Published : 12 May 2023 06:19 AM
Last Updated : 12 May 2023 06:19 AM

6 பேருக்கு அதிகபட்சமாக ரூ.53 லட்சம் ஊதியத்துடன் வேலை: சத்தியபாமா நிகர்நிலை பல்கலையில் படித்த 91.18% பேருக்கு பணி நியமன ஆணை

சென்னை: சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது.

நிறுவனத்தின் வேந்தர் மரியஜீனா ஜான்சன், தலைவர் மரியஜான்சன், துணைத் தலைவர்கள் அருள் செல்வன், மரிய பெர்னதெத் தமிழரசி, மரிய கேத்ரின் ஜெயப்ரியா ஆகியோர் விழாவுக்குத் தலைமையேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

வேலைவாய்ப்புக்கு பதிவு செய்த மாணவர்களில் 91.18 சதவீதம் பேர், பல்வேறு துறைகளில் உயர்ந்த ஊதியத்துடன் பணியமர்த்தப்பட உள்ளனர். இதுவரை மொத்தமாக 2,823 பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

2023-ம் ஆண்டில் இதுவரை300-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் உருவாக்கம், தளவாடங்கள், ஆலோசனை வழங்கல், நிதி மேலாண்மை, செயலாக்கம், விற்பனை மற்றும் விளம்பரப்படுத்துதல் போன்ற பல்வேறு பிரிவுகளில் பணி நியமனங்களை வழங்கியுள்ளன.

இந்த வேலை வாய்ப்பில் அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.53 லட்சம்ஊதியத்தில் 6 பேர் தேர்வாகிஉள்ளனர், அதேபோல் ஆண்டுக்கு ரூ.27 லட்சம் ஊதியத்தில் 14 பேரும், ரூ.10 லட்சத்துக்கு மேல்ஆண்டு வருமானமாக 120 பேரும்தேர்வாகியுள்ளனர். குறைந்தபட்சமாக ஆண்டுக்கு 5.2 லட்சம் ஊதியத்தில் தேர்வாகியுள்ளனர்.

சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் சுமார் 200 மாணவர்கள் பல்வேறு வெளிநாடுகளில் மேற்படிப்பைத் தொடங்க ஏற்பாடு செய்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x