Published : 07 Nov 2022 06:02 AM
Last Updated : 07 Nov 2022 06:02 AM

நவ.07: இன்று என்ன? - குழந்தை கவிஞர் பிறந்தநாள்

கவிஞர், சிறார் எழுத்தாளர், இதழியலாளர். 2000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதியவர். புதுக்கோட்டை மாவட்டம், ராயவரத்தில் 1922-ல்நவம்பர் 7-ம் தேதி பிறந்தார் அழ. வள்ளியப்பா. படிப்பை தொடர முடியாமல் வாழ்வாதாரம் தேடி சென்னை வந்து சக்தி பத்திரிக்கையில் வேலைக்கு சேர்ந்தார். "ஆளுக்குப் பாதி" இவரது முதல் கதை. குழந்தை எழுத்தாளர்கள் பலரை திரட்டி 1950-ல் குழந்தை எழுத்தாளர்கள் சங்கத்தை நிறுவினார். இவரது ஈசாப் கதைப் பாடல்கள் தொகுப்பு பெரிய வீச்சடைந்தது. "வளர்ந்து வரும் குழந்தை இலக்கியம்" எனும் தலைப்பில் அவர் சென்னை பல்கலையில் கல்கி அறக்கட்டளை நிகழ்விலும், 5-ம் உலக தமிழாராய்ச்சி மாநாட்டிலும் பேசியது அவரது மிக முக்கியமான சொற்பொழிவுகளாகக் கருதப்படுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x