கார்த்திகா ராஜேந்திரன்
சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் இளநிலை, சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை இதழியல் & தொடர்பியல் படித்திருக்கிறார். விகடன் நிறுவனத்தில் சேர்ந்து, ஆனந்த விகடன், அவள் விகடன், சுட்டி விகடன், விகடன் இணையதளம் போன்றவற்றில் எழுதிவந்தார். பின்னர் ஏபிபி நாடு இணையதளத்தில் பணியாற்றினார்.
தற்போது இந்து தமிழ் திசையில் 3 ஆண்டுகளாக, உதவியாசிரியராகப் பணியாற்றி வருகிறார். ‘இந்து தமிழ் திசை’யில் நம்பிக்கை இளைஞர், விளையாட்டு, கல்வி, வேலைவாய்ப்பு சார்ந்த கட்டுரைகளை சிறப்புப் பக்கங்களுக்கு எழுதிவருகிறார். கருத்துப்பேழைப் பக்கத்தில் வெளியாகும் ‘சொல்... பொருள்... தெளிவு...’ பகுதியிலும், நேர்காணல் பகுதியிலும் அவ்வப்போது பங்களிப்பைச் செலுத்திவருகிறார். ‘கல்வி, வேலை வழிகாட்டி’ சிறப்புப் பக்கத்துக்குப் பொறுப்பாளராக இருக்கிறார்.