Published : 07 Dec 2022 06:37 AM
Last Updated : 07 Dec 2022 06:37 AM

தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 குறைந்தது

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 குறைந்து ரூ.40,080-க்கு விற்பனையானது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.

இந்நிலையில், தங்கம் விலை நேற்று குறைந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.5,010- க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.280 குறைந்து ரூ.40,080-க்கு விற்கப்பட்டது. இதேபோல, 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.43,296-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.70.80 ஆகவும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.70,800 ஆகவும் இருந்தது.



தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x