Last Updated : 13 Mar, 2016 12:17 PM

 

Published : 13 Mar 2016 12:17 PM
Last Updated : 13 Mar 2016 12:17 PM

அமெரிக்க ஏல நிறுவனத்தில் இருந்து இந்திய சிலைகள் மீட்பு: 1000 ஆண்டுகள் பழமையானவை

அமெரிக்காவின் கிறிஸ்டி ஏல நிறுவனத்தில் இருந்து 1,000 ஆண்டு பழமையான இரு சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.

சுமார் ரூ. 3 கோடி மதிப்புள்ள அந்த கற்சிலைகள் 8 மற்றும் 10-ம் நூற்றாண்டை சேர்ந்தவை என கூறப்படுகிறது. இந்தியாவின் ராஜஸ்தான் அல்லது மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து அந்த கற்சிலைகள் கடத்திச் செல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. அதில் ஒரு கற்சிலை ஜெயின மதத்தின் முதல் தீர்த்தங்கரரை உருவகப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை சுமார் ரூ.1 கோடி என்றும், மற்றொரு சிலை ரூ. 2 கோடி மதிப்பு பெறும் என கணக்கிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பிரபலமான கிறிஸ்டி ஏல நிறுவனத்தில் இவ்விரு சிலைகளும் வரும் 15-ம் தேதி நடக்கவுள்ள ஏலத்துக்காக வைக்கப்பட்டிருந்தன. இது தொடர்பான தகவல் கிடைத்ததும் அந்த சிலைகளை மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அதன் அடிப்படையில் இன்டர்போல் போலீஸாரும், அமெரிக்க குடியுரிமை மற்றும் சுங்க அமலாக்கத்துறையின் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பினரும் இணைந்து கிறிஸ்டி ஏல நிறுவனத்தில் இருந்து அந்த சிலைகளை மீட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x