‘வலிகள் நிறைந்த காதல் கதைகள்’ - நடிகை ஐஸ்வர்யா லட்சுமி வெறுப்பு

‘வலிகள் நிறைந்த காதல் கதைகள்’ - நடிகை ஐஸ்வர்யா லட்சுமி வெறுப்பு
Updated on: 
1 min read

காதல், டேட்​டிங் செயலிகள், உறவு​களில் ஏற்​பட்​டுள்ள மாற்​றங்​கள் உள்​ளிட்ட தற்​காலக் காதல் குறித்த நடிகை ஐஸ்​வர்யா லட்​சுமி தெரி​வித்​துள்ள கருத்​துகள் கவனத்தை ஈர்த்து வரு​கின்​றன. நெட்ஃபிளிக்​ஸில் வெளி​யான #லவ் தொடரின் புரமோஷனுக்​காக அவர் அளித்துள்ள பேட்டியில், ‘‘டேட்​டிங் செயலிகள் காதலுக்​கான வாய்ப்​பு​களை அதி​கப்​படுத்​தி​யுள்ள போதி​லும், சரி​யான ஒரு​வரைக் கண்​டு​பிடிப்​பதை அது எளி​தாக்​க​வில்​லை.

மாறாக, அவை தரும் அதி​கப்​படி​யான ‘ஆப்​ஷன்​கள்’ குழப்​பத்​தையே ஏற்​படுத்​துகின்​றன. நாம் எங்கு செல்ல வேண்​டும் என்​ப​தில் கூட குழப்​பம் ஏற்​படு​கிறது. தமக்​குப் பிடித்​த​மான ஒரு​வரைக் கண்​டு​பிடிக்க வேண்​டும் என்​பதே அனை​வரின் தேடலாக உள்​ளது. ஆனால் அந்த ஒரு​வரைக் கண்​டு​பிடிப்​பது கடந்த காலங்​களை விட இப்​போது சிக்​கலான விஷய​மாகத் தோன்​றுகிறது.

இன்​றைய தலை​முறை உறவு​களை வர்​ணிப்​ப​தற்​காகப் பயன்​படுத்​தப்​படும் புதிய சொற்​களும் குழப்​பத்தை மேலும் கூட்​டு​கின்​றன. காலம் செல்​லச் செல்ல காதல் குறித்த எனது பார்​வை​யும் மாறி​யுள்​ளது. காதல் என்​பது நிம்​ம​தி​யும் பாது​காப்​பும் ஆகும். மற்​றொரு​வர் முன்​னிலை​யில் நான் நானாகவே இருக்க முடிவது முக்​கி​யம். என்னை பொறுத்​தவரை காதல் என்​றால் அது ‘கம்ஃபர்ட்’ தான். ஒரு துணை​யிடம் நான் முதன்​மை​யாக எதிர்​பார்ப்​பது பாது​காப்​பான உணர்​வை.

என் மனதில் உள்​ளதை வெளிப்​படை​யாகச் சொல்​ல​வும், நான் எப்​படி இருக்​கிறேனோ, அப்​படியே ஏற்​றுக்​கொள்​ளப்​பட​வும் வேண்​டும். அந்த நபரின் முன்​னிலை​யில் ஒரு குழந்​தையைப் போல என்​னால் இருக்க முடிய வேண்​டும். எதை​யும் மறைக்​காமல் வெளிப்​படை​யாகப் பேச வேண்​டும், சுதந்​திரம் உணரப்பட வேண்​டும்.

காதல் உறவில் நட்​புக்​கும் மிக முக்​கிய இடமுண்​டு. திரு​மண​மான எனது நண்​பர்​களில் பலர் காதலர்​களாக மாறு​வதற்கு முன்பு நல்ல நண்​பர்​களாக இருந்​தனர். சினி​மா​வில் தீவிர​மான காதல் கதைகளில் நடிக்க ஆர்​வம் காட்​டி​னாலும், நிஜ வாழ்க்​கை​யில் எனக்கு மகிழ்ச்​சி​யான மற்​றும் எளிமை​யான காதல் கதைகளே பிடிக்​கும். வலிகள் நிறைந்த காதல் கதைகளைக்​ கண்​டு சோர்​வடைந்​து விட்​டேன்​” என்​றார்​.

‘வலிகள் நிறைந்த காதல் கதைகள்’ - நடிகை ஐஸ்வர்யா லட்சுமி வெறுப்பு
சிலம்பரசன் வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ ட்ரெய்லர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in