Last Updated : 18 May, 2023 06:10 PM

 

Published : 18 May 2023 06:10 PM
Last Updated : 18 May 2023 06:10 PM

சின்னசேலம் - அந்தோணியார் ஆலய திருவிழாவுக்காக மேல்நாரியப்பனூர் ரயில் நிலையத்தில் நிற்கும் விரைவு ரயில்கள்

சேலம்: அந்தோணியார் ஆலயத் திருவிழாவையொட்டி மேல்நாரியப்பனூர் ரயில் நிலையத்தில் சேலம் - சென்னை எழும்பூர் விரைவு ரயில் மற்றும் சென்னை எழும்பூர் - சேலம் விரைவு ரயில் ஒரு நிமிடம் நின்று செல்லும் என சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 'கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள மேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் ஆலயத்தின் 117- வது ஆண்டு திருவிழா நடைபெற உள்ளது, இதையொட்டி சில ரயில்கள் மேல்நாரியப்பனூர் ரயில் நிலையத்தில் ஜூன் 11ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை ஒரு நிமிடம் நின்று செல்லும், அதன்படி, புதுச்சேரி - யஷ்வந்பூர் வாராந்திர விரைவு ரயில் (வண்டி எண் 16574) புதுச்சேரியில் இருந்து ஜூன் 10ம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, மேல்நாரியப்பனூர் ரயில் நிலையத்துக்கு நள்ளிரவு 1.35 மணிக்கு வந்தடையும், இங்கிருந்து நள்ளிரவு 1.36 மணிக்கு புறப்படும்.

சென்னை எழும்பூர் - சேலம் விரைவு ரயில் (வண்டி எண் 22153) ஜூன் 10ம் தேதி மற்றும் 13ம் தேதி சென்னை எழும்பூர் ரயில் இணையத்தில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.19 மணிக்கு மேல்நாரியப்பனூர் ரயில் நிலையத்திற்கு வந்தடையும், இங்கிருந்து 4.20 மணிக்கு புறப்படும். இதேபோல, மறு மார்க்கத்தில் சேலம் - சென்னை எழும்பூர் விரைவு ரயில் (வண்டி எண் 22154) ஜூன் 11ம் தேதி மற்றும் 14ம் தேதி சேலத்தில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு மேல்நாரியப்பனூருக்கு இரவு 10.45 மணிக்கு சென்றடையும், இங்கிருந்து 10.46 மணிக்கு புறப்பட்டு செல்லும்' என்று சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x