாங்கிய கடனுக்கான வட்டியாக மட்டும் ஆண்டுக்கு ரூ.10,000 கோடிக்கும் கூடுதலாக மின்வாரியம் செலுத்துகிறது. அத்துடன், அதிக விலைக்கு 4,500 மெகாவாட் மின்சாரம் வாங்குவதால் ஏற்படும் ரூ. 1 லட்சம் கோடிக்கும் கூடுதலான  இழப்பையும் சேர்த்தால் தமிழ்நாடு மின்சார வாரியம் இன்னும் ஓராண்டுக்கு கூட செயல்பட முடியாமல் முடங்கி விடும் அல்லது மின்சாரக் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். இவை இரண்டுமே தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லதல்ல.

தமிழ்நாடு இப்படி ஒரு நெருக்கடியான நிலையை எதிர்கொள்வதற்கு காரணம் தமிழ்நாடு மின்வாரியத்தால் அறிவிக்கப்பட்ட அனல் மின்திட்டங்கள் குறித்த காலத்தில் நிறைவேற்றப்படாதது தான். தமிழ்நாட்டின் சராசரி மின்தேவை 22,000 மெகாவாட்டாக இருக்கும் நிலையில், அதில் தமிழ்நாடு மின்சார வாரியம் அதன் சொந்த அனல் மின் நிலையங்கள் மூலம் நேற்று உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தின் அளவு 3216 மெகாவாட் மட்டுமே.

தமிழ்நாட்டில் கடந்த 20 ஆண்டுகளில் 2900 மெகாவாட் அளவுக்கு மட்டும் தான் அனல் மின்திட்டங்கள்  செயல்படுத்தப்பட்டுள்ளன.  கடந்த பத்தாண்டுகளில் 800 மெகாவாட் திறன் கொண்ட வடசென்னை மூன்றாம் நிலை அனல் மின்நிலையம் மட்டுமே கடந்த ஜனவரி மாதத்தில் தான் வணிக அடிப்படையிலான மின்னுற்பத்தியை தொடங்கியுள்ளது.

பத்தாண்டுகளுக்கு முன் அடிக்கல் நாட்டப்பட்ட 1320 மெகாவாட் திறன் கொண்ட உடன்குடி அனல்மின் நிலையப் பணிகள் 95% அளவுக்கும், 1320 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் நிலையம் அமைக்கும் பணிகள் 75% அளவுக்கும் மட்டுமே நிறைவடைந்துள்ளன. உப்பூரில் 1600 மெகாவாட் அனல் மின்நிலையம் அமைக்கும் பணிகள் 35% முடிவடைந்த நிலையில் கிடப்பில் போடப்பட்டுள்ளன. 660 மெகாவாட் எண்ணூர் அனல் மின்நிலைய விரிவாக்கத் திட்டம் எந்த முன்னேற்றமும் இல்லாமல் முடங்கிக் கிடக்கிறது.

இவை தவிர இன்னும் 12 ஆயிரம் மெகாவாட்டுக்கும் கூடுதலான திறன் கொண்ட அனல் மின் திட்டங்கள்  அறிவிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளன. அவற்றில் உடன்குடி தலா 1320 மெகாவாட் திறன் கொண்ட இரு அனல் மின் திட்டங்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் 600 மெகாவாட் அனல் மின் திட்டம் ஆகியவற்றுக்கு  பெயரளவில் மட்டும் சில அடிப்படை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவை தவிர மீதமுள்ள அனல் மின் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக ஆக்கப்பூர்வமாக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

தமிழ்நாட்டின் மின்சாரத் தேவை ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 12% முதல் 15% வரை அதிகரிக்கக் கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் சொந்த மின்னுற்பத்தித் திறனை அதிகரிக்காவிட்டால், இதேபோல் அதிக விலை கொடுத்து தான் மின்சாரம் வாங்க வேண்டியிருக்கும்.

இதை உணர்ந்து தமிழகத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு முடிக்கப்படாமல் இருக்கும் 4900 மெகாவாட் அனல் மின் திட்டங்களையும், அறிவிக்கப் பட்டு எந்தப் பணியும் தொடங்கப்படாமல் இருக்கும் 3240 மெகாவாட் அனல் மின் திட்டங்களையும் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றி முடிக்க வேண்டும்.

இந்த மின்திட்டங்களின் முன்னேற்றத்தையும், அவை எப்போது முடியும் என்பதையும் மக்கள் அறிந்து கொள்வதற்கு வசதியாக இந்தத் திட்டங்களின் செயலாக்க முன்னேற்றம் குறித்த கால அட்டவணையை மின்சார வாரியம் உடனடியாக வெளியிட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

பள்ளிக்கரணையில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி இளைஞர் உயிரிழப்பு

‘வலிகள் நிறைந்த காதல் கதைகள்’ - நடிகை ஐஸ்வர்யா லட்சுமி வெறுப்பு
காதல், டேட்​டிங் செயலிகள், உறவு​களில் ஏற்​பட்​டுள்ள மாற்​றங்​கள் உள்​ளிட்ட தற்​காலக் காதல் குறித்த நடிகை ஐஸ்​வர்யா லட்​சுமி தெரி​வித்​துள்ள கருத்​துகள் கவனத்தை ஈர்த்து வரு​கின்​றன. நெட்ஃபிளிக்​ஸில் வெளி​யான #லவ் தொடரின் புரமோஷனுக்​காக அவர் அளித்துள்ள பேட்டியில், ‘‘டேட்​டிங் செயலிகள் காதலுக்​கான வாய்ப்​பு​களை அதி​கப்​படுத்​தி​யுள்ள போதி​லும், சரி​யான ஒரு​வரைக் கண்​டு​பிடிப்​பதை அது எளி​தாக்​க​வில்​லை.

மாறாக, அவை தரும் அதி​கப்​படி​யான ‘ஆப்​ஷன்​கள்’ குழப்​பத்​தையே ஏற்​படுத்​துகின்​றன. நாம் எங்கு செல்ல வேண்​டும் என்​ப​தில் கூட குழப்​பம் ஏற்​படு​கிறது. தமக்​குப் பிடித்​த​மான ஒரு​வரைக் கண்​டு​பிடிக்க வேண்​டும் என்​பதே அனை​வரின் தேடலாக உள்​ளது. ஆனால் அந்த ஒரு​வரைக் கண்​டு​பிடிப்​பது கடந்த காலங்​களை விட இப்​போது சிக்​கலான விஷய​மாகத் தோன்​றுகிறது.

இன்​றைய தலை​முறை உறவு​களை வர்​ணிப்​ப​தற்​காகப் பயன்​படுத்​தப்​படும் புதிய சொற்​களும் குழப்​பத்தை மேலும் கூட்​டு​கின்​றன. காலம் செல்​லச் செல்ல காதல் குறித்த எனது பார்​வை​யும் மாறி​யுள்​ளது. காதல் என்​பது நிம்​ம​தி​யும் பாது​காப்​பும் ஆகும். மற்​றொரு​வர் முன்​னிலை​யில் நான் நானாகவே இருக்க முடிவது முக்​கி​யம். என்னை பொறுத்​தவரை காதல் என்​றால் அது ‘கம்ஃபர்ட்’ தான். ஒரு துணை​யிடம் நான் முதன்​மை​யாக எதிர்​பார்ப்​பது பாது​காப்​பான உணர்​வை.

என் மனதில் உள்​ளதை வெளிப்​படை​யாகச் சொல்​ல​வும், நான் எப்​படி இருக்​கிறேனோ, அப்​படியே ஏற்​றுக்​கொள்​ளப்​பட​வும் வேண்​டும். அந்த நபரின் முன்​னிலை​யில் ஒரு குழந்​தையைப் போல என்​னால் இருக்க முடிய வேண்​டும். எதை​யும் மறைக்​காமல் வெளிப்​படை​யாகப் பேச வேண்​டும், சுதந்​திரம் உணரப்பட வேண்​டும்.

காதல் உறவில் நட்​புக்​கும் மிக முக்​கிய இடமுண்​டு. திரு​மண​மான எனது நண்​பர்​களில் பலர் காதலர்​களாக மாறு​வதற்கு முன்பு நல்ல நண்​பர்​களாக இருந்​தனர். சினி​மா​வில் தீவிர​மான காதல் கதைகளில் நடிக்க ஆர்​வம் காட்​டி​னாலும், நிஜ வாழ்க்​கை​யில் எனக்கு மகிழ்ச்​சி​யான மற்​றும் எளிமை​யான காதல் கதைகளே பிடிக்​கும். வலிகள் நிறைந்த காதல் கதைகளைக்​ கண்​டு சோர்​வடைந்​து விட்​டேன்​” என்​றார்​.

சிலம்பரசன் வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ ட்ரெய்லர்

ஆய்வுபூர்வ சிந்தனையை வளர்ப்பது எப்படி?
எந்தவொரு  கருத்தையும் மேலோட்டமாக அல்லாமல், ஆழ்ந்து சிந்தித்து, தெளிவு பெற வேண்டும். அதற்குக் கூர்மையாகவும் கவனமாகவும்  கேள்வியை எழுப்பி, சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். அனுமானங்கள், சார்புகளைக் கடந்து புரிதலை ஆழப்படுத்துவதற்கு ஆதாரங்களைத் தீர்க்கமாக மதிப்பிட்டு, பகுப்பாய்வு செய்து, கண்டறிதல்களை ஒருங் கிணைத்து, தர்க்க ரீதியான அறிவை அதில் பொருத்தி, ஆரோக்கியமான விவாதமாக  மாற்ற வேண்டும்.

இதில் தெளிவான முடிவுகளை வெளிப் படுத்த வேண்டும். எதையும் ஆய்ந்தறிந்து தெரிந்துகொள்வதே ஆய்வுபூர்வமான  சிந்தனை  (Critical Thinking). இந்த முக்கியத் திறன்தான் ஆய்வுபூர்வமான மனநிலையுடன் சவால்களை அணுக மாணவர்களுக்குக் கைக்கொடுக்கும். இது நம்பகமற்ற தகவல்களைக் கண்டறிய உதவும். பகுப்பாய்வின் அடிப்படையில் சிறந்த முடிவுகளை எடுக்க ஊக்குவிக்கும்.

நுட்பமான திறன்

கல்வி கற்பதற்கு மட்டுமன்றி, மாண வர்களின் எதிர்கால வாழ்க்கைக்கும் ஆய்வு பூர்வமான சிந்தனை மிகவும் அவசியம். மாணவர்கள் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவ தற்கு, பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு,  கலந்துரையாடல்களில் அர்த்தமுடன் பேசு வதற்கு ஆய்வுபூர்வமான சிந்தனை மிக முக்கியம்.

ஆராய்ச்சியின் ஒவ்வொரு நிலைக்கும் இது தேவை. குறிப்பாக ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதும்போது கடந்த கால ஆராய்ச்சிகளைப் பகுப்பாய்வு செய்யவும், முடிவுகளை எடுத்துக்கூறவும் இந்தத் திறன் மிகவும் தேவை. கடந்த கால ஆய்வுகளின் உண்மைத்தன்மையைக் கண்டறியவும் இந்தத் திறன் கட்டாயமாகிறது.

தன்னம்பிக்கை அதிகரிக்க

ஆய்வுபூர்வமான சிந்தனை கொண்ட வர்கள் நெகிழ்வுத்தன்மையுடன் இருப்பார் கள். மீண்டும், மீண்டும் சோதித்த பின்னரே ஒரு முடிவை அவர்கள் எட்டுவார்கள். வகுப்பறைகளில் நடைபெறும் உரை யாடல்களில் ஆய்வுபூர்வ சிந்தனை கொண்ட மாணவர்கள் தனித்தன்மையுடன் சிறந்து விளங்குவார்கள். விவாதங்களில் அடிப்படைக் கேள்விகளைக் கேட்பார்கள்.

நல்ல தீர்வுகளைத் தன்னம்பிக்கையுடன் வழங்குவார்கள், இதனால் அவர்களின் முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். சிக்கலான உலகில் அவர்கள் தன்னம்பிக் கையுடன் நடைபோட்டு, சிறந்த எதிர் காலத்துக்கு இது  வழிவகுக்கும். எனவே படிப்பு, எதிர்காலம் இரண்டுக்குமே மாணவர்களுக்கு ஆய்வுபூர்வமான சிந்தனை அவசியம்.

சரியா, தவறா?

சமூக வலைத்தளங்கள், இணையத் தளங்கள் மூலம் பல்வேறு தகவல்களைப் பெறும் இன்றைய காலத்தில், அவற்றின் உண்மைத்தன்மையைக் கண்டறிவது மிகவும் அவசியம். அதற்கு இந்த ஆய்வுபூர்வ சிந்தனை அவசியம். மேலும் போலிச் செய்திகளைக் கண்டறியவும் உதவுகிறது.

ஆய்வுபூர்வமான சிந்தனை, தொடர்பு கொள்ளும் திறனுடன் இணைந்தது. ஒரு நல்ல பணியாளருக்கு இந்த இரண்டு திறன்களும் மிகவும் அவசியம். மற்றவர்களுடன் நல்ல முறையில் தொடர்பு கொள்ள வேண்டுமெனில் எண்ணற்ற தகவல்களை மூளையில் பதிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அவற்றைத் திறனுடன் பரிசோதித்து, எப்போது கூறவேண்டும் என்கிற புரிதல் வேண்டும். மற்றவர்களின் தொடர்புகொள்ளும் திறனைத் தெரிந்து

கொள்வதும், தகவல்களின் முக்கியத் துவத்தை அறிந்துகொள்வதும் அவசியம். அப்போதுதான் தொடர்புகொள்ளும் திறன் சிறக்கும். அதற்கு ஆய்வுபூர்வமான சிந்தனை உதவும்.

