Published : 16 Dec 2020 03:15 AM
Last Updated : 16 Dec 2020 03:15 AM

பந்தலூரில் தந்தை, மகனை மிதித்துக்கொன்ற யானையை பிடிக்க 3 கும்கிகளுடன் களமிறங்கிய வனத் துறை

பந்தலூரில் தந்தை மற்றும் மகனை கொன்ற யானையைப் பிடிக்க 3 கும்கிகளுடன், வனத் துறையினர் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் 8 மற்றும் 10-ம்தேதிகளில் மணி, நாகமுத்து ஆகியோர் யானை தாக்கியதில் உயிரிழந்தனர். இந்நிலையில் பந்தலூர் கொளப்பள்ளி டான்டீ பகுதியைச் சேர்ந்த கூடலூர் ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலரான (தி.மு.க) ஆனந்தராஜ், அவர் மகன் பிரசாந்த் ஆகியோரை கடந்த13-ம் தேதி காட்டு யானை மிதித்துக்கொன்றது. இதனால் ஆத்திரம டைந்த பொதுமக்கள், இருவரது உடல்களையும் வாங்க மறுத்து, கடைகளை அடைத்து, 10 மணி நேரம் போராட்டம் நடத்தினர்.

கூடுதல் தலைமை வனப்பாதுகா வலர் அன்வர்தீன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு, உடனடியாக தலாரூ.4 லட்சம் வழங்கப்படும், ரூ.25லட்சம் வழங்க அரசிடம் கோரிக்கைவைக்கப்படும், காட்டு யானை உடனடியாக பிடிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதால், 10 மணி நேரமாக நடைபெற்ற மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அன்வர்தீன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘மக்களைத் தாக்கிய காட்டு யானையை, கொம்பன் மற்றும் சங்கர் என்ற பெயரில் மக்கள் அழைக்கின்றனர்.

இந்த யானை, காபிக் காடு பகுதியில் உள்ளது. ‘ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்’ என யானையை பிடிக்கும் பணிக்கு பெயரிட்டு மூன்று கால்நடை மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதுமலையிலிருந்து விஜய், வசீம் மற்றும் டாப்சிலிப்பில் இருந்து கலீம் ஆகிய மூன்று கும்கிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. யானையை விரைவில் பிடிப்போம்’’ என்றார்.

கும்கிகள், டிரோன் கேமராக்கள் உதவியுடன், யானையை தேடும் பணியில் வனத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x