Published : 28 Dec 2023 06:00 AM
Last Updated : 28 Dec 2023 06:00 AM
சென்னை: உர தொழிற்சாலையில் வாயுக் கசிவு, எண்ணெய் நிறுவனத்தில் பாய்லர் வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கைக்கு தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். சென்னை, எண்ணூர் அருகே பெரிய குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான உரத் தொழிற்சாலையில் நேற்று அம்மோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்கிடையே, சென்னை தண்டையார்பேட்டையில் இந்தியன் ஆயில் நிறுவன பாய்லர் வெடித்து ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்த அரசியல் கட்சித் தலைவர்கள், விரைந்து நடவடிக்கை எடுத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அவர்கள் கூறியிருப்பதாவது:
ஆளுநர் ஆர்.என்.ரவி: எண்ணூர் தொழிற்சாலையில் ஏற்பட்ட துரதிருஷ்டவசமான வாயுக் கசிவு சம்பவம் மிகுந்த கவலை அளிக்கிறது. அதில் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: எண்ணூரில் எண்ணெய் கசிவு ஏற்பட்டபோதே வடசென்னை தொழிற்சாலைகளில் ஆய்வு நடத்த வேண்டும் என்ற எனது ஆலோசனையைப் பின்பற்றியிருந்தால், இதுபோன்ற சம்பவம்ஏற்பட்டிருக்காது. பாதிக்கப்பட்டமக்களுக்கு நஷ்ட ஈடு வழங்க அரசை வலியுறுத்துகிறேன்.
தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை: எண்ணூர் பகுதி தொழிற்சாலைகள் அனைத்திலும் முறையான பாதுகாப்பு நடைமுறைகள் செய்யப்பட்டுள்ளனவா என அரசு கண்காணிக்க வேண்டும்.
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: வாயுக் கசிவு விவகாரத்தில் தவறிழைத்த நிர்வாகத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உயரிய மருத்துவ சிகிச்சையும், நிவாரணமும் தமிழக அரசு அளிக்க வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவிதினகரன், வி.கே.சசிகலா, சமகதலைவர் சரத்குமார் ஆகியோரும்நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT