Published : 21 Aug 2023 04:21 AM
Last Updated : 21 Aug 2023 04:21 AM
சில ஆண்டுகளுக்கு முன் எங்கள் பள்ளிக்கு ஒரு பேச்சாளர் வந்திருந்தார். சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்து விளக்கமான பேச்சு. எவ்வாறு சூழல் சீர்கேடு நடக்கிறது? மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்? என்பவற்றை விரிவாக எடுத்துரைத்தார். கூட்டம் முடிந்ததும் நன்றியுரை சொல்ல யாராவது வாருங்கள் என்று அழைத்தேன். ஒரு மாணவர் எழுந்து வந்தார்.
"வணக்கம். சுற்றுச்சூழலை எப்படியெல்லாம் கெடுக்கிறாங்க என்று சார் தெளிவாகச் சொன்னாங்க. நன்றி. ஆனா பேசுற எல்லாருமே 'நீங்க தான் இதைச் சரி செய்யணும்... நீங்க தான் இதைச் சரி செய்யணும்' என்றே எங்களிடம் சொல்றாங்க. எங்களுக்கு முன்னாடி சூழலைக் கெடுத்த பெரியவங்க எல்லோரும் அதைச் சரி செய்ய என்ன செய்தீங்க? என்பது தான் எனக்குத்தெரியல. நாங்க தான் உங்களுக்கும் சேர்த்து சரி செய்யணுமா?" என்று அவன் பேசியதும் எழுந்த கைதட்டல்களால் அரங்கு அதிர்ந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT