ஸ்டூடியோ இல்லாமலே வீடியோ! | எளிதில் கற்கலாம் ஏஐ 5

ஸ்டூடியோ இல்லாமலே வீடியோ! | எளிதில் கற்கலாம் ஏஐ 5
Updated on: 
2 min read

முன்பெல்லாம் ஒரு காட்சியையோ நபரையோ படம் எடுப்பதும் காணொளியாகப் பதிவுசெய்வதும் பல்லாண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் சடங்குகளாக இருந்தன. திறன்பேசிகளின் வருகைக்குப் பிறகு யார் வேண்டுமானாலும் எப்போது நினைத்தாலும் புகைப்படமோ காணொளியோ எடுக்கலாம் என்கிற நிலை ஏற்பட்டது. அதன் பலன் இன்று எங்கெங்கு காணினும் காணொளிக் காட்சிகள்!

ஒவ்வொரு நாளும் காணொளி வழியிலான தகவல்தொடர்பு விரிவடைந்துகொண்டே இருக் கிறது. ஆனால், தரமானதொரு காணொளியை உருவாக்க வேண்டுமெனில் ஒளிப்பதிவுக் கருவிகள், விளக்குகள், ஸ்டூடியோ, நடிகர்கள், படத் தொகுப்புக் (Editing) கருவிகள் தேவைப்படுகின்றன. இந்தச் சிரமங்களைப் போக்கி, வெறும் உரையை (Text) உள்ளீடாகக் கொடுத்தாலே சில நிமிடங்களில் மனிதர்கள் பேசுவது போன்ற தத்ரூபக் காணொளிகளை உருவாக்கித் தருகிறது ‘Synthesia’ என்னும் செய்யறிவுத் தளம்.

மெய்நிகர் செய்யறிவு உருவங்கள் - ‘AI Avatars’ Synthesia தளத்தில் 200க்கும் மேற்பட்ட பல்வேறு இன, வயது, பண்பாட்டுப் பின்னணி கொண்ட மெய்நிகர் மனித உருவங்கள் (Avatars) உள்ளன. பயனர்கள் தங்கள் காணொளிக்குப் பொருத்தமானதொரு உரு வத்தைத் தேர்ந்தெடுத்து, அவர் பேச வேண்டிய உரையைத் தட்டச்சு செய்தாலே போதும். அந்த உருவம் மனிதர்களைப் போலவே இயல்பான முகபாவனைகள், கண் சிமிட்டல்கள், கையசைவுகளுடன் பேசும் காணொளியை உருவாக்கித் தரும்.

பன்மொழிகளில் பேசும் ஆற்றல் - ‘Multilingual Support’

நாம் அளிக்கும் ஒரே உரையை தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு என நூற்றுக்கும் மேற்பட்ட உலக மொழிகளிலும் வட்டார வழக்குகளிலும் (Accents) பேசவைக்கும் திறன் இதற்கு உண்டு. நிறுவனங்கள் தங்களது உற்பத்திப் பொருள்கள் குறித்த விவரங்களையும் பயிற்சிக் காணொளிகளையும் ஒரே நேரத்தில் பன்மொழிப் பார்வையாளர்களுக்கு உருவாக்கி வழங்க இது பெரிதும் உதவுகிறது.

மெய்நிகர் உருவத்தைப் படைத்தல் - ‘Custom Avatars & Voice Cloning’

நிறுவனத் தலைவர்களும் பயிற்றுநர்களும் தங்களின் சொந்தக் குரலையும் தோற்றத்தையும் பதிவுசெய்து, தங்களுக்கெனத் தனித்துவமான செய்யறிவு உருவத்தை (AI Avatar) உருவாக்கிக்கொள்ளவும் முடியும். இதன் மூலம் அவர்கள் கேமரா முன்நேரில் தோன்றிப் பதிவு செய்யாமலேயே, அவர்களின் தோற்றத்தையும் குரலையும் கொண்ட நூற்றுக்கணக்கான புதிய காணொளி களை உருவாக்க முடியும்.

உரை வடிவமைப்பும் மாதிரி களும் - ‘AI Script Generator & Templates’

காணொளிக்கான உரையையோ திரைக்கதையையோ எழுதுவதில் சிக்கல் இருந்தால், இந்தத் தளத்தில் உள்ள AI Script Generator வசதியைப் பயன்படுத்தி அவற்றை எழுதி, வடிவமைத்துக்கொள்ள முடியும். மேலும், இதிலிருக்கும் நூற்றுக்கணக்கான காணொளி மாதிரி களைக் கொண்டு (Templates) சில நிமிடங்களில் காட்சிகளையும் வடிவமைக்க முடியும்.

படத்தொகுப்பும் பயனர் பாது காப்பும் - ‘Interactive Studio & Safety’

உருவாக்கப்படும் காட்சியின் பின்னணியையும் மெய்நிகர் உருவங்களையும் சேர்ப்பதும் நீக்கு வதும் மிக எளிது. ஆழ்மாறாட்டம் (Deepfake) போன்ற தவறான பயன்பாடுகளைத் தவிர்ப்பதற்காக, இந்தத் தளம் மிகக் கடுமையான உள்ளடக்கச் சரிபார்ப்பு விதிகளை யும் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுகிறது.

யாருக்குப் பயன்படும்?

மனிதவள மேம்பாட்டுத் துறையினர், சந்தைப்படுத்தல் வல்லுநர்கள் (Marketers), யூடியூபர்கள், மின்னணுக் கற்றல் உள்ளடக்கஉருவாக்குநர்கள் (E-learning Creators), பொதுவான பயிற்சியாளர்கள் போன்றோருக்கு இந்தத் தளம் பெருமளவு உதவுகிறது. தயாரிப்புச் செலவுகளைக் குறைத்து மிகக் குறுகிய காலத்தில் தொழில்முறை காணொளிகளை உருவாக்குவதே Synthesia தளத்தின் முக்கிய நோக்கமாகும்.

செய்​யறிவு விதி

செய்​யறி​வுக் கருவி​களைப் பயன்​படுத்தி உரு​வாக்​கப்படும் எந்​தவொரு உள்​ளடக்​கத்துக்​கும் அதை உரு​வாக்​குபவர்​களே பொறுப்​பாளர்​கள். ஆகவே, நாம் பொறுப்​புடன் செயல்​படு​வது அவசி​யம்.

உதா​ரணக் கட்​டளை (Sample Prompt)

Create a 30-second educational video on the topic ‘What is Artificial Intelligence? ’ Use a friendly AI presenter with a clear English voice. Explain AI in simple language with examples like Google Maps, Siri, and ChatGPT. Keep the video engaging and easy for beginners to understand.

https://www.synthesia.io/

- மேலும் கற்கலாம்.

- கட்டுரையாளர், பேராசிரியர்.

ஸ்டூடியோ இல்லாமலே வீடியோ! | எளிதில் கற்கலாம் ஏஐ 5
பாட்டுக்கு மெட்டு | எளிதில் ஏஐ கற்கலாம் 4

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in