Published : 18 Aug 2022 06:32 AM
Last Updated : 18 Aug 2022 06:32 AM
திருச்சி: திருச்சியில் நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவில் புத்தகங்கள் வாங்குவதற்காக, பள்ளி மாணவர் களுக்கு தலா ரூ.100 வீதம் ரூ.11,100 வழங்கப்பட்டது.
திருச்சி தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தின அமுதப் பெருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. பள்ளியின் தலைமையாசிரியர் கே.எஸ்.ஜீவானந்தன் முன்னிலையில், லயன்ஸ் கிளப் ஆஃப் திருச்சி மிட் டவுன் தலைவர் ரத்னகுமார் தேசியக்கொடி ஏற்றினார். லயன்ஸ் கிளப் முன்னாள் ஆளுநர் செல்லப்பன், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியின்போது, திருச்சியில் செப்டம்பர் 16-ம் தேதி முதல்நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவில்,மாணவர்கள் புத்தகங்கள் வாங்குவதற் காக முதல் கட்டமாக 111 பேருக்கு தலா 100 வீதம் ரூ.11,100-ஐ ஓய்வுபெற்ற ஆசிரியர் சுருளி முருகன் வழங்கினார். மேலும், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மாணவர்களுக்கு குழு நடனம், யோகா, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில், பெற்றோர், முன்னாள் மாணவர்கள் உட்பட 200-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் சரண்யா, லில்லி, மீனா, உஷாராணி ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியை சகாயராணி நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT