Published : 12 Aug 2023 05:45 AM
Last Updated : 12 Aug 2023 05:45 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.

ரிஷபம்: முகப் பொலிவு கூடும். அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கவலைகள் நீங்கி குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமை அடைவீர்கள்.

மிதுனம்: வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேச வேண்டாம். அடுத்தவர்களின் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. கலை பொருட்கள் சேரும்.

கடகம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போவதால் நன்மை ஏற்படும். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும். நண்பர்கள், உறவினருடன் பகைமை நீங்கும். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் அதிகரிக்கும்.

சிம்மம்: அடுத்தவர் குழப்பம் நீங்கும் வகையில் தெளிவாகப் பேசி அனைவரையும் கவருவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு.

கன்னி: தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வெளிவட்டாரத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை கூடும். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்திப்பீர்கள்.

துலாம்: மனக்குழப்பங்கள் விலகும். வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம், சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.

விருச்சிகம்: அடுத்தவர்களின் வேலைகளையும் நீங்களே பார்க்கவேண்டி வரும். உதவி கேட்டு உறவினர், நண்பர்கள் தர்மசங்கடத்துக்கு ஆளாக்குவர். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும்.

தனுசு: வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.பணப்பற்றாக்குறை விலகும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். பழைய கடன்களில் ஒன்று தீர வழி கிடைக்கும்.

மகரம்: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

கும்பம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். திருமணம், சீமந்தம் என்று குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் உடல் நலம் சீராக இருக்கும். தடைகள் நீங்கும்.

மீனம்: துடிப்புடன் காணப்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் நெருக்கம் அதிகமாகும். விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். தாயாருடன் கருத்து மோதல் வரக்கூடும். எதிலும் அமைதி காக்கவும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x