Published : 27 Jun 2023 06:13 AM
Last Updated : 27 Jun 2023 06:13 AM
சென்னை: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஆசியகாட்டுக்கழுதை மகப்பேறின்போது பரிதாபமாக உயிரிழந்தது.
இதுகுறித்து பூங்கா இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 5 வயதான பெண் ஆசிய காட்டுக்கழுதை சினையாக இருந்தது. நேற்று முன்தினம் காலையில் இருந்து அந்தக் கழுதை பிரசவிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. ஆனால், பிரசவம் ஏற்படாததால், கழுதை வலியில் துடித்தது. இதையடுத்து அந்த பெண் கழுதைக்கு மருத்துவக் குழுவினர் உதவியுடன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, கழுதையின் வயிற்றில் இருந்த ஆண் கருவானது இறந்த நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. அதை பத்திரமாக வெளியே எடுத்தனர். இதனிடையே, கடினமான மகப்பேறு காரணமாக (டிஸ்டோசியா) தாய் கழுதையும் நரம்பு அதிர்ச்சியினால் பரிதாபமாக உயிரிழந்தது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT