“எத்தனைத் தொகுதிகள் கேட்போம் என இப்போது சொல்ல முடியாது” - கமல்ஹாசன் எம்.பி

“எத்தனைத் தொகுதிகள் கேட்போம் என இப்போது சொல்ல முடியாது” - கமல்ஹாசன் எம்.பி
Updated on
1 min read

மதுரை: “திமுக கூட்டணி ஒற்றுமையை நோக்கி நகர்கிறது. அனைவரும் கூட்டணிக்கு வர வேண்டும்” என கமலஹாசன் எம்.பி கருத்து தெரிவித்தார்.

மதுரை காந்தி மியூசியத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், ‘காந்தியை மறவோம்’ என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்க மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் எம்.பி தனி விமான மூலம் மதுரை வந்தடைந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கவில்லை. அதில் எனக்கும் கடமை உள்ளது. இதை மனதில் வைத்து பேச்சுவார்த்தை நடைபெறும் என நம்பிக்கை உள்ளது.

எத்தனைத் தொகுதிகள் கேட்போம் என இப்போது சொல்ல முடியாது. எப்படியும் நாங்களே வெளியிடுவோம். முக்கியமான விஷயம், கூட்டணியில் ஒற்றுமையும், நோக்கமும்தான். அவை எங்களுக்குள் தெளிவாகவே உள்ளது. இதை நோக்கியே நகர்கிறோம்” என்று கூறினார்.

தொடர்ந்து திமுக கூட்டணிக்கு ஓபிஎஸ் வருவதாக கிடைக்கும் தகவல் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “கூட்டணிக்கு அனைவரும் வருக... தமிழகம் வெல்க” என்றார்.

“எத்தனைத் தொகுதிகள் கேட்போம் என இப்போது சொல்ல முடியாது” - கமல்ஹாசன் எம்.பி
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனியில் கனமழை வாய்ப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in