Published : 28 Dec 2023 06:15 AM
Last Updated : 28 Dec 2023 06:15 AM

போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தை ஜன.3-க்கு தள்ளிவைப்பு: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருப்பு

சென்னை: போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கோரிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தை ஜன.3-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எப் உள்ளிட்ட சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸை வழங்கியிருந்தனர். இது தொடர்பான சமரச பேச்சுவார்த்தை, சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

தொழிற்சங்கங்கள் பங்கேற்பு: துறையின் துணை ஆணையர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையில் சங்க பிரதிநிதிகள் அ.சவுந்தரராஜன், கே.ஆறு முகநயினார், ஆர்.கமலகண்ணன், தாடி ம.இராசு, ஆறுமுகம், டி.திருமலைசாமி, வி.தயானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் தரப்பில் அதிகாரிகள் பங்கேற்றனர். தொழிற்சங்கத்தினர் தரப்பில்கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும் என வலியுறுத்தப்பட் டது. இதற்கு நிர்வாகங்கள் தரப்பில், ‘‘கோரிக்கைகள் தொடர்பாக அரசுக்கு தெரிவிக்கப்பட்டது, ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் வரும் 3-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வருவதால் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம்’’ என்றனர்.

இருதரப்பு கருத்துகளையும் கேட்ட பிறகு, தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் கூறும்போது, ‘‘சட்டப்படி தொழிலாளர் களுக்கு வழங்கப்பட வேண்டிய பலன்களை வழங்காமல் இருப்பது ஏற்புடையது அல்ல. நிர்வாகங்கள் தரப்பில் தொழிலாளர் நலன்சார்ந்த கோரிக்கைகளுக்கு விரைந்து முடிவு எடுக்க வேண்டும். வேலைநிறுத்தத்தை நோக்கிநகராமல் இருக்க வேண்டும். அடுத்தகட்ட பேச்சுவார்த்தை ஜன.3-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது’’ என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் தொழிற்சங்க நிர்வாகிகள் கூறும்போது, ‘‘பொறுப்பு அதிகாரிகள்யாரும் வராததால் பேச்சுவார்த் தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. கோரிக்கைகளுக்கான நடவடிக்கை இல்லாத நிலையில் வேலைநிறுத்தம் தவிர்க்க முடியாது. தொமுசவை சேர்ந்த ஊழியர்களும் பங்கேற்பார்கள் எனஎதிர்பார்க்கிறோம். வேலைநிறுத் தத்தின்போது ஒரு பேருந்து கூட இயங்காத நிலையே இருக்கும்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x