எதிரிகளை எதிர்கொள்வோம்

ஆய்வுபூர்வமான சிந்தனையைப் பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களிடம் வளர்த்தெடுக்க வேண்டியது அவசியம். இன்றளவும் மனப்பாடம் செய்து படிக்கும் முறை புழக்கத்தில் இருப்பது மாணவர்களிடம் ஆய்வுபூர்வமான சிந்தனை வளரவிடாமல் தடுக்கிறது.

மேலும் தவறு செய்துவிடுவோமோ எனும் அச்சத்தில் மாணவர்கள் பதிலளிக்கத் தவறுவதும் ஆய்வுபூர்வமான சிந்தனையை வளரவிடாமல் செய்கிறது. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பமும் இரண்டு புறமும் கூரான கத்திபோல் மாணவர்களின் ஆய்வுபூர்வமான சிந்தனையை முடக்குகிறது.

அறிவைப் பெருக்கத் தொழில் நுட்பம் வாய்ப்பளிக்கிறது. இதனால் உரிய தகவலுக்குக் கருவிகளைச் சார்ந்திருப் பதால், மாணவர்களின் சிந்திக்கும் திறன் கட்டுப்படுத்தப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பலப்படுத்துவது எப்படி?

வகுப்பறையிலும் வீட்டிலும் புரியாதது பற்றித் தைரியமாகக் கேள்விகள் கேட்க மாணவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். அவர்களுடைய சந்தேகங்களைத் தெளிவாக விளக்க வேண்டும். இதனால் கலந்துரையாடல், விவாதம் நடைபெறும், ஆர்வத்தைத் தூண்டும், தவறு செய்வது குறித்து மாணவர்கள் தேவையற்று வருந்துவது தடுக்கப்படும்.

சுயமாக ஆராய்ச்சி செய்ய மாணவர் களை ஊக்குவிக்க வேண்டும். ஆராய்ச்சிகளில் மாணவர்கள் முடிவுடன் வரும் போது, அவர்கள் ஏன் அந்த முடிவுக்கு வந்தார்கள் என்பது குறித்துக் கேள்விகள் எழுப்ப வேண்டும். ஆதாரங்களின் அடிப்படையில் விவாதங்களை மாண வர்கள் முன்னெடுக்க ஆசிரியர்கள் பழக்க வேண்டும்.

அனுபவபூர்வமான கற்றல் என்பது ஒருவரது அறிவை வளர்க்க உதவும். எனவே, ஏஐ ஆதிக்கம் செலுத்தும் காலத்திலும் ஆய்வுபூர்வமான சிந்தனைத் திறனை வளர்த்தெடுக்க மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும்.

- தொடர்புக்கு: priyadharshini.r@hindutamil.co.in

நெல் வயலில் மீன் வளர்ப்பு: மாத்தி யோசித்த மயிலாடுதுறை விவசாயி

பஞ்சாப்பில் 13.60 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்: எஸ்ஐஆருக்கு பிந்தைய இறுதிப் பட்டியல் வெளியீடு
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் (எஸ்ஐஆர்) பணி முடிந்த நிலையில் இறுதிப் பட்டியல் நேற்று (அக்.12) வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 13.60 லட்சம் வாக்காளர்கள் அந்த மாநிலத்தில் நீக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் எஸ்ஐஆர் பணி கடந்த 2025-ல் தொடங்கியது. மொத்தம் மூன்று கட்டமாக இந்தப் பணி நடைபெறுகிறது. முதல் இரண்டு கட்டங்களுக்கான பணிகள் நடந்து முடிந்த நிலையில் மூன்றாவது கட்டப் பணி 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் நடைபெறுகிறது. மூன்றாம் கட்ட எஸ்ஐஆர் பணியில் பாஞ்சாப் மாநிலமும் ஒன்று.

