புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகிறது: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 2 நாட்களில் தொடங்க வாய்ப்பு

அக்.15-ம் தேதி முதல் கனமழை பெய்யும் என தகவல்
புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகிறது: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 2 நாட்களில் தொடங்க வாய்ப்பு
Updated on: 
1 min read

சென்னை: தமிழகத்​தில் அடுத்த 2 நாட்​களில் வடகிழக்கு பரு​வ​மழை தொடங்க வாய்ப்பு உள்​ளது. தென்​கிழக்கு வங்​கக்​கடலில் இன்று புதிய காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி உரு​வாகிறது. இதன் காரண​மாக தமிழகத்​தில் 15-ம் தேதி முதல் கனமழை பெய்​யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக இந்​திய வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழகத்​தில் அடுத்த 2 நாட்​களில் தென்​மேற்கு பரு​வ​மழை வில​கி, வடகிழக்கு பரு​வ​மழை தொடங்க வாய்ப்பு உள்​ளது. இதற்​கிடையே, தெற்கு அந்​த​மான் கடல் மற்​றும் அதை ஒட்​டியபகு​தி​களில் சுமார் 5.8 கி.மீ. உயரம் வரை நில​வும் வளி மண்டல சுழற்சி காரண​மாக, அக்​.13-ம் தேதி (இன்​று) தென்​கிழக்கு வங்​கக்​கடல் பகு​தி​யில் ஒரு குறைந்த காற்​றழுத்த தாழ்​வுப்பகுதி உரு​வாக வாய்ப்பு உள்​ளது. இதன் தாக்​கத்​தால் தமிழகத்​தில் 15-ம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்​ளது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

தமிழகத்​தில் அடுத்த சில நாட்​களில் மழை வாய்ப்பு குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: டெல்டா மாவட்​டங்​களான தஞ்​சாவூர், திரு​வாரூர், நாகப்​பட்​டினம், மயி​லாடு​துறை மற்​றும் புதுக்​கோட்​டை, ராம​நாத​புரம், தூத்​துக்​குடி, திருநெல்​வேலி, கன்​னி​யாகுமரி மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் 13-ம் தேதி (இன்​று) லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். மற்ற மாவட்​டங்​களில் லேசான மழை பெய்​யக்​கூடும்.

14-ம் தேதி சென்​னை, செங்​கல்​பட்​டு, விழுப்​புரம், கடலூர், புதுக்​கோட்​டை, ராம​நாத​புரம், சிவகங்​கை, தூத்​துக்​குடி, திருநெல்​வேலி, கன்​னி​யாகுமரி, தென்​காசி, தேனி, விருதுநகர், கோவை, திருப்​பூர், நீல​கிரி, ஈரோடு, சேலம், கரூர், திருச்​சி,அரியலூர், பெரம்​பலூர், திண்​டுக்​கல், மதுரை மற்​றும் டெல்டா மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் மேக மூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் ஒருசில பகு​தி​களில் இடி, மின்​னலுடன் லேசானது முதல் மித​மான மழை பெய்​ய வாய்ப்​பு உள்​ளது. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகிறது: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 2 நாட்களில் தொடங்க வாய்ப்பு
குரூப்-4 தேர்வு எழுத வயது வரம்பு தளர்த்தப்படுமா? - பொதுப் பிரிவு ஆதரவற்ற விதவைகள் அரசுக்கு வேண்டுகோள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in