

கொடைக்கானல்: கொடைக்கானலில் மரத்தக்காளி சீசன் என்பதால் அதிகளவில் விற்பனைக்கு வரத் தொடங்கி உள்ளது. ஒரு கிலோ ரூ.200-க்கு விற்பனையாகிறது.
கொடைக்கானலில் தாண்டிக் குடி, சிறுமலை மலைப் பகுதிகளில் விவசாயிகள் குறைந்த அளவில் மரத்தக்காளியை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த வகை தக்காளி மரத்தில் விளையக் கூடியது. ஒரே மரத்தில் 10 கிலோ முதல் 15 கிலோ வரை விளையும். பிளம்ஸ் பழம் போன்று தோற்றம் இருந்தாலும் தக்காளியின் சுவை அப்படியே இருக்கும்.
அதிக மருத்துவக் குணம் வாய்ந்த மரத்தக்காளியை குழம்பு வகைகளிலும், சட்னியிலும் மலைப்பகுதி மக்கள் பயன்படுத்து கின்றனர். தற்போது மரத்தக்காளி சீசன் என்பதால் கொடைக்கானல், தாண்டிக்குடி பகுதியில் அதி களவில் விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ளது. ஒரு கிலோ மரத்தக்காளி ரூ.200-க்கும், ஒரு தக்காளி ரூ.10-க்கும் விற் பனையாகிறது.
தற்போது கொடைக்கானலில் 2-வது சீசனை அனுபவிக்க வரும் சுற்றுலா பய ணிகள் அதிகம் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். கொடைக்கானல் வியாபாரி முருகேசன் கூறுகையில், மரத்தக் காளி என்று ஒன்று இருக்கிறதா என சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர் என்றார்.
இப்பழம் குறித்து காந்தி கிராம பல்கலைக்கழக ஆய்வு மாணவர் ஒருவர் கூறுகையில், மரத்தக்காளி (டமரில்லோ) தக் காளி குடும்பத்தைச் சேர்ந்த சிறு மரப்பயிர். பெரு நாட்டின் மலைக்கிராமங்களில் தோன்றி நியூசிலாந்து, பிரேசில், இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் பயிரிடப்படுகிறது.
இந்தியாவில் மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, அசாம், நாகலாந்து, இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விளைவிக்கப்படுகிறது. மரத்தக்காளி 15 நாட்கள் வரை கெடுவதோ, சுருங்குவதோ இல்லை. புரோட்டீன், கார்போ ஹைட்ரேட், மக்னீசியம், கால் சியம், பொட்டாசியம், நார்ச்சத்து உள்ளிட்டவை அடங்கியது. சாதாரண தக்காளியில் இருக்கும் எல்லா சத்துகளும் மரத்தக்காளியில் உள்ளன.
ஒரு மரத்தில் இருந்து 20 கிலோ வரை கிடைக் கும். ஆண்டு முழுவதும் காய்ப்பு இருக்கும் என்றார். தோட்டக்கலைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தக்காளியைப் போன்று இதை அப்படியே பயன்படுத்த முடியாது. தோலைச் சுற்றி கசப்பு தன்மை இருக்கும். அதனால் தோலை நீக்கிவிட்டு பயன்படுத்தலாம். மலைப்பிரதேசங்களில் மட்டும் வளரும், சமவெளி பகுதிகளில் பயிரிட முடியாது என்றார்.