Published : 28 Dec 2023 05:36 AM
Last Updated : 28 Dec 2023 05:36 AM

2023-ல் இந்திய பங்குச் சந்தை சிறப்பான வளர்ச்சி

மும்பை: நடப்பு ஆண்டில் இந்திய பங்குச் சந்தை சிறப்பான வளர்ச்சியை எட்டியுள்ளது. நடப்பு ஆண்டு தொடக்கம் பங்குச் சந்தைக்கு சவாலான காலகட்டமாக இருந்தது. அதானி குழுமம் பங்கு முறைகேடுகளில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் அறிக்கை வெளியிட்ட நிலையில், இந்திய பங்குச் சந்தையில் அது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

2023-ம் ஆண்டு தொடக்கத்தில் பங்குச் சந்தை, ஓராண்டில் இல்லாத அளவில் சரிவில் இருந்தது. பிறகு படிப்படியாக ஏற்றம் காணத் தொடங்கி, நடப்பு ஆண்டில் சர்வதேச அளவில் சிறப்பாக செயல்பட்ட டாப் 10 பங்குச் சந்தைகளில் ஒன்றாக இந்திய பங்குச் சந்தை இடம்பிடித்துள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் இவ்வாண்டு மார்ச் மாதத்தில் 16,828 ஆக இருந்தது. தற்போது அது 21,000 புள்ளிகளைக் கடந்துள்ளது. சென்செக்ஸ் 72,000 புள்ளிகளைத் தாண்டியுள்ளது.

இந்தியப் பங்குச் சந்தையில் பட்டியலாகியுள்ள நிறுவனங்களின் மொத்த மதிப்பு இவ் வாண்டில் முதன்முறையாக 4 டிரில்லியன் டாலரைத் தொட்டது. இந்திய பங்குச் சந்தை ஏற்றம் கண்டதற்கு அந்நிய முதலீடு முக்கிய காரணமாக உள்ளது. நடப்பு ஆண்டில் அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் 22 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளனர்.

நேற்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 701 புள்ளிகள் உயர்ந்து 72,038 ஆகவும், நிஃப்டி 213 புள்ளிகள் உயர்ந்து 21,654 ஆகவும் நிலைகொண்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x