என்.சன்னாசி

சிவகங்கை மாவட்டம், கே.பெத்தனேந்தல் என்ற சிறு கிராமத்தில் நான் ஒரு முதல் தலைமுறை பட்டதாரி. கல்லூரி ஆசிரியராகும் கனவில் படித்தேன். நான் படித்த கல்லூரி விழாக்கள் குறித்து எழுதிய சில செய்திகள் நாளிதழ்களிலும், ‘இன்று ஒரு தகவல் ’ என்ற பகுதியை வெளியிட்ட நாளிதழ் ஒன்றில் எனது ஓரிரு கட்டுரைகளும் வெளிவந்ததால் ஆர்வம் மிகுதியால் இதழியல் துறையை தேர்ந்தெடுத்தேன். இதற்காக ‘நாளிதழ்களின் செய்தி போக்கு’ எனும் தலைப்பில் MPhil ஆய்வும் செய்தேன். 1999-ல் மதுரையில் ஒரு நாளிதழில் பணி தொடங்கினேன். ஓரிரு நாளிதழ்களை தொடர்ந்து உள்ளூர் தொலைக்காட்சியிலும் வேலை பார்த்தேன். பத்திரிகை துறையில் கற்றதைவிட, சமூக பிரச்சினைகள், அவலங்களை தெரிந்துகொண்டதே அதிகம். தற்போது, நமது ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் காவல், உயர் கல்வி துறை செய்திகளை கையாளும் முதுநிலை செய்தியாளராக உள்ளேன். காவல் துறை செய்தியாளர் என்பதில் என்ன கஷ்டம் என்றால், தினமும் காலை, இரவில் விபத்து, கொலை, உயிரிப்பு, கொள்ளை போன்ற தகவல் கேட்பது நமக்கு பழகினாலும், வீட்டிலுள்ளவர் நாம் பேசுதை கேட்டு மனம் வாடுவதும் உண்டு. அனைத்து தரப்பினரையும் நாடும் காவல் துறை பணி எப்போதும் பாரபட்சமின்றி இருக்கவேண்டும் என்ற செய்திகளை எழுதுவதில் ஆர்வம் காட்டுவேன். நாம் எழுதும் செய்தி தனிநபர் இன்றி பிறருக்கு விழிப்புணர்வு, மக்களுக்குத் தீர்வு கிடைக்கவேண்டும் என கருதுவேன். இத்துறையில் இருப்பதால் நம்மை நாடுவோருக்கு ஏதோ ஒரு வகையில் உதவிட முடிகிறதே என்பதில் மகிழ்ச்சியும் கூட.
Connect:
என்.சன்னாசி
Read More
Hindu Tamil Thisai
www.hindutamil.in