Published : 29 Dec 2022 04:40 AM
Last Updated : 29 Dec 2022 04:40 AM
சென்னை: வடபழனி - கோயம்பேடு 100 அடி சாலையில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்புள்ள இடம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டது.
தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில் முக்கியமான சாலைகளில் மழைநீர் வடிகால் கட்டும்பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் வடபழனி நூறடி சாலையிலும் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடங்களில் மழைநீர் வடிகால்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வடபழனி - கோயம்பேடு இடையில் பெரியார் பாதை பகுதியில், மழைநீர் வடிகால் கட்டுவதற்கான நில அளவீடு செய்தபோது, அங்கிருந்த 11 கடைகள் அமைந்திருந்த இடம் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமானது என்பது கண்டறியப்பட்டது.
ஆக்கிரமிப்பில் இருந்த அந்த இடத்தின் மதிப்பு ரூ.5 கோடியாகும். இதில், தேநீர் கடை, வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் விற்பனையகம் உள்ளிட்ட கடைகள்கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளது. இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அந்த கடைகளை காலிசெய்யும்படி நோட்டீஸ் அனுப்பினர்.
கடைகள்காலி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் பொக்லைன் இயந்திரம் மூலம் கடை கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. இதையடுத்து இப்பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT