ரெப்போ வட்டி விகித உயர்வு: பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சி

ரெப்போ வட்டி விகித உயர்வு: பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சி
Updated on: 
2 min read

ரெப்போ வட்டி விகிதத்தை 5.25% இருந்து 5.50% ஆக உயர்த்தியிருக்கிறது இந்திய ரிசர்வ் வங்கி. பணவீக்கம் அதிகரித்துவரும் நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை அவசியமானதாகவும் தவிர்க்க முடியாததாகவும் கருதப்படுகிறது.

ரிசர்வ் வங்கியின் பணம் சார்ந்த கொள்கைக் குழு (Monetary Policy Committee) ரெப்போ வட்டி விகிதத்தை (வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி) 25 அடிப்படைப் புள்ளிகள் என்கிற அளவில் உயர்த்தியதால், வட்டி விகிதம் அதிகரித்திருக்கிறது.

பணவீக்கம் அதிகரித்துவரும் நிலையில் இந்த முடிவை ரிசர்வ் வங்கி மேற்கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது. 2023 பிப்ரவரிக்குப் பிறகு ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தும் இந்த முடிவை, ரிசர்வ் வங்கியின் பணம் சார்ந்த கொள்கைக் குழுவில் உள்ள ஆறு உறுப்பினர்களும் ஒருமனதாக எடுத்திருக்கிறார்கள். ஆக, அதிகரித்துவரும் பணவீக்கத்தைக் கருத்தில்கொண்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இது என்று புரிந்துகொள்ளலாம்.

பணம் சார்ந்த கொள்கையின் நிலைப்பாட்டை ‘நடுநிலை’ (Neutral) என்று முன்பு வகைப்படுத்தியிருந்த ரிசர்வ் வங்கி, தற்போது ‘கட்டுப்படுத்தப்பட்ட இறுக்கம்’ (Calibrated tightening) என்று மாற்றியிருக்கிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in