இந்நிலையில், எஸ்ஐஆர் பணிக்கு பிந்தைய இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. பஞ்சாப் மாநில தலைமை தேர்தல் அதிகாரி அனிந்திதா மித்ரா, இந்தப் பட்டியலை வெளியிட்டார். தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள தரவுகளின் படி கடந்த ஜூன் மாதம் பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் 2.14 கோடி வாக்காளர்கள் இருந்துள்ளனர். அந்த மாநிலத்தில் ஜூன் 24-ம் தேதி எஸ்ஐஆர் பணி தொடங்கியது. இந்த பணி முடிந்து கடந்த ஆகஸ்ட் மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 1.93 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று வெளியான இறுதிப் பட்டியலில் 2.01 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆட்சேபனை மற்றும் வாக்காளர் சரிபார்ப்புக்கு பின்னர் விடுபட்ட தகுதி வாய்ந்த வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தற்போது பஞ்சாப் மாநிலத்தில் 1.03 கோடி ஆண் வாக்காளர்களும், 97.24 லட்சம் பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 506 பேரும் வாக்காளர்களாக உள்ளனர். எஸ்ஐஆர் பணிக்கு பிறகு 13.60 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 117 பேரவை தொகுதிகள் அந்த மாநிலத்தில் உள்ளது. தற்போது ஆம் ஆத்மி கட்சி அங்கு ஆட்சி செய்து வருகிறது.

நாடு முழுவதும் தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. தலைநகர் டெல்லியில் இண்டியா கூட்டணி கட்சியினர், சிஜேபி, ஆம் ஆத்மி உள்ளிட்ட அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள், தன்னார்வலர்கள் என தீவிர போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகி உள்ளது.

மே.இ. தீவு​கள்​ திட்​டங்​களை முறியடித்​தது எப்படி? - மனம்​ திறக்கும்​ அபிஷேக்​ சர்​மா

அமைச்சராகும் மாணவச் செல்வங்கள்!
நாளைய இந்தியாவாக இன்றைய மாணவர்கள் நிமிர்ந்தெழ, அவர்களில் பலர் தலைவர்களாக உயர வேண்டும். இந்த நோக்கத்துடன் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையால் கடந்த 2024இல் ‘மகிழ் முற்றம்’ திட்டம் தொடங்கப்பட்டது.

மாணவர்களிடையே தலைமைத்துவம், ஒழுக்கம், சமூக அக்கறை, ஒற்றுமை, குழுச்செயல்பாடு, முழுமையான ஆளுமை வளர்ச்சியை ஊக்குவிக்க மாதிரி சட்டப்பேரவை, மாதிரி நாடாளுமன்றம் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்ளும் திட்டம் இது.

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நிகழ்வுகளில் மாணவர்களை ஆர்வமுடன் ஈடுபடுத்தி, அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தி, ஒவ்வொரு மாணவருக்கும் சம வாய்ப்பை வழங்கி, அவர்களைத் திறமை யான தலைவர்களாகவும், பொறுப்புள்ள குடிமக்களாகவும் உருவாக்கும் அடித்தளமாக இந்தத் திட்டம் திகழ்கிறது.

மாணவர் அமைச்சர்

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து குழுக்களாக மாணவர்கள் வகுப்பு, பிரிவு வாரியாகப் பிரிக்கப்படு கின்றனர்.  பிறகு, எமிஸ் (EMIS) செயலியில் வடிவமைக்கப்பட்டுள்ள ‘மகிழ் முற்றம்’ பகுதியிலுள்ள set House option மூலம் ஒதுக்கீடு செய்யப்படுகின்றனர்.

இதன்படி, ஒவ்வொரு குழுவுக்கான வகுப்புத் தலைவர்கள் நியமிக்கப் படுகின்றனர். மேலும், மாதந்தோறும் ஐந்து குழுக்களுக்கான வகுப்புத் தலைவர்கள் மாற்றி அமைக்கப்படுவதும் முக்கியத்துவம் பெறுகிறது.

இதன் மூலம் ஒவ்வொரு வகுப்பறையிலும் பெருமளவிலான மாணவர்கள் தலைமைத்துவப் பண்பை வளர்த்துக்கொள்ள நல்வாய்ப்பாக அமைகிறது. ஒவ்வொரு குழுவுக்கும் மாணவர் குழுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அந்தக் குழுவுக்கான மாணவ அமைச்சர் நியமிக்கப்படுவார்.

கல்வி அமைச்சகம்; மாணவர் நலன், பாதுகாப்பு அமைச்சகம்; தகவல் தொடர்பு அமைச்சகம்; சுற்றுச்சூழல், காலநிலை மாற்ற அமைச்சகம்; சுகாதாரம், தூய்மை அமைச்சகம் ஆகிய ஐந்து துறைகளுக்கான அமைச்சர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

குழுத் தலைவர், குழுப் பொறுப்பாசிரியர், மாணவ அமைச்சர் ஆகியோர் இணைந்து தங்களது அமைச்சகத்தின்கீழ் பள்ளி அளவில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகளை முடிவுசெய்கின்றனர்.

