Published : 06 May 2024 10:34 AM
Last Updated : 06 May 2024 10:34 AM

பிளஸ் 2 தேர்வு முடிவு: முக்கியப் பாடங்களில் முழு மதிப்பெண் பெற்றோரின் எண்ணிக்கை

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தமிழகத்தில் முக்கியப் பாடங்களில் 100% மதிப்பெண் பெற்ற மாணாக்கரின் எண்ணிக்கை தொடர்பான விவரமும் வெளியாகியுள்ளது.

அதன்படி தமிழ் மொழிப் பாடத்தில் 35 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் 7 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக கணினி அறிவியல் பாடத்தில் 6996 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக வணிகவியலில் 6142 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். கணிதப் பாடத்தில் 2587 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். இவ்வாறாக ஏதோ ஒரு பாடத்தில் 100 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை - 26,352 ஆக உள்ளது.

பாடவாரியாக முழு மதிப்பெண்:

1. தமிழ் 35
2. ஆங்கிலம், 7
3. இயற்பியல் 633
4 வேதியியல் 471
5. உயிரியல் 652
6. கணிதம் 2587
7. தாவரவியில் 90
8. விலங்கியல் 382
9. கணினி அறிவியல் 6996
10. வணிகவியல் 6142
11. கணக்குப் பதிவியல் 1647
12. பொருளியல் 3299
13. கணக்குப் பயன்பாடுகள் 2251
14. வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் 210

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 6) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. இத்தேர்வில், மொத்தம் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 96.44%, மாணவர்கள் 92.37% தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x