

15 ஆண்டுகள் மென்பொருள் துறையில் பணியாற்றி, தன்னுடைய 40ஆவது வயதில் முழு நேர நகைச்சுவை நிகழ்த்துக் கலைஞராக (Stand-up comedian) உருவெடுத்தவர் அலெக் சாண்டர் பாபு. அவருடைய முதல் படைப்பான ‘அலெக்ஸ் இன் வொண்டர்லாண்ட்’ நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதைத் தொடர்ந்து அவர் உருவாக்கியுள்ள ‘அலெக்ஸ்பீரியன்ஸ்’ எனும் இரண்டாவது படைப்பைத் தனது சொந்த இணையதளமான ‘Anba TV’இல் வெளியிட்டுள்ளார். அதன் ‘புரொமோஷன்’ வேலைகளில் பரபரவென இயங்கிக்கொண்டிருந்தவரோடு சுவாரசியமான ஓர் உரையாடல்: