Published : 10 Oct 2022 06:14 AM
Last Updated : 10 Oct 2022 06:14 AM

மகாத்மாவை கொண்டாடுவோம்: காந்தி போல் வேடமணிந்து 153 மாணவர்கள் அணிவகுப்பு

சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற "மகாத்மாவை கொண்டாடுவோம்" நிகழ்ச்சியில் காந்தி போல் வேடமணிந்து 153 மாணவர்கள் நடத்திய அணிவகுப்பு.

சென்னை: மகாத்மா காந்தியின் 153-வது பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட "மகாத்மாவைக் கொண்டாடுவோம்" நிகழ்ச்சியில் 153 மாணவர்கள் காந்தி போல் வேடமணிந்து நடத்திய அணிவகுப்பு பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. தேசப்பிதா மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த தினம் அக்டோபர் 2-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு தமிழக அரசின் அருங்காட்சியகத் துறை மற்றும் காந்தி உலக மையம் சார்பில் "மகாத்மாவைக் கொண்டாடுவோம்" என்ற சிறப்பு நிகழ்ச்சி எழும்பூர் அருங்காட்சியகத்தில் நடந்தது.

புகைப்படக் கண்காட்சி: இந்நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். காந்தி போல வேடமணிந்து 153 மாணவ, மாணவியர்கள் நடத்திய அணிவகுப்பு பார்வையாளர்களை பெரிதும் கவர்ந் தது. காந்தியோடு தொடர்புடைய மற்றும் அவரது நினைவைப் போற்றும் பொருட்கள் மற்றும் புகைப்படங்களின் கண்காட்சியும் இடம்பெற்றது.

பங்கேற்றோர்: இந்நிகழ்ச்சியில், வருமானவரித் துறை கூடுதல் ஆணையர் நந்தகுமார், நடிகர் ரமேஷ் கண்ணா, இயக்குனர் உதயன், உதவி இயக்குநர் காந்திமதி, தூர்தர்சன் முன்னாள் இயக்குநர் அனந்தராமன், காந்தி உலக மைய நிறுவனர் ராஜேஷ், எழுத்தாளர் சிகரம் சதிஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x