Published : 17 May 2023 07:11 AM
Last Updated : 17 May 2023 07:11 AM
சென்னை: சென்னை, நெற்குன்றத்தைச் சேர்ந்த மகேஷ் தனது தாயார்ஆத்தியம்மாளுடன் ஒரே வீட்டில்வசித்து வந்தார். குடிப்பழக்கத்துக்கு அடிமையான மகேஷ், தனது தாயாரிடம் குடிப்பதற்குப் பணம் கேட்டுத் துன்புறுத்தி வந்துள்ளார்.
கடந்த 2020 நவ.26 அன்று குடிக்கப் பணம் கேட்டுள்ளார். கொடுக்க மறுத்த தாயாரை இரும்புக் கம்பியால் தாக்கி கொலைசெய்து, தடுக்க வந்த பக்கத்து வீட்டுக்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து கோயம்பேடு போலீஸார் வழக் குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை அல்லிக்குளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.ஹெச்.முகமது பாரூக், குற்றம் சாட்டப்பட்ட மகேஷுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT