Published : 04 Jun 2021 03:13 AM
Last Updated : 04 Jun 2021 03:13 AM

எஸ்ஆர்எம் - ‘தி இந்து’ குழுமம் இணைந்து நடத்தும் எஸ்ஆர்எம் தொழிற்கல்வி வழிகாட்டி மெய்நிகர் மாநாடு: 12, 13-ம் அமர்வுகளில் இலவசமாக பங்கேற்க பதிவு செய்யலாம்

எஸ்ஆர்எம் அறிவியல், தொழில்நுட்ப மையம், ‘தி இந்து’ குழுமம்இணைந்து ‘எஸ்ஆர்எம் தொழிற்கல்வி வழிகாட்டி மெய்நிகர் மாநாடு2021’ நடத்தப்பட்டு வருகிறது. ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இந்நிகழ்ச்சியை இணைந்து வழங்குகிறது.

2020-களில் பணியிடங்களும், அவற்றில் அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம், சட்டம், மனிதநேயம், மருத்துவ சுகாதார அறிவியல், வேளாண் படிப்புகளின் பொருத்தமும் என்பது குறித்து இந்த மாநாட்டில் விளக்கப்படும்.

இம்மாநாட்டின் 12-வது அமர்வுநாளை (ஜூன் 5) காலை 11 மணிக்கு‘சட்டம் மற்றும் மனிதநேயத்துக்கு இடையேயான இணைப்புகள்’ என்ற தலைப்பில் நடைபெறுகிறது. இதன் இறுதியில் வல்லுநர்களிடம் சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

வல்லுநர் குழுவில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் வி.எம்.கண்ணன், எஸ்ஆர்எம்ஐஎஸ்டி இதழியல், மாஸ் கம்யூனிகேஷன் துறை துணை டீன் பேராசிரியர் ஸ்ரீதர்கிருஷ்ணஸ்வாமி, டீன் குருதத்அனந்தராமையா சில்குண்டா இடம்பெற்றுள்ளனர்.

ஆக்ஸோஹப் நிறுவனர், தலைமை செயல் அதிகாரி யசஷ்வினி ராஜேஸ்வர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த இலவச அமர்வில் பங்கேற்க http://bit.ly/SRMTHE12 இணையதளத்தை அணுகலாம். அல்லது க்யூஆர் கோட்டை ஸ்கேன் செய்யலாம்.

மாநாட்டின் 13-வது அமர்வு 6-ம் தேதி காலை 11 மணிக்கு ‘விவசாய படிப்புகளில் தொழில்நுட்பத்தின் பங்கு’ என்ற தலைப்பில் நடைபெறுகிறது. இறுதியில் வல்லுநர்களிடம் கேள்வி கேட்டு சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம்.

வல்லுநர் குழுவில் அக்நெக்ஸ்ட் டெக்னாலஜிஸ் தலைமை தொழில்நுட்ப அதிகாரி சுப்ரத் பாண்டா, எஸ்ஆர்எம்ஐஎஸ்டி விவசாய அறிவியல் கல்லூரி டீன் எம்.சின்னதுரை,உதவி பேராசிரியர் எம்.சஞ்சீவகாந்தி இடம்பெறுகின்றனர். ‘தி இந்து’ மூத்த உதவி ஆசிரியர் தீபாஹெச்.ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். இந்த அமர்வில் இலவசமாக பங்கேற்க http://bit.ly/SRMTHE13 இணைதளத்தை பார்க்கலாம். அல்லது க்யூஆர் கோட்டை ஸ்கேன் செய்யலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x