Published : 02 Dec 2017 01:50 PM
Last Updated : 02 Dec 2017 01:50 PM

விமான பயணத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான ஃபேஸ்புக் நிறுவனர் மார்க்கின் சகோதரி

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க்கின் சகோதரி, விமான பயணத்தின் போது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளனதாக புகார் அளித்துள்ளார்.

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க்கின் சகோதரி ரேண்டி ஸக்கர்பெர்க் சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து மஸாட்லன் நருக்கு விமானத்தில் சென்றார்.

விமானத்தின் முதல் வகுப்பில் பயணம் செய்த அவருக்கு அருகில் அமர்ந்து ஆண் ஒருவர் பாலியல் ரீதியாக ஆபாசமான வார்த்தைகளை பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ரேண்டி அவரைக் கண்டித்துள்ளார். இதுகுறித்து அந்த விமான ஊழியர்களிடம் புகார் அளித்துள்ளார்.

ஆனால், மது அருந்தி இருப்பதால் அவர் இதுபோன்று பேசுவதாக, விமான நிலைய ஊழியர்கள் விளக்கம் அளித்துள்ளனர். மேலும் தேவையென்றால், விமானத்தின் பின்புறம் சென்று அமருமாறு ரேண்டியிடம் கூறியுள்ளனர். ஆனால், பாலியல் துன்புறுத்தல் செய்யும் அந்த மனிதரை வேறு இடத்தில் சென்று அமரச் செய்யாமல், தன்னை இடம் மாறுமாறு கூறுவது ஏன்? என கேள்வி எழுப்பினார். எனினும் விமான ஊழியர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து, அந்த விமான நிறுவன நிர்வாகிகளிடம் ரேண்டி புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

அதில் கூறியுள்ளதாவது:

‘‘எங்கள் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் பாதுகாப்புடன் பயணம் செய்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எங்கள் விமான பயணிகளின் பாதுகாப்பு மிக முக்கியம். இதில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை. பாலியல் ரீதியாக தவறான முறையில் யார் நடந்தாலும் சகித்துக் கொள்ள மாட்டோம். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ எனக் கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x