Published : 29 Dec 2022 04:35 AM
Last Updated : 29 Dec 2022 04:35 AM
திண்டுக்கல்: ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து பெரியாரிய அமைப்புகள் சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் அருகே அமைந்துள்ள தனியார் கல்லூரியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியாரிய அமைப்பினர் சார்பில் தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் ரவணா தலைமையிலானோர் திண்டுக்கல் ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
மாவட்டச் செயலாளர் காஞ்சித்துரை, சமூக நீதிக் கழக நிறுவனத் தலைவர் சுரா.தங்கப்பாண்டியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT