Published : 17 Oct 2019 10:17 AM
Last Updated : 17 Oct 2019 10:17 AM

உலோகத்தை புதிய வழியில்  பயன்படுத்தும் கண்காட்சி: பிரபல கலைஞர்கள் பங்கேற்பு

புதுடெல்லி

பர்னிஸ்/தர்னிஸ் எனப்படும் கலைவடிவங்களை அடிப்படையாக கொண்டு ‘பலேட் ஆர்ட் கேலரி’என்ற கண்காட்சி அரங்கம் டெல்லியில் சமீபத்தில் தொடங்கப்பட்டது.

இதில் உலோக கலைப்பொருட்கள், ஓவியங்கள், புகைப்படங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், உலோகத்தை புதிய வழியில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்ற கண்காட்சி நடந்து வருகிறது. இதில், பிரபல கலைஞர்கள் அதுல் டோண்டியா ஜி.ஆர்.இரன்னா, பார்தி கெர் உட்பட பலர் கலந்துகொண்டு, தங்களின் கலைப் பொருட்களை காட்சிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிகழ்ச்சியின் கண்காணிப் பாளர் கிரிஷ் சஹானே கூறுகையில், “தற்போதை காலத்தில் கலை பொருட்களை உருவாக்குவதில் உலோகம் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.

எனவே தற்போது நடக்கும் கண்காட்சியில் உலோகத்தை புதுமையாக எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்து காட்சிப்படுத்தி வருகிறோம்” என்றார்.

தற்போதைய கலைஞர்கள் தொழில்நுட்ப உதவியுடன், தங்கம்,வெள்ளி, வெண்கலம், இரும்பு, எஃகு போன்றவற்றை வைத்து மிக நுட்பமான கலைப் பொருட்களை செய்கிறார்கள். பிரபல கலைஞர் பூஜா இரன்னா சிறிய துத்தநாகம் பூசப்பட்ட எஃகு ஊசிகளை வைத்து பெரிய கட்டிடம் ஒன்று செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கண்காட்சியானது அக்டோபர் 30-ம் தேதி வரை நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x