Published : 19 Nov 2020 03:14 AM
Last Updated : 19 Nov 2020 03:14 AM

வரவர ராவுக்கு மும்பை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மகாராஷ்டிர அரசு சம்மதம்

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம், பீமா கோரேகானில் கடந்த 2018, ஜனவரி 1-ல் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக கவிஞரும் சமூக செயற்பாட்டாளருமான வரவர ராவ், அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார். சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர். நவி மும்பை, தலோஜா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள அவரை மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்க கோரி அவரது மனைவி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.ஷிண்டே, மாதவ் ஜாம்தார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் வரவர ராவுக்கு மகாராஷ்டிர அரசு செலவில் நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டனர். “மருத்துவமனை விதிகளின்படி வரவர ராவை அவரது குடும்பத்தினர் சந்திக்கலாம். நீதிமன்றத்துக்கு தெரிவிக்காமல் அவரை டிஸ்சார்ஜ் செய்யக் கூடாது” என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x