Published : 27 Dec 2022 04:15 AM
Last Updated : 27 Dec 2022 04:15 AM
பொள்ளாச்சி: ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர்கள் சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறும்போது, ‘‘தற்போது தினமும் 5 லட்சம் முதல் 5.5 லட்சம் வரை இளநீர் வெட்டப்பட்டு, உத்தரப்பிரதேசம், பிஹார், ராஜஸ்தான், உதய்ப்பூர், குஜராத், மும்பை, ஆந்திராவுக்கு அனுப்பப்படுகிறது.
இந்த வாரம் குட்டை, நெட்டை, வீரிய ஒட்டு இளநீர் ஒன்றின் விலை கடந்த வாரத்தைப்போலவே ரூ.17 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு டன் இளநீரின் விலை ரூ.6,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் பெரும்பாலான இடங்களில் மழை, பனிப்பொழிவு குறையத் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். எனவே ஜனவரி முதல் மாதத்தில் இருந்து இளநீரின் விலை உயர வாய்ப்புள்ளது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT