உன் பார்வையில் ஓராயிரம்..!

உன் பார்வையில் ஓராயிரம்..!
Updated on
2 min read

அன்றாடம் நீங்கள் பயன்படுத்தும் தேநீர் கோப்பை, நாற்காலி தொடங்கி கடந்து செல்லக்கூடிய சாலைகள், மேகங்கள் காணும்போது என்ன செய்வீர்கள்? வெறுமனே கடந்து போய்விடுவோம் அல்லவா? ஆனால், இவற்றின் அழகியலைக் கவனிக்கிறார், பிரவீன்.

வழக்கமாகக் கண்ணில்படும் விஷயங்களை வித்தியாசமான கோணத்தில் படம்பிடித்து, அந்த ஒளிப்படங்களுக்கு ‘ஹைக்கூ’ வடிவில் ‘கேப்ஷனை’ச் சேர்த்து இன்ஸ்டகிராமில் பகிர்ந்துகொள்ளும் இவரது பதிவுகளுக்கு ‘லைக்ஸ்’ குவிகின்றன.

என்ன புதுசு? - முட்டையின் மஞ்சள் கருவைச் சூரியனைப்போல பாவிப்பது, தொலைபேசி வயரின் முடிச்சுகளை கூந்தல் பின்னலைப்போலப் பார்ப்பது என ஒவ்வொன்றின் பின்னணியிலும் வேறு கோணங்களைப் புகுத்தி பிரமிப்பூட்டுகிறார், பிரவீன்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in