சிறந்த குழு

இந்த விதிமுறைகளைப் பின்பற்றி அண்மையில் அரசுப் பள்ளிகள்தோறும், ‘மகிழ் முற்றம்' பதவியேற்பு விழா நடைபெற்றது. ‘மகிழ் முற்றம்’ பள்ளி அளவிலான மதிப்பெண் பலகை, ஒவ்வொரு குழுவுக்குமான வண்ணக் கொடிகள் - குறிஞ்சி (சிவப்பு), முல்லை (மஞ்சள்), மருதம் (பச்சை), நெய்தல் (நீலம்), பாலை (வெள்ளை) அந்தக் குழுவின் பெயருடன் வழங்கப்பட்டன. பின்பு ஹவுஸ் பேட்ச் (House badge), தொப்பி, ரிப்பன்கள் முதலானவை வழங்கப்பட்டன.

இதன் சிறப்பு யாதெனில், கல்விசாராச் செயல்பாடு என யாரும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதற்காக  ‘மகிழ் முற்றம்’ செயல்பாடுகளுக்கு வகுப்பறை அளவிலும் பள்ளி அளவிலும் மாணவர் குழுக்களுக்கு மதிப்பெண் கணக்கிடப்படுகிறது.

பள்ளி அளவில் அனைத்து வகுப்பறை மதிப்பெண் பட்டியலையும் ஒன்றாகத் தொகுத்து வழங்க வேண்டும். இதன் அடிப்படையில், எமிஸ்-இல் மாதத்தின்  வெற்றிக் குழு, ஆண்டின் வெற்றிக் குழுவைப் பள்ளி அறிவிக்க வேண்டும்.

- ந.ரேவதி, ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, வீரனூர், நங்கவள்ளி ஒன்றியம், சேலம் மாவட்டம் தொடர்புக்கு: mnrajrev85@gmail.com

நெல் வயலில் மீன் வளர்ப்பு: மாத்தி யோசித்த மயிலாடுதுறை விவசாயி

“வழக்கமான சினிமா பாணியை ‘ட்ரோன்ஸ்’ உடைக்கும்!” - நடிகை அஞ்சலி நாயர்
சித்தி இத்​னானி, அஞ்​சலி நாயர், தேவதர்​ஷினி, பரி​தாபங்​கள் டிரா​விட் செல்​வம், குரேஷி உள்பட பலர் நடித்​துள்ள திரைப்​படம் ‘ட்​ரோன்​ஸ்’. ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்​ப​திவு செய்​துள்ள இப்​படத்​துக்கு ஹரி எஸ்​.ஆர்​.இசை அமைத்​துள்​ளார். ஜிஎம் மோர்​கன் பிலிம்ஸ் நிறு​வனம் தயாரித்​துள்ள இப்​படத்தை ‘பன் பட்​டர் ஜாம்’ மூலம் கவனம் பெற்ற ஆர்​.​ராகவ் மிர்​தாத் இயக்​கி​யுள்​ளார். அக்​.16- ல் வெளி​யாகும் இப்​படத்​தின் செய்​தி​யாளர்​கள் சந்​திப்பு சென்​னை​யில் நடை​பெற்​றது.

இதில் நடிகை அஞ்​சலி நாயர் பேசும்​போது, “இந்​தப் படத்​தின் மூலம் புதி​தாக ஒரு முயற்​சியை மேற்​கொண்​டிருக்​கிறோம். ‘டிரோன்​ஸ்’ திரைப்​படம் ஃபேன்​டஸி, ஹாரர் மற்​றும் சர்​வைவல் அம்​சங்​கள் கொண்ட படமாக இருக்​கும். இதில் பல விசித்​திர​மான சம்​பவங்​கள் நடை​பெறும். அதே​நேரம், ரசிகர்​களை மகிழ்விக்​கும் பல பொழுது​போக்கு அம்​சங்​களும் இடம்​பெற்​றுள்​ளன.

நிற அரசி​யல், நிறவெறி மற்​றும் காதல் சார்ந்த சில தீவிர​மான, சர்ச்​சைக்​குரிய விஷ​யங்​களை​யும் இப்​படம் தொட்​டுச் செல்​கிறது. இது​போன்ற புதிய கருத்​துகளைக் கொண்ட, வழக்​க​மான சினிமா பாணியை உடைக்​கும் திரைப்​படங்​கள் தொடர்ந்து தமிழில் வெளி​யாக வேண்​டும்” என்​றார்.

