Published : 14 Jul 2021 03:03 PM
Last Updated : 14 Jul 2021 03:03 PM

அமெரிக்காவில் 3 வாரங்களில் கரோனா தொற்று இரட்டிப்பு

கடந்த மூன்று வாரங்களாக அமெரிக்காவில் கரோனா தொற்று அதிகரித்துள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

''டெல்டா வைரஸ் காரணமாக அமெரிக்காவில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளது. கடந்த மூன்று வாரங்களாக கரோனா பாதிப்பு இரண்டு மடங்காக உள்ளது.

ஜூன் மாதம் 23-ம் தேதி 11,300 ஆக இருந்த கரோனா தொற்று எண்ணிக்கை தற்போது 23,600 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பலி எண்ணிக்கை தினசரி 200-ஐத் தாண்டுகிறது. நாட்டில் 55%க்கும் அதிகமான மக்கள் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றிருக்கிறார்கள்” என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

''டெல்டா வைரஸ் மிக மோசமான வைரஸ் என்பது தெளிவாகிறது. ஒருவரிடமிருந்து மற்றவருக்குத் தொற்று பரவுவதை டெல்டா வைரஸ் அதிகப்படுத்தியுள்ளது. டெல்டா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் அமெரிக்கா சிறப்பாகச் செயல்படுகிறது'' என்று அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகர் ஆண்டனி ஃபாஸி தெரிவித்தார்.

மேலும், அமெரிக்காவில் சில இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் வேகம் குறைந்துள்ளது. அதனை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

அமெரிக்காவில் இதுவரை 3.39 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x