நெல் வயலில் மீன் வளர்ப்பு: மாத்தி யோசித்த மயிலாடுதுறை விவசாயி

மீன் வளர்க்கும் வகையிலான வயல் அமைப்பு. (உள்படம்) நெல் வயலில் வளர்க்கும் மீன்குஞ்சுகளைக் காட்டும் விவசாயி சக்தி வடிவேல்.

மீன் வளர்க்கும் வகையிலான வயல் அமைப்பு. (உள்படம்) நெல் வயலில் வளர்க்கும் மீன்குஞ்சுகளைக் காட்டும் விவசாயி சக்தி வடிவேல்.

Updated on: 
2 min read

இயற்கை விவசாய முறையில் நெல் நடவு செய்த வயலில் மீன் வளர்ப்பையும் சேர்த்து இரட்டிப்பு வருவாய் ஈட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் மயிலாடுதுறை மாவட்டம் நலத்துக்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சக்தி வடிவேல் (40).

இதுகுறித்து அவர் கூறியதாவது: “இன்றைய இளைய தலைமுறை விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், நெல் வயலில் மீன் குஞ்சுகள் வளர்ப்பதைத் தொடங்கியுள்ளேன். எனது 2 ஏக்கர் நிலத்தைச் சுற்றி 4 அடி ஆழம், 4 அடி அகலத்துக்குக் குழி தோண்டி, அதற்கு மேல் 5 அடி உயரத்துக்கு வரப்பு கட்டியுள்ளேன்.

மேலும், 17 சென்ட் இடத்தில் 20அடி ஆழத்துக்குக் குட்டையும் வெட்டியுள்ளேன். இவற்றில் பம்ப் செட் மூலம் நீர் நிரப்பியுள்ளேன். மேலும், வயலில் பாரம்பரிய தூயமல்லி நெல் நடவு செய்து பயிர்கள் 20 நாள் ஆன நிலையில், வயலில் உள்ள தண்ணீரில் கட்லா, ரோகு, மிர்கால், ரூப்சந்த் போன்ற 6 ஆயிரம் மீன் குஞ்சுகளை வாங்கி விட்டுள்ளேன்.

மீன் குஞ்சுகள் வயலில் உள்ள புழு, பூச்சிகளை உணவாக உட்கொள்ளும். இன்னும் தேவைப்பட்டால், மீன்கள் சாப்பிடுவதற்காக வயலைச் சுற்றி அசோலாவும் வளர்த்துவருகிறேன். இதனால், மீன் குஞ்சுகளுக்குத் தனியாகத் தீவனச் செலவு கிடையாது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in