நடிகை சித்தி இத்​னானி பேசும்​போது, “இந்​தப் படத்​தில் என்​னுடன் பணி​யாற்​றிய அனை​வருக்​கும் நன்​றி. அஞ்​சலி​யுடன் இணைந்து பணி​யாற்ற வேண்​டும் என்​பது நீண்ட நாள் ஆசை. இரண்டு நடிகைகள் நல்ல நண்​பர்​களாக இருக்க முடி​யும் என்​ப​தற்​கும் எங்​கள் நட்பு ஓர் உதா​ரணம். சமூக வலை​தளங்​களில் பிரபல​மானவர்​களும் இந்​தப் படத்​தில் இணைந்​திருப்​பது சிறப்​பு” என்​றார்​.

சிலம்பரசன் வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ ட்ரெய்லர்

2 விதமான காதலை சொல்லும் ‘ஹைக்கூ’
ஏகன், ஸ்ரீதே​வி, ஃபெமினா உள்பட பலர் நடித்​துள்ள ஹைக்கூ திரைப்​படம் அக்​.23-ல் வெளி​யாகிறது. அருளானந்து தயாரித்​துள்ள இப்​படத்​துக்கு சித்​துக்​கு​மார் இசை அமைத்​துள்​ளார். இதன் இசை வெளி​யிட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. படக்​குழு​வினருடன் இயக்​குநர்​கள் சசி, பொன்​ராம், தயாரிப்​பாளர்​கள் கலைப்​புலி எஸ். தாணு, தனஞ்​செயன் உள்பட பலர் கலந்​து​கொண்​டனர்.

இயக்​குநர் சசி பேசும்​போது, ‘‘மிக​வும் எளிமை​யான கதை ‘ஹைக்​கூ’. இரண்டு விதமான காதலை நுணுக்​க​மாகச் சொன்ன இயக்​குநருக்​கும் சிறப்​பாக நடித்த நடிகர்​களுக்​கும் வாழ்த்​துகள். நிச்​ச​யம் இது படக்​குழு​வினருக்கு மைல்​கல் திரைப்​பட​மாக அமை​யும்” என்​றார்.

தயாரிப்​பாளர் தனஞ்​செயன் பேசும்​போது, “இந்​தப் படத்தை பார்த்து விட்​டேன். கவிதை​யான படம். படத்​தின் கதை புதிதானது. காதலை முற்​றிலும் வேறு ஒரு கோணத்​தில் நமக்கு காட்​டும். இது போன்ற கதையை கொடுத்த இயக்​குநர் யுவ​ராஜுக்கு வாழ்த்​துகள்” என்​றார்​.

சிலம்பரசன் வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ ட்ரெய்லர்

கரப்பான் பூச்சிக்குப் பின் இப்போது ஈக்கள்: டெல்லி போராட்டங்களுக்கு நடுவே ‘மக்கி ஜனதா கட்சி’ வைரல்
புதுடெல்லி: கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) இணையத்தில் கவனம் பெற்​றதைத் தொடர்ந்​து, ‘மக்கி ஜனதா கட்சி’ (எம்​ஜேபி) என்ற பெயரில் புதிய நையாண்டி இயக்​கம் சமூக வலை​தளங்​களில் பேசுபொருளாகி​யுள்​ளது. இதன் பெயர், ஈ ஈமோஜி, செய்​தி​கள் ஆகியவை வைரலான சிஜேபியை நினைவூட்டு​கின்​றன.

எம்​ஜேபி​யின் இன்​ஸ்​டாகி ராம் கணக்கு (@makkhijanta party) தன்னை ‘இளைஞர்​களின், இளைஞர்​களால், இளைஞர்​களுக்​காக’ உரு​வான அரசி​யல் முன்​னணி என அறி​முகப்​படுத்​துகிறது. தான் எந்த அரசி​யல் கட்​சிக்​கும் எதி​ரானதும் அல்ல, எந்​தக் கட்​சி​யுட​னும் இணைந்​ததும் அல்ல என்​றும் தெரிவிக்​கிறது.

தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, அக்​டோபர் 10 அன்று டெல்​லி​யில் போராட்​டம் நடத்த சிஜேபி அழைப்பு விடுத்​திருந்​தது. இதற்கு ஜந்​தர் மந்​தரில் அனுமதி மறுக்​கப்​பட்​டது.

