பிரதமர் தொடங்கி வைத்த 3-வது ரயிலையும் இயக்கிய லோகோ பைலட் தாமரைச்செல்வன்

உள்படம்: தாமரைச்செல்வன்

உள்படம்: தாமரைச்செல்வன்

Updated on
1 min read

மதுரை: தமிழகத்​தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த 3-வது புதிய எக்​ஸ்​பிரஸ் ரயிலை மதுரைக் கோட்ட மூத்த லோகோ பைலட் தாமரைச் செல்​வன் இயக்​கி​னார். திருச்​சி​யில் பல்​வேறு நலத் திட்​டங்​கள் தொடக்க விழா​வில் பிரதமர் மோடி நேற்று பங்​கேற்​றார்.

அப்​போது, நெல்​லை- மங்​களூரு, ராமேசுவரம் - மங்​களூரு (வா​ராந்​திர ரயில்), நாகர்​கோ​வில்- சாரளப்​பள்ளி அம்​ரித்​பாரத், கோவை- தன்​பாத் அம்​ரித்​பாரத் மற்​றும் மயி​லாடு​துறை- திரு​வாரூர்- காரைக்​குடிக்​கான பயணி​கள் ரயில் என 5 புதிய ரயில்​களை பிரதமர் காணொலி மூலம் தொடங்கி வைத்​தார்.

இதன்படி, ராமேசுவரம் - மங்களூரு எக்​ஸ்​பிரஸ் ரயிலை மதுரையைச் சேர்ந்த லோகோ பைலட் (ரயில் ஓட்​டுநர்) தாமரைச் செல்​வன் இயக்​கி​னார். இதன் சிறப்பு என்​னவென்​றால் மூன்றாவது முறையாக தமிழகத்​தில் பிரதமர் தொடங்கி வைத்த புதிய ரயிலை இயக்​கும் வாய்ப்பை அவர் பெற்​றுள்​ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி பிரதமர் தொடங்​கி​வைத்த மதுரை- சென்னை தேஜஸ் அதி​விரைவு ரயில், 2025 ஏப்​ரல் 6-ல் புதிய பாம்​பன் பாலத்​தில் முதல் ரயிலை பிரதமர் தொடங்கி வைத்​த​போது அந்த ரயிலை​யும் இவர்​தான் இயக்​கி​னார்.

இதன் தொடர்ச்​சி​யாக நேற்று திருச்சி விழா​வில் பிரதமர் தொடங்கி வைத்த ராமேசுவரம் - மங்​களூரு ரயிலையும் இவர் இயக்கி​னார். தாமரைச்​செல்​வன் கடந்த 1994-ம் ஆகஸ்ட்டில் தென் மத்​திய ரயில்வே பிரி​வான ஹூப்ளி கோட்​டத்தில் உதவி பைலட்​டாக பணி​யில் சேர்ந்தார்.

தற்​போது தெற்கு ரயில்​வே​யில் உள்​ளார். இவர் தனது 32 ஆண்டு பணிக் காலத்​தில் அயல் பணிக்கு செல்லாமல் தொடர்ந்து ரயில் ஓட்​டுந​ராகவே பணி​யாற்றி வருகிறார்.இன்று 60 வயதை நிறைவு செய்​கிறார்.

31-ல் ஓய்வு பெறுகிறார். 3 முறை புதிய ரயில்​ இயக்​கும் வாய்ப்​பைப் பெற்றவர் இவர் மட்டுமே.

<div class="paragraphs"><p>உள்படம்:&nbsp;தாமரைச்செல்வன்</p></div>
தூத்துக்குடி அருகே பிளஸ் 2 மாணவி கொலை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in