

‘லப்பர் பந்து’, ‘குடும்பஸ்தன்’ போன்ற படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து, பாராட்டுகளைப் பெற்றவர் ஜென்சன் திவாகர்.
நக்கலைட்ஸ் யூடியூப் அலைவரிசையில் அறிமுகமாகி பெரிய திரையில் அசத்திவருகிறார். படப்பிடிப்பில் பரபரப்பாக இருந்த அவரோடு சுவாரசியமான உரையாடல்:
சூரியோதயம் பார்க்கும் பழக்கம் உண்டா?
லேட்டுனு டிக் ஷனரில இருக்கிற நேரத்தைவிட லேட்டா எழுந்திரிப்பதுதான் என்னோட வழக்கம். படப்பிடிப்புனா மட்டும் ‘கரெக்ட்’டா ஆஜர் ஆயிடுவேன்.
‘ஒர்க் அவுட்’டா, ‘டயட்’டா?
கெட்டுப்போய் இருந்த நான், சினிமாவுக்குள்ள வந்த பிறகு திருந்திட்டேன். எல்லாமே சாப்பிட்டாலும், அளவா சாப்பிடுறேன். கொஞ்சம் வொர்க்-அவுட் செய்றேன்.
தனித்துவமான பழக்கம்?
சின்னசின்ன விஷயத்துக்குச் சந்தோஷப்பட மாட்டேன். மூணு நாள் சந்தோஷமா இருந்தா, அடுத்து எப்போ அடி வாங்கப்போறோம்னு யோசிப்பேன்.
‘கம்-பேக்’ தருணம்?
முதல்ல கம்-பேக் தருணங்கள்ல உடன்பாடில்ல. ஆனா, கார் வாங்கிறதுல இருந்து கடனை அடைக்கிறது வரைக்கும் எல்லாமே கம்-பேக் தருணங்கள்தான் இல்ல?