இதனால் பல மெட்ரோ நிலை​யங்​களுக்​குச் செல்​லத் தடை விதிக்கப்​பட்​டது. பொது​மக்​களின் பயணத்​துக்கு ஏற்​படும் பாதிப்பு​கள் குறித்து வழக்​கறிஞர்​கள் உச்ச நீதி​மன்​றத்​தில் முறையிட்​டனர். அக்​டோபர் 9 அன்​று, தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் தலை​மையி​லான மூன்று நீதிப​தி​கள் அமர்​வு, பாது​காப்பு நடவடிக்​கைகள் அளவுக்கு மீறக் கூடாது என்று கூறியது. “ஈயைக் கொல்ல சுத்​தி​யலைப் பயன்​படுத்த வேண்​டாம்” என்று உச்ச நீதிமன்​றம் கூறியது. இந்​தக் கருத்தே மக்கி ஜனதா கட்​சி​யின் பெயருக்​கும் நையாண்​டிக்​கும் அடிப்​படை​யானது.

எம்​ஜேபி தனது பதிவு​களில், “ஒரு நாள் கரப்​பான் பூச்​சி, மறு​நாள் ஈ... ஜனநாயகத்​தில் மக்​களை இப்​படியா அழைப்​பது?” என்று கேள்வி எழுப்​பு​கிறது. எம்​ஜேபி​யின் இணை​யதளம் முதலாளித்துவம், தொழில் ​முனை​வு, வேலை​வாய்ப்பு உருவாக்கம், திறன் வளர்ப்​பு, பொருளா​தார முன்​னேற்​றம் ஆகிய​வற்றை வலி​யுறுத்​துகிறது.

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகிறது: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 2 நாட்களில் தொடங்க வாய்ப்பு

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட அனுமதி இல்லை என அறிவிப்பு
புதுடெல்லி: கடந்த 1960-களில் டெல்லி கடமைப் பாதையில் இண்டியா கேட் அருகே உள்ள போட் கிளப் புல்வெளி தளம் போராட்ட களமாக இருந்தது.

கடந்த 1988-ம் ஆண்டு அக்டோபரில் நடந்த போராட்டத்தின்போது சுமார் 5 லட்சம் விவசாயிகள் போட் கிளப் புல்வெளியில் குவிந்தனர். இதனால் ஒட்டுமொத்த டெல்லியும் ஸ்தம்பித்தது. இதைத் தொடர்ந்து அங்கு போராட்டங்கள் நடத்த கடந்த 1993-ல் தடை விதிக்கப்பட்டது.

அதற்கு மாற்றாக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டங்கள் நடத்த டெல்லி போலீஸார் அனுமதி வழங்கினர். கடந்த ஜூன், ஜூலையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி), ஜந்தர் மந்தரில் நடத்திய தொடர் போராட்டத்தால் ஒட்டுமொத்த டெல்லியும் பாதிக்கப்பட்டது. தற்போது அதே இடத்தில் போராட்டம் நடத்த சிஜேபி அனுமதி கோரியது. ஆனால் டெல்லி காவல் துறை அனுமதி மறுத்துவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு அண்மையில் விசாரித்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறும்போது, “டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. எனவே ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். தலைமை நீதிபதி சூர்ய காந்த் கூறும்போது, “ஜந்தர் மந்தரில் போதிய கழிப்பறை வசதி இல்லை. அங்கு எம்பிக்கள் குடியிருப்பு, அரசு ஊழியர்கள் குடியிருப்புகள் உள்ளன. அவசர காலத்தில் ஜந்தர் மந்தர் பகுதிக்கு ஆம்புலன்ஸ்கள் செல்ல முடியவில்லை. எனவே மாற்று இடத்தை பரிசீலிக்கலாம்” என்று தெரிவித்தார்.

தலைமை நீதிபதியின் அறிவுரைப் படி மாற்று போராட்ட இடங்கள் குறித்து ஆய்வு செய்ய மத்திய உள்துறை சார்பில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு சில நாட்களுக்கு முன்பு தனது பரிந்துரைகளை சமர்ப்பித்தது. இதன் அடிப்படையில் ஜந்தர் மந்தருக்கு பதிலாக 3 புதிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

இதுகுறித்து டெல்லி காவல் துறை ஆணையர் அனுராக் குமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “சிறப்பு குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டங்கள் நடத்த இனிமேல் அனுமதி அளிக்கப்படாது.

போராட்ட களம் பட்டியலில் இருந்து ஜந்தர் மந்தர் நீக்கப்படுகிறது. அதற்குப் பதிலாக ராம்லீலா மைதானம், புராடி மைதானம், கிழக்கு டெல்லியின் சிபிடி மைதானத்தில் போராட்டங்கள் நடத்த அனுமதி வழங்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.

வேலுமணி தலைமையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் ஆலோசனை: கட்சியை கைப்பற்றி தவெக அரசுக்கு ஆதரவளிக்க ரகசிய திட்டம்?