எஸ்.கே.ரமேஷ்

விவசாய பூமி, தொழிற்சாலை நிறைந்த பகுதி, குட்டி ஜவுளி நகரம், வேலை வாய்ப்பளிக்கும் மையம், ஏற்றுமதி வாய்ப்பு என பல்வேறு முகங்கள் கொண்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூத்த செய்தியாளராக கடந்த 21 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். எனது எழுத்துப் பணி கடந்த 2004-ம் ஆண்டு கிருஷ்ண்கிரி மாவட்டத்தில் ‘தினபூமி’ நாளிதழின் செய்தியாளராக தொடங்கியது. அரசு திட்டங்கள், மக்கள் எதிர்பார்ப்பு, அடிப்படை பிரச்சினை குறித்து ஏராளமாக எழுதினேன். அதன்பின்பு, சன் நெட்வொர்க் நிறுவனத்தின் கீழ் தினகரன் நாளிதழ் இருந்தபோது, எனது எழுத்துப் பணி மேன்மை அடைந்தது. தற்போது ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் 12 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். கல்வி, விவசாயம், தொழில் வளர்ச்சி, அடிப்படை வசதிகள், வேலைவாய்ப்பு, பெண்கள் முன்னேற்றம், இளைஞர் திறன் மேம்பாடு, தொழிற்சங்கங்கள், மக்கள் எதிர்பார்ப்பு போன்ற துறைகளில் அதிக கவனம் செலுத்துகிறேன். விவசாயம், வேலை வழிகாட்டி, இளைஞர் நலன், வணிகம், பெண்கள் பகுதி முதலானவற்றில் தொடர்ந்து பங்களிக்கிறேன். எட்டுத் திசைகளிலும் எனது கவனத்தை செலுத்தி, பொதுநல கட்டுரைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எழுதுகிறேன். வாசிப்பு மற்றும் எழுதுவதில் ஆர்வம் அதிகம் இருந்ததால், எனது குடும்பத்தினரின் ஊக்குவிப்பில் பத்திரிக்கை உலகில் நன்கு வலம் வருகிறேன். அதோடு, விவசாயத்திலும் எனது நேரத்தை பயனுள்ளதாக கழிக்கிறேன். சினிமா பார்ப்பதிலும், நண்பர்களுடன் நாட்டு நடப்பு குறித்து விவாதிப்பதிலும் ஆர்வம் உண்டு. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு தேர்தல்களை சந்தித்துள்ளேன். அதன்மூலம் கிடைந்த அனுபவம் ஏராளம். அதையே மூலதனமாகக் கொண்டு, எதிர்காலத்திலும் சிறந்த எழுத்தாளராக வலம் வரவேண்டும் என்பது என் அவா. தமிழால் இணைந்து, புதிய இலக்கு நோக்கி எனது பயணம் தொடர்கிறது.
Connect:
எஸ்.கே.ரமேஷ்
Read More
Hindu Tamil Thisai
www.hindutamil.in