Published : 06 Nov 2020 03:18 AM
Last Updated : 06 Nov 2020 03:18 AM

கள்ளப்புலியூர் ஊராட்சி மன்ற தலைவர் கைது;கண்டித்து 3 இடங்களில் உறவினர்கள், ஆதரவாளர்கள் மறியல்

கும்பகோணம் அருகே மனஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பெரியவன் என்கிற முருகன்(39). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் கும்பகோணம் பகுதி காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.

இதற்கிடையே, சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் கள்ளப்புலியூர் ஊராட்சி மன்றத் தலைவராக முருகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், நேற்று இரவு திடீரென காவல் துறையினரால் முருகன் கைது செய்யப்பட்டார். கைதுக்கான காரணத்தை தெரிவிக்க காவல் துறையினர் மறுத்துவிட்டனர்.

இதையடுத்து, முருகன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, அவரது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கும்பகோணம் புறவழிச்சாலையில் 3 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட் டனர். இதனால், புறவழிச்சாலை பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களுடன் கும்பகோணம் கோட்டாட்சியர் விஜயன், தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சமாதானமடையாத முருகனின் உறவினர்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். கட்டப்பஞ்சாயத்து, மிரட்டல் போன்ற காரணங்களால் காவல் துறைக்கு வந்த புகாரின் அடிப்படையில், முருகன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x