Published : 31 Jan 2018 11:03 AM
Last Updated : 31 Jan 2018 11:03 AM

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ட்ரம்ப் உரை: தவறாக அச்சிடப்பட்ட அழைப்பிதழ்

 

அமெரிக்கா நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் அதிபர் ட்ரம்ப் நேற்று உரையாற்றிய நிலையில் அதற்கான அழைப்பிதழ் தவறாக அச்சிடப்பட்டு இருந்ததால் நிகழ்ச்சி காலதாமதமாக தொடங்கியது.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் சேர்ந்த கூட்டுக்குழு கூட்டத்தில் அதிபர் ட்ரம்ப் நேற்று உரையாற்றினார். அதிபர் ட்ரம்ப்பின் கொள்கைகள், பிற இனத்தவர்களுக்கு எதிரான பேச்சு, அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியேறுவதற்கு கெடுபிடிகள் உள்ளிட்டவற்றை கண்டித்து, எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்.பி.க்கள் பலர், ட்ரம்ப் உரையாற்றும் நிகழ்ச்சியை புறக்கணித்தனர். ட்ரம்ப் உரைக்கு முன்னதாகவே, இதுபற்றி பல்வேறு விதமான விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருந்தன. திட்டமிட்டபடி அவர் நேற்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்காக தயாரிக்கப்பட்ட அழைப்பிதழ்களில் தவறாக அச்சிடப்பட்டு இருந்தது. எம்.பி.க்கள் மற்றும் விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட அழைப்பிதழ் மற்றும் அனுமதிச் சீட்டில் முதல் அதிகாரபூர்வ உரை என்ற வாசகம் ஆங்கிலத்தில், First official State of the Union address என இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் Union என்ற வார்த்தை Uniom என தவறாக இடம் பெற்றிருந்தது.

இதுகுறித்து மேல்சபை எம்.பி.யான மார்க்கோ ரூபியோ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். தவறாக வாசகம் பொருந்திய அந்த அனுமதி சீட்டை புகைப்படம் எடுத்தும் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த தகவல் வெளியானதும் பரபரப்பு ஏற்பட்டது. விவரம் மிக காலதாமதமாகவே தெரிய வந்தது. இதையடுத்து, தவறு திருத்தப்பட்டு புதிய அனுமதி சீட்டு எம்.பி.க்களுக்கு வழங்கப்பட்டது. இதனால் ட்ரம்ப உரை தொடங்குவதும் காலதாமதமானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x